• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா – இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்….

by Tamil2daynews
October 20, 2020
in சினிமா செய்திகள்
0
கேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா – இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்….
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் சினிமாவில்  தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பவர்கள் சிலர் தான். அதில் பாபி சிம்ஹாவும் ஒருவர். தனக்கான கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும்  அதில் தன் நடிப்புத்திறமையால் முத்திரை பதிப்பவர். தமிழ், தெலுங்கு என பிஸியாக இருக்கும் பாபி சிம்ஹா இப்போது புதிய படமொன்றில் மீண்டும் தன்னை நீருபிக்க தயாராகியுள்ளார்.
5 ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பரப்பட உலகில் பிரபலமான விக்ரம் ராஜேஷ்வர் இப்படத்தை இயக்கவுள்ளார்.இக்கதக்காக பாபி சிம்ஹாவை அணுகியுள்ளார் இயக்குநர் விக்ரம் ராஜேஷ்வர். கதையைக் கேட்டவுடன், நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் பாபி சிம்ஹா.
தமிழ்த் திரையுலகில் முக்கியமான படங்களின் பட்டியல்களை எடுத்துக்  கொண்டால், அதில் ‘அவள் அப்படித்தான்’, ‘கடலோர கவிதைகள்’ உள்ளிட்ட படங்கள் இடம்பிடிக்கும். அந்தப் படங்களின் கதைக்கு சொந்தக்காரரான K.ராஜேஷ்வரின் மகன் தான் விக்ரம் ராஜேஷ்வர்.

 

 


‘அவள் அப்படித்தான்’, ‘பன்னீர் புஷ்பங்கள்’, ‘கடலோர கவிதைகள்’, ‘சீவலப்பேரி பாண்டி’, மற்றும் பல படங்களின் கதை, திரைக்கதை,வசனம்  எழுதியவர் K.ராஜேஷ்வர். அதுமட்டுமல்லாமல், ‘நியாய தராசு’, ‘அமரன்’, ‘துரைமுகம்’, ‘அதே மனிதன்’, ‘இந்திர விழா’ மற்றும் பல படங்களையும் K.ராஜேஷ்வர் இயக்கியுள்ளார்.
பாபி சிம்ஹா – விக்ரம் ராஜேஷ்வர் இணையும் கேங்க்ஸ்டர் படத்துக்கும் K.ராஜேஷ்வர் தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார்  இதன் மூலமே படத்தின் வெற்றி உறுதியாகிறது. தற்போது இதன் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
படக்குழுவினர் விவரம்:
கதை, திரைக்கதை, வசனம் – K.ராஜேஷ்வர்
இயக்குநர் – விக்ரம் ராஜேஷ்வர்
பி.ஆர்.ஓ  – யுவராஜ்

Previous Post

தனது பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பிரபல பாடகி சுசீலா

Next Post

The Grand Opening Ceremony of ‘Tackle Futsal’ Game Changer Event Stills

Next Post
The Grand Opening Ceremony of ‘Tackle Futsal’ Game Changer Event Stills

The Grand Opening Ceremony of ‘Tackle Futsal’ Game Changer Event Stills

Popular News

  • மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கனவு கண்டேன்… சாதித்தேன்!’ – நரேன் மணியின் சினிமா பயணத்தின் வெற்றிக்கதை

    0 shares
    Share 0 Tweet 0
  • AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் “யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ” பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

July 4, 2026

கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

July 4, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ ‘#MythriTamil04 ‘#DV4’ படத்தின் தொடக்க விழா

July 4, 2026

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பாராட்டு!

July 4, 2026

காதலுக்கு காரணம் தேவையில்லை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ ‘செகண்ட் லவ்’ அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்!

July 4, 2026
”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

July 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.