• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தலைவர் ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியலை துவங்கியவுடன் எனது சிறந்த சேவையைச் செய்வேன் – ராகவா லாரன்ஸ்

by Tamil2daynews
September 5, 2020
in சினிமா செய்திகள்
0
தலைவர் ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியலை துவங்கியவுடன் எனது சிறந்த சேவையைச் செய்வேன் – ராகவா லாரன்ஸ்
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தலைவர் ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியலை துவங்கியவுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவருடன் சேர்ந்து சமூகத்திற்காக எனது சிறந்த சேவையைச் செய்வேன் ராகவா லாரன்ஸ் கருத்து.

நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம் , இன்று  நான் மிக முக்கியமான ஒன்றை தெளிவு  படுத்த விரும்புகிறேன். கடந்த மாதம் நான் ஒரு விஷயத்தை பதிவு செய்திருந்தேன்  அரசியலில் நுழையாமல் கூட நாங்கள் சேவை செய்ய முடியும் என்று.  இந்த அறிக்கையின் பின்னணியில் எனது காரணம் என்னவென்றால், நான் பல சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருக்கும்போது, எனது  நண்பர்கள், ரசிகர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் பல அரசியல்வாதிகள் என்னிடம் கேட்கிறார்கள், நான் அரசியலில் நுழைவதற்கு  இதையெல்லாம் செய்கிறேனா என்றும், மேலும் சிலர் என்னால்  அரசியலில் நுழைந்தால் இன்னும்  அதிகமாகச் செய்ய முடியும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

கொரோனா காலகட்டத்தில் நான் செய்த சேவையின் மூலம் அரசியலில் நுழையும் அழுத்தம் அதிகரித்துள்ளது.

அனைவருக்கும், நான் ஒரு பொதுவான நபர் என்று சொல்ல விரும்புகிறேன். நான் எனது  சேவையை எனது சொந்த வீட்டில் குழந்தைகளுக்காக தொடங்கினேன்.

எனக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் நான் அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பேன் அதற்கு எனக்கு அனைவரும் உறுதுணையாக இருந்துள்ளனர்.

கலைஞர்  அய்யா, ஸ்டாலின் சார், அன்புமனி ராமதாஸ் சார் போன்றோர்  பல இதய அறுவை சிகிச்சைகளுக்கு உதவியுள்ளனர். ஜெயலலிதா அம்மா, எடப்பாடி. கே.பழனிசாமி ஐயா, ஓ.பன்னீர்செல்வம் சார், விஜய பாஸ்கர் சார் மற்றும் பலர் பல்வேறு சேவைகளை செய்ய எனக்கு ஆதரவளித்துள்ளனர்.

 நான் அரசியலில் நுழைந்தால் ஒற்றை மனிதனாகச் செய்வதை விட அதிக சேவையைச் செய்ய முடியும் என்பதை நான் நன்கு அறிவேன், ஆனால் நான் அரசியலில் நுழையாததற்கு காரணம்,எதிர்மறை அரசியலை நான் விரும்பாததால் தான், என் அம்மாவுக்கும் அதே கருத்துதான்.

 ஏனென்றால் நாம்  எல்லோரையும் பற்றியும்  மோசமாக பேச வேண்டும், மற்றும் காயப்படுத்த நேரிடும். ஆனால் நான்  அதை செய்யமாட்டேன் ,அனைவரையும் மதிக்கிறேன். எனவே, யாராவது எதிர்மறை அல்லாத  ஒரு கட்சியைத் தொடங்கினால், நாங்கள் மோசமாகப் பேசவோ அல்லது  மற்றவர்களைப் புண்படுத்தவோ  தேவையில்லை என்றால், அவர்களுடன் சேர்ந்து பொதுமக்களுக்கு சேவை  செய்ய நான் எனது பங்களிப்பை அளிப்பேன். இந்தியாவில் நேர்மறையான அணுகு முறையைக் கொண்ட அத்தகைய கட்சியை எனது குரு தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால் மட்டுமே தர முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஏனெனில் அவர் ஒரு அரசியல் காரணத்திற்காக இருந்தாலும் யாரையும் காயப்படுத்தவில்லை. எனவே, அவர்  கட்சியைத் தொடங்கினாலும் அவர் ஒருபோதும் யாரையும் காயப்படுத்த மாட்டார்.

தலைவர் தனது ஆன்மீக அரசியலைத் தொடங்கிய பிறகு, அவரது கோடிக்கணக்கான  ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதால், அவருடன் சேர்ந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூகத்திற்காக  எனது சிறந்த சேவையைச் செய்வேன்.

Previous Post

நித்யானந்தாவின் சூப்பரான ஆஃபர்… கைலாசா செல்வதற்கு இந்த மூன்று ஊர்காரங்களுக்குத் தான் முன்னுரிமையாம்..!

Next Post

ஸ்டைலிஷ் நடிகராக அவதாரமெடுக்கும் நடிகர் நிதிஷ் வீரா

Next Post
ஸ்டைலிஷ் நடிகராக அவதாரமெடுக்கும் நடிகர் நிதிஷ் வீரா

ஸ்டைலிஷ் நடிகராக அவதாரமெடுக்கும் நடிகர் நிதிஷ் வீரா

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.