• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

மகுடம் – விமர்சனம்

by Tamil2daynews
August 15, 2026
in விமர்சனம்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மகுடம் – விமர்சனம் 

 

விஷால் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் படம் மகுடம்.

அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அப்பா லிங்கா ஒரு மோசமான கேங்ஸ்டர். அவரை பிரிந்து வாழும் மகன் கிருபாகரன் ஒரு மெடிக்கல் ரெப். மனைவி ஜமுனா(துஷாரா விஜயன்), இரண்டு பிள்ளைகளுடன் வசிக்கிறார் கிருபா. லிங்கா படாடோபமான வாழ்க்கை வாழ மகனோ பணத்திற்காக கஷ்டப்படுகிறார். கிருபாவுக்கு கடன் கொடுத்தால் திரும்ப வராது என்று அவருக்கு பணம் கொடுக்கக் கூட தயங்குகிறார்கள்.

கஷ்டப்படும் கணவர் என்றால் அதை குத்திக் காட்டிக் கொண்டே இருக்கும் மனைவி இருப்பார். உன்னை கட்டிக்கிட்டதுக்கு நான் வேறு யாரையாவது கல்யாணம் செய்திருந்தால் இந்நேரம் ராணி மாதிரி வாழ்ந்திருப்பேன் என குறை சொல்லும் மனைவி இல்லை ஜமுனா. கணவரின் கஷ்டத்தை புரிந்து நடந்து கொள்கிறார். ஜமுனா கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதத்தை பாராட்டியே ஆக வேண்டும்.

படத்தில் வரும் கதாபாத்திரங்களை திடீரென்று கைவிடும் ஆளாக இல்லை இயக்குநர். கிருபாகரனின் மாமனார், நண்பரை முதல் பாதியோடு கழற்றிவிட்டிருக்கலாம். ஆனால் இயக்குநர் விஷால் அப்படி செய்யவில்லை. அந்த இரண்டு கதாபாத்திரமும் கடைசி வரை வரும்படி செய்திருக்கிறார். மகுடம் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் வருபவர்களை கூட ரசிகர்கள் நினைவு வைத்திருக்கும்படி செய்திருக்கிறார் இயக்குநர். கமர்ஷியல் படத்தில் இது போன்று அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

படத்திற்கு மைனஸாக அமைந்துவிட்டது காமெடி காட்சிகள். விஷால், சித்ரா லட்சுமணன் வரும் காமெடி காட்சிகளுக்கு சிரிப்பு வரவில்லை. ரசிகர்கள் விசில் அடிக்க வேண்டும் என்பதற்காக சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.இப்போ இந்த காட்சி இங்கு எதற்காக வந்தது என்று கேட்கும்படி சில காட்சிகள் இருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை சுமார் ரகமாக அமைந்துவிட்டது.

மகன் கிருபாகரனை விட அப்பா லிங்கா கதாபாத்திரம் தான் நன்றாக இருக்கிறது. லிங்காவின் மனைவியாக ஃபிளாஷ்பேக்கில் வந்து போகிறார் அஞ்சலி. நல்ல திறமைசாலிகளான அஞ்சலி, துஷாரா விஜயனை இயக்குநர் விஷால் சரியாக பயன்படுத்தவில்லை.

கமர்ஷியல் படம் என்றால் இது, இது எல்லாம் இருக்க வேண்டும் என்று சேர்த்திருக்கிறார் விஷால். இரண்டு ஹீரோயின்கள், இரட்டை வேடத்தில் வரும் ஹீரோ, குடும்ப சென்டிமென்ட், மாஸ் காட்சிகள் என எதையும் விட்டு வைக்கவில்லை. ஆனால் அது படம் பார்ப்பவர்களை ஈர்க்கத் தவறிவிட்டது.

படம் இயக்குவது தவறு இல்லை. ஆனால் அது எல்லோருக்கும் வந்துவிடாது என்பதை காட்டுகிறது மகுடம். மாஸாக இருக்கும் என எடுக்கப்பட்ட படம் அப்படி இல்லாமல் போனது தான் ஏமாற்றத்தை அளிக்கிறது.

மகுடம் இசை வெளியீட்டு விழாவில் விஷால் பேசிய விஷயங்கள் எல்லாம் மக்களை கவர்ந்தது. மேடை பேச்சுக்கே இவ்வளவு மெனக்கெடும் விஷால் அதுவும் முதல் முறையாக இயக்கியிருக்கும் படத்திற்காக எவ்வளவு கடினமாக உழைத்திருப்பார். அவர் இயக்கியிருக்கும் மகுடம் படத்தை முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்று தியேட்டர்களுக்கு சென்றவர்களுக்கு மாஸ் ஃபீலிங் கிடைக்கவில்லை.

தொடர்ந்து படம் இயக்கும் எண்ணம் இருந்தால் அதை தயவு செய்து கைவிடவும் விஷால் என சினிமா ரசிகர்களை கோரிக்கை விடுக்கச் செய்திருக்கிறது மகுடம் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் நடிக்க மட்டுமே செய்து இருந்து படத்தை வேறு ஒரு இயக்குனர் இயக்கி இருந்தால் இக்கதை சற்றாது எடுபட்டிருக்கும்.

அதுலயும் பண்ணவாரி போட்டார் புரட்சித்தலைவி விஷால்.

மொத்தத்தில் இந்த மகுடம் ரசிகர்களுக்கு இல்லை ,விஷாலுக்கு மட்டுமே.
Previous Post

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்

Next Post

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

Next Post

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் 'தர்மன்'.

Popular News

  • ரேவதி இயக்கத்தில் நடிகர்கள் பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.