• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

19 ஆண்டுகள் கழித்து இயக்குனர் அவதாரம் எடுக்கும் ராமராஜன். ஹீரோ யார் தெரியுமா?

by Tamil2daynews
September 9, 2020
in சினிமா செய்திகள்
0
19 ஆண்டுகள் கழித்து இயக்குனர் அவதாரம் எடுக்கும் ராமராஜன். ஹீரோ யார் தெரியுமா?
0
SHARES
79
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்தவர் ராமராஜன். இவரது படங்கள் சூப்பர் ஹிட் ஆனதால் இவரை ‘வசூல் சக்ரவர்த்தி’ என்றே அழைத்து வந்தனர். 1985-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் வெளி வந்த திரைப்படம் ‘மண்ணுக்கேத்த பொண்ணு’. இது தான் ராமராஜன் இயக்கிய முதல் தமிழ் திரைப்படமாம். இதில் ஹீரோவாக பாண்டியன் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘மருதாணி, ஹலோ யார் பேசுறது’ போன்ற படங்களை இயக்கினார் ராமராஜன்.
அதன் பிறகு இயக்குநர் பணியுடன் நமது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த ராமராஜன், அடுத்ததாக ஹீரோவாக நடிக்கலாம் என்று முடிவெடுத்தார். 1986-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘நம்ம ஊரு நல்ல ஊரு’. இது தான் ராமராஜன் ஹீரோவாக அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம். இந்த படத்தினை பிரபல இயக்குநர் வி.அழகப்பன் இயக்கியிருந்தார்.
இதில் ராமராஜனுக்கு ஜோடியாக ரேகா நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து ‘எங்க ஊரு பாட்டுக்காரன், கிராமத்து மின்னல், ராசாவே உன்னை நம்பி, எங்க ஊரு காவக்காரன், கரகாட்டக்காரன்’ என அடுத்தடுத்தது பல படங்களில் ஹீரோவாக நடித்தார் நடிகர் ராமராஜன்.
ராமராஜன் நடிப்பில் கடைசியாக வெளி வந்த தமிழ் திரைப்படம் ‘மேதை’. இந்த படத்தினை இயக்குநர் N.TG. சரவணன் இயக்கியிருந்தார். இதில் ராமராஜனுக்கு ஜோடியாக கௌஷிகா நடித்திருந்தார். தற்போது, மீண்டும் பல ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜன் இயக்குநர் சீட்டில் அமரப்போவதாக தகவல் வந்திருக்கிறது. அதுவும் இந்த திரைப்படத்தில் நடிக்கப்போகும் ஹீரோ ரொம்பவும் ஸ்பெஷல். ராமராஜன் இறுதியாக கடந்த 2001 ஆம் ஆண்டு சீறி வரும் காளை படத்தை இயக்கி இருந்தார்.
தற்போது 19 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார். அதுவும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இப்படத்தில் ஹீரோவாம். விஜய் சேதுபதிக்கு ராமராஜன் கூறிய கதை மிகவும் பிடித்து விட்டதால், அவர் உடனே கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம். ஆனால், இந்த படத்தில் எந்த ஒரு கதாபாத்திரத்திலும் ராமராஜன் நடிக்கப்போவதில்லையாம். இப்படத்திற்கு பிறகு இன்னும் சில திரைப்படங்களை இயக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம் ராமராஜன்.
Previous Post

காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல் என்ன? – நிகழ்ச்சியின் நடுவர்கள் தகவல்

Next Post

திருமணமான 2 மணி நேரத்தில் மனைவி பற்றி அறிந்து அ தி ர் ச் சியில் உ றைந்த கணவன்!

Next Post
திருமணமான 2 மணி நேரத்தில் மனைவி பற்றி அறிந்து அ தி ர் ச் சியில் உ றைந்த கணவன்!

திருமணமான 2 மணி நேரத்தில் மனைவி பற்றி அறிந்து அ தி ர் ச் சியில் உ றைந்த கணவன்!

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.