• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள் இந்தியா

கலாம்  சலாம் – மெய்நிகர் அஞ்சலி

KALAM SALAAM - VIRTUAL TRIBUTE TO THE PEOPLE'S PRESIDENT

by Tamil2daynews
July 26, 2020
in இந்தியா, செய்திகள்
0
கலாம்  சலாம் – மெய்நிகர் அஞ்சலி
0
SHARES
175
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர், அணு விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களுடனான நினைவுகளை உலகநாயகன் பத்ம பூஷன் கமல் ஹாசன் அவர்கள் மெய்நிகரி மூலம் பகிர்ந்துகொண்டு அஞ்சலி செலுத்த இருக்கிறார்.
மக்களின் ஜனாதிபதி திரு.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் மறைந்த 5-ம் ஆண்டு தினத்தில் டிஜிட்டல் ஊடகம் மூலம் மெய்நிகர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வை ரெயின்ட்ராப்ஸ் ஏற்பாடு செய்துள்ளது. ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். ரெயின்ட்ராப்ஸ் அமைப்பானது டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சர்வதேச அமைப்பு மற்றும் ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் அவர்களின் இல்லத்தினருடன்  இணைந்து நம் நாட்டின் 11வது ஜனாதிபதியாக பதவி வகித்த திரு. ஏபி.ஜே அப்துல் கலாம் அவர்களின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜீலை 27ந்தேதி மாலை 7 மணிக்கு “கலாம் சலாம்” என்ற நிகழ்ச்சியின் வாயிலாக மெய்நிகர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்துள்ளது. ரெயின்ட்ராப்ஸ் மற்றும் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் அமைப்பின் சமூக வலைதள பக்கங்கள், யூடியூப் சேனல், மற்றும் டோக்கியோ தமிழ் டிவி, விஜிபி உலக தமிழ் சங்கம்  சமூக வலைதள  பக்கங்களில்  கலாம் சலாம் நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பாக உள்ளது.
பல்வேறு தலைமுறையினர் டிஜிட்டல் ஊடகம் மூலம் இணையும் நிகழ்வின்  மூலம் நம் அனைவருக்குள்ளும் திரு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். இந்தியாவின்  மிசைல் மேன் என்று போற்றப்படும் அவரது வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அரிச்சுவடுகள் ஆயிரம் என்பது முற்றிலும் உண்மை. கொரோனா தாக்கம் அதிகமிருக்கும் இந்த கால கட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிட்டது. அந்த வகையில், காலம் சென்ற டாக்டர் அப்துல் மீது இன்றளவும் பற்றுதலும், பேரன்பும் கொண்ட அனைத்து நல் உள்ளங்களும் டிஜிட்டல் ஊடகம் வாயிலாக அவருக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  உலக நாயகன் திரு கமல்ஹாசன் கலந்துக்கொண்டு, அப்துல் கலாம் அவர்களுடனான தன் நினைவுகளை பகிர்ந்துகொண்டு அஞ்சலி செலுத்த இருக்கிறார்.
இந்நிகழ்ச்சி குறித்து ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நிறுவனர் திரு.அரவிந்த் ஜெயபால் கூறுகையில், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட உலகெங்கும் உள்ள பல்வேறு சாதனையாளர்கள் கலாம் சலாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மெய்நிகரி வாயிலாக அஞ்சலி செலுத்த உள்ளனர். அப்துல் கலாம் நம் வாழ்வின் ஒரு அங்கமாக மறைந்தும் இருக்கிறார் என்பதை சாதனையாளர்கள் பலரும் இந்த உலகிற்கு வலுவாக எடுத்துரைக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமையவுள்ளது. என்னுடன் இணைந்து டாக்டர் அப்துல் கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் அமைப்பின் நிர்வாகிகள் ஷேக் தாவூத், ஷேக் சலீம் ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் இல்லத்திலிருந்து இந்நிகழ்வை தொகுத்து வழங்க உள்ளனர் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Previous Post

விஜய் ஆன்டனியின் ‘பிச்சைக்காரன் 2’!

Next Post

தனக்கே உரிய பாணியில் பாடலுக்கு கிக்கு கொடுத்த பாடகி வைக்கம் விஜய லட்சுமி

Next Post
தனக்கே உரிய பாணியில் பாடலுக்கு கிக்கு கொடுத்த பாடகி வைக்கம் விஜய லட்சுமி

தனக்கே உரிய பாணியில் பாடலுக்கு கிக்கு கொடுத்த பாடகி வைக்கம் விஜய லட்சுமி

Popular News

  • உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ‘ஓம் சிவம்’! – மூன்று மொழிகளில் வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • மீண்டும் வரும் அர்னால்டின் Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) !

    0 shares
    Share 0 Tweet 0
  • கிரிக்கெட் வீரராக இந்திய அணியில் விளையாடுவது கனவாக இருந்தது.

    0 shares
    Share 0 Tweet 0
  • “தேவராட்டம்” மே 1   முதல் !! 

    0 shares
    Share 0 Tweet 0
  • வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரின் வழி நடக்கும் இசை அமைப்பாளர் சி. சத்யா இசையமைத்து பாடியுள்ள அன்பை போதிக்கும் வள்ளலாரின் ‘மனு முறை கண்ட வாசகம்’ பாடல்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பாராட்டிய ஃப்ளாக் திரைப்படம்

January 27, 2026

இந்திய சினிமாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் !! மம்மூட்டி – மோகன்லால் – மகேஷ் நாராயணன் இணையும் “பேட்ரியாட்” ( “Patriot” ) திரைப்படம்

January 27, 2026

“ROOT – Running Out of Time” திரைப்படத்தில் அபர்ஷக்தி குரானாவின் அட்டகாசமான லுக்கை இயக்குநர் A.R. முருகதாஸ் வெளியிட்டார்

January 27, 2026

தயாரிப்பாளர் ராஜு ஷெரேகர் வழங்கும் ‘VOWELS – An Atlas of Love’ திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது!

January 27, 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் & L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி ‘ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

January 27, 2026

நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில், ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ரணபலி’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு! பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்தப் படம் செப்டம்பர் 11 அன்று வெளியாகிறது!

January 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.