• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நண்பர் எஸ்.பி.பி.நலமுடன் திரும்பி வருவார்: எடிட்டர் மோகன்

by Tamil2daynews
August 21, 2020
in சினிமா செய்திகள்
0
நண்பர் எஸ்.பி.பி.நலமுடன் திரும்பி வருவார்: எடிட்டர் மோகன்
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

எஸ். பி .பி யின் உடல் நலம் குறித்து பிரபல தயாரிப்பாளரும், டைரக்டர் மோகன்ராஜா, நடிகர் ஜெயம் ரவி அப்பாவுமான எடிட்டர் மோகன் கூறியுள்ளதாவது,

‘எஸ் .பி .பாலசுப்ரமணியமும் நானும் நீண்ட நாளைய நண்பர்கள்.அவருடைய இந்த நிலை என்னை மிகவும் வருந்தச் செய்துள்ளது.அவருக்கும் எங்களுக்குமான உறவு 1975 முதல் இன்றுவரை நிலைத்திருக்கிறது.எங்களது நட்பு குடும்ப உறவாக வளர்ந்திருக்கிறது.

என்னுடைய எல்லா மொழி மாற்றுப் படங்களுக்கும் என்னுடைய நேர்முகப் படங்களுக்கும் அவர் பாடல்கள் பாடியிருக்கிறார்.அவர் பாடல்கள் இல்லாத படங்களே கிடையாது.என்னுடைய மொழிமாற்றுப் படங்களுக்கு நாயகனுக்கு அவர்தான் வசனங்கள் பேசுவார் .எல்லா படங்களும் வெற்றி அடைந்துள்ளன. அதோடு என்னுடைய படங்களின் பூஜைகளை அவருடைய கோதண்டபாணி தியேட்டரில்தான் வைத்துக் கொள்வேன். அதில் எனக்கு ஒரு ஆனந்தம். நிச்சயமாக எனக்கு வெற்றி கிடைக்கும்.

 

 


இதுவரையில் அப்படி எல்லாப் படங்களும் எனக்கு வெற்றிபெற்றுள்ளன. அதோடு அவருடைய டெக்னீசியன்கள், அவருடன் வேலை செய்பவர்கள் அனைவரும் எனக்கு மிகவும் நெருங்கியவர்கள். இன்று அதையெல்லாம் நினைக்கும் பொழுது மனம் மிகுந்த வேதனை அடைகிறது .அதோடு என்னுடைய மகன் ஜெயம் ரவியை வைத்து அவர் ‘ மழை ‘என்ற படத்தைத் தயாரித்தார். அந்தப் படமும் வெற்றி பெற்றது.

இப்படி எங்களுக்குள் உறவுகள் நீண்டு கொண்டே போகிறது. இன்றும் நான் ஒவ்வொரு நாளும் அவருடைய மகனான சரணிடம் அவருடைய நிலையை அறிந்து கொண்டுதான் இருக்கிறேன். என் மனம் மிகவும் வருத்தத்தில் உள்ளது. நிச்சயமாக எனது நண்பர் எஸ். பி. பாலசுப்ரமணியம்  மீண்டும் வந்து நலமாக வந்து எங்களுடன் கைகோர்த்து வேலை செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது .அந்த நம்பிக்கையைக் கடவுள் கொடுப்பார் என்று நம்புகிறேன். நிச்சயமாக நம்புகிறேன்.’
இவ்வாறு எடிட்டர் மோகன் கூறியுள்ளார்.

Previous Post

டிரெண்டிங்கில் வெற்றியின் “மெமரிஸ்” பர்ஸ்ட் லுக்! 

Next Post

நடிகராக அறிமுகமாகும் பிரபல இயக்குநர்..!! முதல் படத்திலேயே கீர்த்தி சுரேஷுடன் கூட்டணி..!!!

Next Post
நடிகராக அறிமுகமாகும் பிரபல இயக்குநர்..!! முதல் படத்திலேயே கீர்த்தி சுரேஷுடன் கூட்டணி..!!!

நடிகராக அறிமுகமாகும் பிரபல இயக்குநர்..!! முதல் படத்திலேயே கீர்த்தி சுரேஷுடன் கூட்டணி..!!!

Popular News

  • முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.டி. நாயுடு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது!

May 24, 2026

நடிகர் மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, ஜியோஹாட்ஸ்டார் ‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ திரைப்பட விழாவில் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஸ்ட்ரீம் செய்து கொண்டாடுகிறது!

May 24, 2026

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஒய் ஜீ எம்-ன் ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்

May 24, 2026

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

May 24, 2026

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

May 24, 2026

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

May 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.