• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் 101வது படம்: ஆதிராஜன் தயாரித்து இயக்கும் “மாஸ்க்” !

by Tamil2daynews
August 21, 2020
in சினிமா செய்திகள்
0
ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் 101வது படம்: ஆதிராஜன் தயாரித்து இயக்கும் “மாஸ்க்” !
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழ்த் திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமான “சிலந்தி” வெற்றிப் படத்தை இயக்கிய ஆதிராஜன், ரணதந்ரா(கன்னடம்),  அருவா சண்ட படங்களைத் தொடர்ந்து  கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் நான்காவது படம் “மாஸ்க்”. நோயாளிகளை பணம் காய்க்கும் மரமாகவே பார்க்கும் சில மனசாட்சியற்ற மருத்துவர்களால் ஏற்படும் விபரீத நிகழ்வுகளும் அதனால் உருவாகும் பாதிப்புகளையும், எதிர்விளைவுகளையும் பரபரப்பாக சொல்லும் கதைக்கு, நொடிக்கு நொடி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய நாகரீக சமுதாயத்தை சிந்திக்கத் தூண்டும் வகையில் அழுத்தமான கருத்துக்களையும் ஆவேசமாகப் பேசும் அதிரடி த்ரில்லர் படமாக உருவாகிறது “மாஸ்க்”.
கதாநாயகன் கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார் விஜய்பாலாஜி. முக்கிய வேடங்களில் அருள்தாஸ், சம்பத்ராம், சேரன் ராஜ், ரஞ்சன், திரைப்பட தயாரிப்பாளர்கள் பி.எல்.தேனப்பன், டி. சிவா, ‘பெப்சி’ சிவா, வனராஜா, “மரகத நாணயம்” வீரா, பாரதி, அஜய் .எஸ் ஆகியோர்
 நடிக்கின்றனர். காமெடியில் அதகளம் பண்ணும் பொறுப்பை இமான் அண்ணாச்சி, மதுமிதா, ‘விஜய் டிவி’ சரத் கூட்டணி ஏற்றிருக்கிறது.
இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த்தேவா இசையமைக்கிறார். கே.ராஜன் தயாரித்த “டபுள்ஸ்”படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஸ்ரீகாந்த் தேவா, விஜய்யின் சிவகாசி, அஜீத்தின் ஆழ்வார், விஜயகாந்தின் அரசாங்கம், சரத்குமாரின் ஏய், சிம்புவின் சாணக்யா ஜெயம்ரவியின் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி உட்பட 100 படங்களுக்கு இசையமைத்து முடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 101வது படமாக “மாஸ்க்” படத்திற்கு இசையமைக்கிறார்.
 ஏராளமான விளம்பர படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் எஸ். சக்திவேல் “மாஸ்க்”க்கு பல டிஜிட்டல் கேமராக்களால் ஒளியூட்டுகிறார். சேரனின் ‘ராஜாவுக்கு செக்’,  குற்றம் கடிதல் உட்பட பல படங்களுக்கு படத்தொகுப்பை கையாண்ட பிரேம்குமார் இந்தப் படத்தின் எடிட்டிங்கை கவனிக்கிறார். 400 படங்களுக்கு நடனகாட்சிகளை வடிவமைத்த தினா இப்படத்திற்கும் நடனம் அமைக்கிறார். சினேகன், ஆதிராஜன்  பாடல்களை எழுதுகின்றனர். சவுண்ட் எஃபெக்ட்ஸ்: சிவகுமார். மக்கள் தொடர்பு: ஏ.ஜான், டிசைன்ஸ்: சிந்துகிராபிக்ஸ் பவன்.
இந்த படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தனது கிரீன் மேஜிக் கிரியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆதிராஜன் தயாரிக்கிறார். படப்பிடிப்பு சென்னை, வேளாங்கண்ணி, பாண்டிச்சேரி, கோவா ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
Previous Post

சினிமா பத்திரிகையாளர்களுக்கு கபசுர குடிநீர் ஆர்.வி. உதயகுமார் வழங்கினார் !

Next Post

இந்திய சினிமாவின் அரிதான நடிகைகளில் ஒருவர் சலோனி லுத்ரா.

Next Post
இந்திய சினிமாவின் அரிதான நடிகைகளில் ஒருவர் சலோனி லுத்ரா.

இந்திய சினிமாவின் அரிதான நடிகைகளில் ஒருவர் சலோனி லுத்ரா.

Popular News

  • அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.