• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் “மாறா” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.. ! 

by Tamil2daynews
October 10, 2020
in சினிமா செய்திகள்
0
மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் “மாறா” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.. ! 
0
SHARES
45
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் “மாறா” படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே,  ரசிகர்களிடம் படத்திற்கு ஒரு தனித்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை ( 2020 அக்டோபர் 9 ) வெளியான “மாறா” பட  ஃபர்ஸ்ட் லுக், அட்டகாசமான வடிவத்தில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பையும் தாண்டி, படம் அமேசம் ப்ரைம் வீடியோ (OTT) தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது படக்குழுவை பெரிதும் மகிழ்ச்சியுற செய்திருக்கிறது. மிக நேர்த்தியான வடிவமைப்பில், கலர்ஃபுல்லான ஃபர்ஸ்ட் லுக்குடன், படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு தேதியும் வெளியாகியிருப்பது, ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மனதை மயக்கும் கதையம்சத்துடன் மிக  அழகான காதலை சொல்லும் இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் 2020 டிசம்பர் 17 அன்று வெளியாகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே பல கதைகளை சொல்லும் அழகான ஓவியம் போல் அமைந்திருக்கிறது. முன்ணனி கதாபாத்திரங்கள் இருவரும், மனதை கவரும் தோற்றத்தில், போஸ்டரின்  வேறு வேறு பக்கங்களில் இருக்க, போஸ்டரில் இருவேறு களங்கள் காட்சியளிக்கிறது. ஒரு கடற்கரை பகுதி மற்றும் ஒரு மலைப்பகுதி அதில் எதையோ தேடி நடக்கும் ஒரு பெண் என கதையின் மையத்தை அழகான ஓவியமாக கொண்டிருக்கிறது போஸ்டர்.
நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற “கல்கி” படத்தினை உருவாக்கி  புகழ்பெற்ற திலீப் குமார் இப்படத்தை இயக்குகிறார். பிபின் ரகுவுடன் இணைந்து திலீப் குமார் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். எப்போதும் காதல் கதைகளில் இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை, உயிரை உருக்கும்படி இருக்கும். அந்த வகையில் “மாறா” படக்குழு இப்படத்தில் ஜிப்ரானின் இசை, இசைக்காதலர்களுக்கு பெரு விருந்தாக இருக்குமென உறுதியளிக்கிறது. திங் மியூஸிக் (Think Music) இசை உரிமையை பெற்றிருப்பதால்  பட இசை கண்டிப்பாக பட்டிதொட்டியெங்கும் பரவி,  பெரு வெற்றியை பெறும் என்பதில் ஐயமில்லை. இப்படத்தின் பாடல் வரிகளை கவிஞர் தாமரை எழுதியுள்ளார். படத்தொகுப்பை புவன் ஶ்ரீநிவாசன் செயதுள்ளார். படத்தின் போஸ்டரே படத்தின் விஷுவல்கள் அட்டகாசமாக இருக்கும் எனபதற்கு சான்று தருகிறது. ஒளிப்பதிவாளர்கள் கார்த்திக் முத்துகுமார், தினேஷ் கிருஷ்ணன் B  மற்றும் கலை இயக்குனர் அஜயன் ஜலிசரி கண்டிப்பாக இப்படம் மூலம் பெரும் பாராட்டை பெறுவார்கள்.
தபஸ் நாயக் இப்படத்திற்கு ஒலிப்பதிவு செய்துள்ளார். ஸ்பலாட் ஸ்டூடியோ ( splat studio ) விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்துள்ளனர். ஏக் லகானி மற்றும் ரெம்யா சுரேஷ் உடை வடிவமைப்பை செய்துள்ளனர். விளம்பர வடிவமைப்பை கோபி பிரசன்னா செய்துள்ளார். SP cinemas லைன் புரடக்சன் பணியை செய்துள்ளனர். தயாரிப்பு ஒருங்கிணைப்பை ( Executive Producer) கோகுல்.K செய்துள்ளார்.
ப்ரமோத் ஃப்லிம்ஸ் ( Pramod Films )சார்பில் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா இப்படத்தினை தயாரித்துள்ளார்கள்.
Previous Post

Tik Tok – பிரபலம் ஜி.பி முத்து தற்கொலை முயற்சி –  இது தான் காரணமாம்..!

Next Post

நர்சாக சேவை செய்த நடிகைக்கு கொரோனா..!

Next Post
நர்சாக சேவை செய்த நடிகைக்கு கொரோனா..!

நர்சாக சேவை செய்த நடிகைக்கு கொரோனா..!

Popular News

  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • என்ன விலை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

September 17, 2026

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

September 17, 2026

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

September 17, 2026

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

September 17, 2026

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

September 17, 2026

‘தி டார்க் ஹெவன்’. – விமர்சனம்

September 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.