• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டிக்கிலோனா’வில் இளையராஜாவின் ஹிட் பாடல்

by Tamil2daynews
August 24, 2020
in சினிமா செய்திகள்
0
டிக்கிலோனா’வில் இளையராஜாவின் ஹிட் பாடல்
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பாடலை ரசிப்பதா, காட்சியமைப்பை ரசிப்பதா என ஒரு சில பாடல்கள் நம்மை திண்டாட வைக்கும். ஏனென்றால் இசைக்காக ஒரு முறை, பாடல் வரிகளுக்காக ஒரு முறை, காட்சியமைப்புகளுக்காக ஒரு முறை என மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும். அந்த வரிசையில் மிக முக்கியமான பாடல் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம்பெற்ற ‘கைவச்சாலும் வைக்காம’ என்ற பாடல்.

 

சீங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மைக்கேல் மதன காமராஜன்’. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வைச்சாலும் கைக்காம’ என்ற பாடல் மிகவும் பிரபலம். இசைஞானி இளையராஜாவின் துள்ளல் கொள்ளும் இசையால் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. அந்தப் பாடலில் கமல், குஷ்பு, ஊர்வசி, நாகேஷ், சந்தான பாரதி உள்ளிட்ட பலருக்கும் இடையே நடக்கும் காமெடி கலாட்டா பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. இப்போதும் அந்தப் பாடல் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பாடலை மார்டனைஸ் செய்திருக்கிறது ‘டிக்கிலோனா’ படக்குழு. தற்கால இசையைச் சேர்த்து, இப்போதுள்ள இளைஞர்களும் கொண்டாடும் வகையில் செய்திருப்பதே மார்டனைஸ் என்பதன் பொருள்.

இதற்கான உரிமையை இசைஞானி இளையராஜாவிடமிருந்து வாங்கி, ‘டிக்கிலோனா’ படத்துக்காக மார்டனைஸ் செய்திருக்கிறார் யுவன். ஆகையால், அதே போன்றதொரு காமெடி கலட்டாவை ‘டிக்கிலோனா’ படத்திலும் இடம்பெறவுள்ளது என்பதை உறுதியாக நம்பலாம். இதில் ஒரு சிறுபகுதியை மட்டும் ‘டிக்கிலோனா’ ட்ரெய்லரில் காட்டியிருந்தது படக்குழு. படத்தில் அந்தப் பாடலில் உள்ள காமெடி கலாட்டா கண்டிப்பாக ரசிக்க வைக்கும்.

அதே போல் ட்ரெய்லரும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆகஸ்ட் 21-ம் தேதி மாலை வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் யூடியூப் தளத்தில் இப்போதும் ட்ரெண்ட்டாகி வருவது இதற்கு ஒரு சான்று. சந்தானம் படங்களின் ட்ரெய்லர்களில் குறைந்த மணி நேரத்தில் அதிகமான பார்வைகள் கொண்ட ட்ரெய்லராக ‘டிக்கிலோனா’ உருவாகியுள்ளது. இதுவரை 6 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. படக்குழுவினரோ ஹிட் கன்பார்ம் என்று உறுதியுடன் இருக்கிறார்கள்.

கார்த்திக் யோகியின் கலகலப்பான இயக்கம், சந்தானத்தின் கவுண்டர் வசனங்கள், யுவனின் மயக்கும் இசை, யோகி பாபுவின் அசத்தல் காமெடி, ஆனந்தராஜ் – முனீஸ்காந்த் – ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘யூடியூப்’ புகழ் பிரசாந்த் உள்ளிட்ட பலருடைய கலாட்டாக்கள் என அனைத்தும் ஒரே படத்தில் இணைந்துள்ளதே இந்த வெற்றிக்குச் சான்று. இந்தப் படத்தின் கதைகளத்தை நம்பி முதலீடு செய்துள்ள கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி சினீஷ் என படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே டபுள் ஹாப்பி.

கார்த்திக் யோகி இயக்கியுள்ள ‘டிக்கிலோனா’ படத்தில் சந்தானம், யோகி பாபு, ஆனந்தராஜ், அனகா, ஷெரின், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணம், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, யூடியூப் பிரசாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்க, சினீஷ் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவாளராக ஆர்வி, எடிட்டராக ஜோமின், கலை இயக்குநராக ராஜேஷ், சண்டைக் காட்சிகள் இயக்குநராக தினேஷ் சுப்பராயன், பாடலாசிரியர்களாக அருண்ராஜா காமராஜ் மற்றும் சரவெடி சரண், நடன இயக்குநராக ஷெரீஃப்,  ஆடை வடிவமைப்பாளராக கீர்த்திவாசன் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.

பார்வையாளர்களை எப்படியெல்லாம் கவலைகளை மறந்து சிரிக்க வைப்பது என்பதற்காகவே இரவு- பகல் பாராமல் உழைத்து வருகிறது ‘டிக்கிலோனா’ படக்குழு. நமக்கெல்லாம் ஒரு தழைவாழை காமெடி விருந்து விரைவில் காத்திருக்கிறது.

Previous Post

யமுனா, மெட்ரோ படங்களில் நடித்த நடிகர் சத்யாவின் திருமணம் இன்று நடைபெற்றது

Next Post

வேட்டை நாய்’ படத்தில் அனிருத் பாடியுள்ள தர லோக்கல் பாடல்!

Next Post
வேட்டை நாய்’ படத்தில் அனிருத் பாடியுள்ள தர லோக்கல் பாடல்!

வேட்டை நாய்' படத்தில் அனிருத் பாடியுள்ள தர லோக்கல் பாடல்!

Popular News

  • சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.டி. நாயுடு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது!

May 24, 2026

நடிகர் மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, ஜியோஹாட்ஸ்டார் ‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ திரைப்பட விழாவில் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஸ்ட்ரீம் செய்து கொண்டாடுகிறது!

May 24, 2026

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஒய் ஜீ எம்-ன் ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்

May 24, 2026

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

May 24, 2026

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

May 24, 2026

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

May 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.