• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா..?

by Tamil2daynews
November 13, 2020
in சினிமா செய்திகள்
0
ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா..?
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
 தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளில் யாருமே பார்த்திராத வகையில் வலம் வருபவர் அமைச்சர் ஜெயக்குமார். அவரது செயல்பாடுகள் மக்கள் மத்தியிலும் சரி,அலுவலக ரீதியாகவும் சரி எப்போதுமே அதிரடியாக இருக்கும். களத்தில் இறங்கினால் அதிரடி ஆட்ட நாயகனாக  மக்களோடு மக்களாக தன்னை இணைத்துக் கொள்வதில் முன்னோடியாகவே இருக்கிறார்.
எத்தனையோ சோதனைகள், சங்கடங்கள், தோல்விகள், தேவையற்ற வீண் வதந்திகள், விமர்சனங்கள், பழிவாங்கல்கள்,போட்டி, பொறாமை என எதுவந்தாலும் அவற்றை புன்சிரிப்போடு எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர். கல்லூரி காலகட்டங்களில் இருந்த அதே மனநிலையோடு தான் இன்னமும் மனதை இளமையாக வைத்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்.அவரது தொடர் வெற்றிக்கும் இதுவே காரணமாக அமைகின்றது.
தொகுதி மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்வு காண்பது மட்டுமல்ல இவரது அரசியல், அதைத்தாண்டி ஒட்டுமொத்த தமிழகத்து மக்களின் பிரச்சனை எதுவென்றாலும் இவரது தனிப்பட்ட கவனத்திற்கு கொண்டு வந்தால் அதை அனுசரணையாக கேட்டறிந்து அதற்கான தீர்வை ஏற்படுத்தி கொடுத்து வருகிறார்.எனவேதான் இவர் மீதான நம்பிக்கையை அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய உழைப்பை மிகவும் நேசித்தார் முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா.
 அவரது மறைவுக்குப் பின்னரும் இவருக்கான அடையாளமும், அங்கீகாரமும் இன்றளவும் குறையவில்லை. இப்போதும் ஒரு குழந்தையின் குதூகலத்தோடு மகிழ்ச்சி மத்தாப்பை ஒளிரச்செய்யும் மனிதராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஜெயக்குமார். ஏதாவது வித்தியாசமான ஒன்றை செய்து காட்டுவதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே.
அந்த வகையில் இப்போது புதிய வேடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர். ஜேம்ஸ்பாண்ட் தோற்றத்தில் தொப்பி, கண்ணாடி, கலர் சட்டை என அவர் எடுத்த செல்பி வைரலாக பரவி வருகிறது. அமைச்சர் ஜெயக்குமார் சினிமாவில் நடிக்கப் போகிறாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.ஆனால் இது குறித்து அவரிடம் கேட்டபோது,” ஒரு ஜாலிக்காக நானே எடுத்துக் கொண்ட புகைப்படம் காலேஜ்ல படிக்கிற ஞாபகம் வந்ததால இந்த செல்பி எடுக்கணும் தோணுச்சு அதனால எடுத்தேன்” என்கிறார்.
மொத்தத்தில் இயல்பான, ஜாலியான எதையும் டேக் இட் ஈசியாக எடுத்துக் கொள்ளக்கூடிய அமைச்சர் என்பது இவர் கடந்து வந்த பாதைகளின் மூலம் தெரிய வருகிறது.
Previous Post

தயாரிப்பாளர் மற்றும் படைப்பாளி வெற்றிமாறன் வழங்கும் “காவல்துறை உங்கள் நண்பன்” !

Next Post

விஜய் ஆண்டனி நடிப்பில்  ‘கோடியில் ஒருவன் ‘ ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார்.

Next Post
விஜய் ஆண்டனி நடிப்பில்  ‘கோடியில் ஒருவன் ‘ ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார்.

விஜய் ஆண்டனி நடிப்பில்  'கோடியில் ஒருவன் ' ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார்.

Popular News

  • ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிஷன்: பாசிபிள்’ மூலம் புதிய பரிமாணத்தில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘மூடர் கூடம் 2’!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி சி (DC) – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

August 10, 2026

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

August 10, 2026

மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”

August 10, 2026

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

August 10, 2026

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

August 10, 2026

டி சி (DC) – விமர்சனம்

August 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.