• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தனது பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பிரபல பாடகி சுசீலா

by Tamil2daynews
October 20, 2020
in சினிமா செய்திகள்
0
தனது பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பிரபல பாடகி சுசீலா
0
SHARES
29
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கனடா வாழ் தமிழ் கலைஞர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் பாடகர் மின்னல் செந்தில்குமரன். சமூகநல மற்றும் விலங்குகள் நல ஆர்வலராகவும் இருப்பவர். ‘மின்னல் இசைக்குழு’ என்கிற பெயரில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர்.

பல வருடங்களுக்கு முன் ஸ்ரீதர் இயக்கத்தில், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் வெளியான, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற, ‘சொன்னது நீதானா’ என்கிற பாடலுக்கு தற்போது புதிய வடிவிலான கவர் ட்ராக் அமைத்து தயாரித்து வெளியிட்டுள்ளார்.

Sonnathu Neethaana Cover Song Youtube Link: https://youtu.be/pIXiodqg_EI

தனது வசீகர குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா பாடிய இந்த பாடலின், மீள் உருவாக்க பாடலை பாடகி சாம்பவி ஷண்முகநாதம் என்பவர் பாடியுள்ளார். இந்த பாடலை பார்த்துவிட்டு, சுசீலா அவர்கள் பாடகி சாம்பவியை பாராட்டியதுடன், இந்த பாடலுக்கு கவர் ட்ராக் இசையமைத்த கார்த்திக் ராமலிங்கம் மற்றும் இந்த பாடலை தயாரித்த   செந்தில்குமரன் உள்ளிட்ட அனைவருக்கும் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் காணொளி மூலம் தெரிவித்துள்ளார்.

P. Susheela Blessing Youtube Link: https://youtu.be/IoLCkIr2xRg

இந்த பாடலை உருவாக்கியது குறித்து செந்தில்குமரன் கூறும்போது, “இந்த பாடல் என் அம்மா எப்போதும் விரும்பி பாடக்கூடிய பாடல். அதனால் சிறுவயதில் இருந்தே இந்த பாடலை நானும் ரசித்துக் கேட்டுள்ளேன். தற்போது இந்தப் பாடலுக்கான கவர் ட்ராக்கை உருவாக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு காரணம் இந்த பாடலின் வழியாக ஒரு செய்தியை சொல்ல விரும்பினேன்.

பொதுவாகவே இந்த பாடலை கேட்கும்போது, ஏதோ ஒரு சோகப்பாடல் என்பது தான் பலரின் மனதிலும் தோன்றும். ஆனால், தான் இறந்து விட்டால் அதை நினைத்துக்கொண்டே, தன் மனைவி அவள் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக நினைக்கக்கூடாது. தனக்கு பிடித்த இன்னொருவரை மறுமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்கிற புரட்சிகரமான கருத்தை சொல்லியிருக்கும் பாடலாகத்தான் இதைப் பார்க்கிறேன்.

கடந்த பல வருடங்களாக இலங்கையின் வடக்கு கிழக்கில் நிவாரண உதவிகள் செய்வதற்காக களத்தில் இறங்கியபோது, பல விதவை பெண்மணிகளின் நிலையை நேரில் கண்டவன் என்கிற முறையில், இந்த பாடலை மீள் உருவாக்கம் செய்து எங்கள் சமுகத்திற்கு ஒரு செய்தியினை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் தான் பாடலின் முடிவில் “ஒரு புது தொடக்கம் எப்போதும் சாத்தியமானது” என்று முடித்துளோம் என்று கூறுகிறார் செந்தில்குமரன்.

Previous Post

‘எழுந்து வா’ – நம்பிக்கையூட்டும் ஆண்ட்ரியா & ஏடிகே கூட்டணி

Next Post

கேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா – இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்….

Next Post
கேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா – இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்….

கேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா - இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்....

Popular News

  • நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    0 shares
    Share 0 Tweet 0
  • 9 லைட்ஸ் சுரேஷ் முத்து தயாரிப்பில் ஆர். கிஷோர் குமார் இயக்கத்தில் யோகி பாபு 11 வேடங்களில் நடிக்கும் பான் இந்தியா காமெடி ஆக்ஷன் திரில்லர்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

    0 shares
    Share 0 Tweet 0
  • “அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

July 4, 2026

கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

July 4, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ ‘#MythriTamil04 ‘#DV4’ படத்தின் தொடக்க விழா

July 4, 2026

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பாராட்டு!

July 4, 2026

காதலுக்கு காரணம் தேவையில்லை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ ‘செகண்ட் லவ்’ அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்!

July 4, 2026
”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

July 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.