• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர்கள் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

by Tamil2daynews
October 30, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர்கள் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

 

எம்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இளமைத் துள்ளல் நிறைந்த ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘லவ் இங்க்’. ஏ. மகேந்திரன் வழங்க, மேகராஜ் தாஸ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தில் ராஜ் அய்யப்பா மற்றும் டெல்னா டேவிஸ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இன்றைய இளம் தலைமுறையினரின் காதல், உணர்வுகள் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு, நகைச்சுவை மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களை மகிழ்விக்கத் தயாராகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடிகர் சுனில் ரெட்டி தற்போது சென்னையில் நடைபெற்று வரும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

இன்றைய தலைமுறையின் சமகால உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் ‘லவ் இங்க்’, நவீன காதலை ரசிக்கத்தக்க வகையில் நகைச்சுவையுடன் சொல்லும் படமாக அமைவதுடன், அனைத்து வயதினரையும் கவரும் வகையிலும் உருவாகி வருகிறது.
இப்படத்தில் சுனில் ரெட்டி, ஆர்த்தி, ரவி மரியா, மைம் கோபி, பட்டிமன்றம் ராஜா, ரமா, சுபாஷினி, வினோத் முன்னா, கேபிஒய் வினோத், மௌரிஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, பின்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பகுதியில் நடைபெற்றது. தற்போது படக்குழு மீண்டும் சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெறும்.  திட்டமிட்டபடி வரும் டிசம்பர் மாதம் படத்தைத் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

படம் குறித்துப் பேசிய இயக்குநர் மேகராஜ் தாஸ், “இன்றைய ஜென்ஸீ தலைமுறையினருக்கு பிடித்த படமாக ‘லவ் இங்க்’ நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர்.  ரசிகர்களுக்கும் படம் நிச்சயம் பிடிக்கும்.  இளைஞர்களை மட்டுமல்லாமல், குடும்பத்துடன் அமர்ந்து ரசித்து, கொண்டாடக்கூடிய படமாகவும் ‘லவ் இங்க்’ இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்றார்.

மேகராஜ் தாஸ் எழுதி இயக்கியிருக்க, மகேந்திரன் வழங்கும் இப்படத்தை எம்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு தரண் குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை ஐ. மருதநாயகம் மேற்கொள்ள, கலை இயக்குநராக ராமு தங்கராஜ் பணியாற்றுகிறார். புவன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார்.

‘லவ் இங்க்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Previous Post

“அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்!

Next Post

இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் ‘ஏரோபிளேன்’ வெளியீடு

Next Post

இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் 'ஏரோபிளேன்' வெளியீடு

Popular News

  • இயக்குனர் சீனுராமசாமியிடம்  துணை இயக்குனராக பணியாற்றிய தயானந்தன்  இயக்குனராக  திரையுலகில் தடம் பதிக்கிறார்.

    இயக்குனர் சீனுராமசாமியிடம்  துணை இயக்குனராக பணியாற்றிய தயானந்தன் இயக்குனராக திரையுலகில் தடம் பதிக்கிறார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படம் (VEGULI) நவம்பர் 20 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து அதிரடியான புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • முகமூடி அணிந்த கலைஞர் தி ஆர்ட்டிஸ்ட் 404 ‘ஜான் டோ’ படத்திலிருந்து ‘நான் போதுமா’ பாடலை வெளியிட்டார்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

November 8, 2026

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

November 8, 2026

‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

November 8, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

November 8, 2026

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

November 8, 2026

ராமாயணா – விமர்சனம்

November 8, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.