• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ( Axess Film Factory ) , ப்ளாக் டிக்கெட் கம்பெனியுடன் ( Black Ticket Company)  இணைந்து வழங்கும் ஆந்தாலஜி திரைப்படம் “விக்டிம்” !

by Tamil2daynews
November 12, 2020
in சினிமா செய்திகள்
0
ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ( Axess Film Factory ) , ப்ளாக் டிக்கெட் கம்பெனியுடன் ( Black Ticket Company)  இணைந்து வழங்கும் ஆந்தாலஜி திரைப்படம் “விக்டிம்” !
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தயாரிப்பாளர் G. டில்லிபாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தமிழ் சினிமாவில் சீரான தனிப்பாதையில் பயணித்து, மதிப்புமிகு நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. 2014 ல் ஆரம்பித்த இத்தயாரிப்பு நிறுவனம் வெகு அழகான தரமிக்க படங்களை தந்து வருகிறது.  மரகத நாணயம், IMDB தளத்தில் இந்திய படங்களின் வரிசையில் முதல் இடத்தை தக்க வைத்திருக்கும் “ராட்சசன்” மற்றும் 2020 ல் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டரான “ஓ மை கடவுளே” என தொடர்ந்து கருத்திலும், சுவையிலும் கலக்கும்  படங்களை இந்நிறுவனம் தந்து வருகிறது. தற்போதைய நிலையில் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம்  மூன்று படங்களை தயாரித்து வருகிறது. மூன்று படங்களும் தயாரிப்பின்  வெவ்வேறு கட்டங்களில் இருக்கும் நிலையில், தற்போது ப்ளாக் டிக்கெட் கம்பெனியுடன்  இணைந்து நான்கு  கதைகள் கொண்ட “விக்டிம்” எனும் ஆந்தாலஜி படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த ஆந்தாலஜி திரைப்படத்தின் நான்கு வெவ்வேறு கதைகளை, இயக்குநர்கள் சிம்பு தேவன் , ராஜேஷ் M, பா. ரஞ்சித் மற்றும் வெங்கட் பிரபு இயக்குகிறார்கள்.
ஆக்சஸ்  ஃபிலிம்  ஃபேக்டரி நிறுவன தயாரிப்பாளர் G. டில்லிபாபு இது குறித்து கூறியதாவது…..
எங்கள் நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்பது உலகளவில் அனைத்து ரசிகர்களும் கொண்டாடும் படங்களை தருவதென்பதே ஆகும். எங்கள் படங்களுக்கு ரசிகர்கள் தரும் பெரும் வரவேற்பும், பேராதரவும் எங்களுக்கு  பெரும் பொறுப்புனர்வை தந்திருக்கிறது,  தொடர்ந்து அவர்கள் கொண்டாடும் வகையிலான படங்களை தர நாங்கள் பாடுபடுவோம். அந்த வகையில் “விக்டிம்” ஆந்தாலஜி திரைப்படததை  ரசிகர்கள் விரும்பும் வகையில்  இயக்குநர்கள் சிம்பு தேவன் , ராஜேஷ் M, பா. ரஞ்சித், வெங்கட் பிரபு  தருவார்கள் என உறுதியாக நம்புகிறேன். விக்டிம் என்பது ஒரு குற்றசெயல் நடக்கும் போது அதில்  உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படும் நபரை குறிக்கும் சொல்லாகும். குற்றச்செயலால் ஒருவர் அடையும் உடல் பாதிப்பை விட, மனதளவிலும் ஏற்படும் பாதிப்பென்பது மிகவும் கொடியதாகும். நம்மை நாம் கேள்வி கேட்டுக்கொண்டால் வாழ்வில் நாமும்  ஒருமுறை   விக்டிமாக இருந்திருப்போம். காரணங்கள் வெவ்வேறானதாக இருக்கலாம், ஆனால் குற்றச்செயலால் நாம் அடையும் அழுத்தம், பயம், பதட்டம் அனைத்தும் எல்லோருக்கும் ஒன்றாகவே ஏற்பட்டிருக்கும். இந்த ஆந்தாலஜி திரைப்படத்தின் கரு இந்த விக்டிமை மையப்படுத்தியதே ஆகும். தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகளாக திகழும் இயக்குநர்கள் சிம்பு தேவன் , ராஜேஷ் M, பா. ரஞ்சித், வெங்கட் பிரபு ஆகியோர் விக்டிம் கருவை அடிப்படையாக வைத்து தங்கள் பார்வையில் நான்கு ‘விக்டிம்’  கதைகளை அழகான வடிவில் தரவுள்ளார்கள்.
இந்த “விக்டிம்” ஆந்தாலஜி திரைப்படத்தில் தமிழின் சிறந்த நடிகர்களான நாசர், தம்பி ராமையா, பிரசன்னா, அமலா பால், நட்டி (எ) நடராஜ் சுப்பிரமணியம், கலையரசன் ஆகியோர் நடிக்கவுள்ளார்கள்.
இயக்குநர் சிம்பு தேவன் இயக்கும் கதையில் R. சரவணன் ஒளிப்பதிவாளராகவும், சாம் CS இசையமைப்பாளராகவும், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்
இயக்குநர்  ராஜேஷ் M இயக்கும் கதையில் சக்தி சரவணன் ஒளிப்பதிவாளராகவும், கணேஷ் சேகர் இசையமைப்பாளராகவும், ஆகாஷ் தாமஸ் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கும் கதையில் தமிழ் A அழகன் ஒளிப்பதிவாளராகவும், தென்மா இசையமைப்பாளராகவும், செல்வா  RJ படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் கதையில் சக்தி சரவணன் ஒளிப்பதிவாளராகவும், பிரேம் ஜி  இசையமைப்பாளராகவும், வெங்கட் ராஜன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்
Previous Post

தரமான வாக்குறுதிகளோடு களமிரங்கும் இராமசாமி முரளி..!

Next Post

நடிகை அஞ்சலி நடிப்பில் “பூச்சாண்டி” விரைவில் திரையில்  !

Next Post
நடிகை அஞ்சலி நடிப்பில் “பூச்சாண்டி” விரைவில் திரையில்  !

நடிகை அஞ்சலி நடிப்பில் “பூச்சாண்டி” விரைவில் திரையில்  !

Popular News

  • மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • ராமர் மற்றும் சீதையின் அன்பை பேசும் ‘மங்கள வண்ணமே’ பாடல் ‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ’ஹைக்கூ’ திரைப்படத்தில் மெளனமான ஒரு கதாபாத்திரமாக இசையை கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தது!” – இசையமைப்பாளர் சித்து குமார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’!

November 4, 2026

ட்ரூ ஸ்டோரீஸ் தயாரிப்பில் ஷேன் நிகமின் அடுத்த திரைப்படம் ஏற்காட்டில் பூஜையுடன் தொடக்கம்!

November 4, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் 27 நவம்பர் 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராகிறது, படத்திலிருந்து பிரத்யேகமான “தேங்க்ஸ்” டீஸர் மூலமாக வெளியீட்டுத் தேதியை அறிவித்தது படத்தயாரிப்பு நிறுவனம்!

November 4, 2026

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து அதிரடியான புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

November 4, 2026

‘ஜான் டோ’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

November 4, 2026

‘தர்மன்’ திரைப்படத்தில் இணைந்த நட்சத்திரம் – நடிகை ஶ்ரீலீலா!

November 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.