• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நாங்க ரொம்ப பிஸி’. சுந்தர் .சி யின்  அவ்னி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் பத்ரி இயக்கியுள்ளார்.

by Tamil2daynews
October 27, 2020
in சினிமா செய்திகள்
0
நாங்க ரொம்ப பிஸி’. சுந்தர் .சி யின்  அவ்னி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் பத்ரி இயக்கியுள்ளார்.
0
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘
இப்படத்தில் பிரசன்னா, ஷாம் , அஸ்வின் காக்கு மனு, யோகி பாபு, சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன், ரித்திகா சென், ஸ்ருதி மராத்தே ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஒளிப்பதிவு- கிச்சா, கலை- பிரேம், எடிட்டிங் -பென்னி, நடனம் – சந்தோஷ், சண்டைக்காட்சிகள்- பிரதீப் தினேஷ்.
டீமானிடைசேஷன்  எனப்படும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளது.
இக்கதையில் நகைச்சுவை மேலோங்கியிருந்தாலும் ரொமான்ஸ், ஆக்ஷன் போன்றவையும் கலந்திருக்கும்.
கொரோனா காலத்தில் திரையுலகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கும் சூழலில்
அரசின்  பாதுகாப்பு வழி முறைகளோடு தொடங்கப்பட்ட முதல் படம் இதுதான் .அதுமட்டுமல்ல
செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கப்பட்டு 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு கொரோனா காலத்திலேயே முடிக்கப்பட்ட படமும் இதுதான்.
முழுக்க முழுக்க சென்னையில் பல்வேறு இடங்களில் படமாகி உள்ளது.
 படம் பற்றி இயக்குநர் பத்ரி பேசும் போது,
“கொரோனா காலத்தில் குறிப்பிட்ட முப்பதே நாட்களுக்குள்  படத்தை முடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
 இந்தப் படத்தை எடுக்கும் போது எனக்குப் பல சவால்கள் இருந்தன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை 2016-ல் கொண்டுவரப்பட்டது.
 அந்தக் காலத்தில் கதை நடப்பதால் யார் முகத்திலும் மாஸ்க் போட்டு இருக்கக் கூடாது.
ஆனால் படப்பிடிப்பு நடைபெறுவதோ கொரோனா காலத்தில்.
நாங்கள் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்திய போது எவ்வளவுதான் கவனமாகப் பார்த்துக் கொண்டாலும் ஆங்காங்கே  மாஸ்க் அணிந்தவர்கள் எங்காவது பின்னணியில் தென்படுவார்கள் யாரோ எங்கோ தெரிந்தார்கள் அவர்களை எல்லாம் தவிர்த்துவிட்டு பல இடங்களில் நாங்கள் படப்பிடிப்பு நடத்தினோம்.ஏன் பரபரப்பான சாலைகளில் கூட படப்பிடிப்பு நடத்தினோம்.இது ஒரு சவாலான விஷயம்.
சமூக இடைவெளியையும் கடைப்பிடித்து கொரோனா காலத்தில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும் சவாலான ஒன்று. அதை நாங்கள் திட்டமிட்டபடி 30 நாட்களில் நடத்தி முடித்திருக்கிறோம் என்றால் எங்கள் குருநாதர் சுந்தர்.சி அவர்களிடம் நாங்கள் கற்ற குறித்த நேரத்தில் எதையும் முடிப்பது  என்கிற பாடம் தான் காரணம்.
படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருக்கிறார்கள் .அவர்கள் அத்தனை பேரின் திறமைக்கும் தீனி போட்டு அவர்களை நடிக்க வைத்துக் கையாள்வது என்பது பெரிய சவால் . அதுவும் எங்கள் இயக்குநரிடம் நாங்கள் கற்றது தான்.
இந்தக் கொரோனா காலத்தில் எந்த வேலையும் செய்ய முடியாமல் அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடந்தபோது அனைவரும் சொல்ல விரும்பிய வார்த்தைதான் ‘நாங்க ரொம்ப பி ஸி’ அதுதான் படத்தின் தலைப்பாக உள்ளது.
 இந்த படம் தீபாவளி நேரத்தில் அனைத்து மன அழுத்தங்களிலிருந்து பார்ப்பவர்களை விடுதலை செய்யும்படியான முழுநீள நகைச்சுவைப் படமாக இருக்கும்.குடும்பத்துடன் அனைவரும் அமர்ந்து பார்க்கும்படியான அத்தனை அம்சங்களும் கலந்த படம் இது என்பதற்கு நான் உத்திரவாதம் தருகிறேன்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் பத்ரி.
Previous Post

இருமொழியில் தயாராகும் அடுத்த படத்தை அறிவித்தார் கிரண் கே தலசீலா

Next Post

ஜப்பான் நாட்டின் ‘ஓசகா சர்வதேச தமிழ் திரைப்படவிழா’வில் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘சில்லுக் கருப்பட்டி’..!

Next Post
ஜப்பான் நாட்டின் ‘ஓசகா சர்வதேச தமிழ் திரைப்படவிழா’வில் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘சில்லுக் கருப்பட்டி’..!

ஜப்பான் நாட்டின் 'ஓசகா சர்வதேச தமிழ் திரைப்படவிழா'வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 'சில்லுக் கருப்பட்டி'..!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.