• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு..’ எனும் ‘நாற்காலி’ பட பாடலை தமிழக முதல்வர் ஜனவரி 16 ஆம் தேதி வெளியிடுகிறார்.

by Tamil2daynews
January 21, 2021
in சினிமா செய்திகள்
0
தமிழக முதல்வர் வெளியிட்ட ‘நாற்காலி’ பட பாடல்!
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு..’ எனும் ‘நாற்காலி’ பட பாடலை தமிழக முதல்வர் ஜனவரி 16 ஆம் தேதி வெளியிடுகிறார்.
இயக்குனர் அமீர் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘நாற்காலி’. ‘மூன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பாக ஆதம் பாவா இப்படத்தை தயாரித்துள்ளார்.’இருட்டு’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னராக வி.இசட்.துரை  இந்த ‘நாற்காலி’யை இயக்கியுள்ளார்.இதில் அமீருடன், ‘555’ திரைப்படத்தின் நாயகி சாந்தினி ஸ்ரீதரன் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா, சரவணஷக்தி, அர்ஜூனன், கோவை பாபு, ஜார்ஜ் விஜய், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், சலீமா உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர்.

‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர் அவர்களின் புகழ் பாடும் ‘நாற்காலி’ திரைப்படத்தில் மறைந்தும் மறையாத “பாடும் நிலா” எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குரலில் புரட்சித் தலைவரின் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு…” என்ற வரிகளில் தொடங்கும் பாடலின்  “FIRST SINGLE”- track ஐ புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 104-வது  பிறந்த தினத்தை முன்னிட்டு, வரும் ஜனவரி 16-ம் தேதி மாலை மாண்புமிகு தமிழக முதல்வர்
திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் வெளியிட மாண்புமிகு  அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்கள் பெற்றுக்கொள்கிறார்.

இத்திரைப்படத்தின் இசை அமைப்பை வித்யாசாகர், ஒளிப்பதிவை இ.கிருஷ்ணசாமி, படத்தொகுப்பை ஆர்.சுதர்சன், பாடல் பா விஜய், வசனம் அஜயன் பாலா – க.முரளி, கலை இயக்கத்தை ஏ.கே.முத்து, சண்டைக்காட்சிகளை டான் அசோக், நிழற்படப்பதிவை மோதிலால், விளம்பர வடிவமைப்பை ராஜா – வெங்கடேஷ், மக்கள் தொடர்பு கே.எஸ்.கே  செல்வா  ஆகியோர் செய்துள்ளனர்.

மிகுந்த பொருட் செலவில் நடப்பு அரசியல் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடந்து நிறைவு பெற்றிருக்கிறது.

இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவேகத்துடன் நடந்து வருகிறது. அனைத்து ரசிகர்களும் இன்புற்று மகிழ்ந்து அமரவிருக்கும் வகையில் உருவாகி வரும் இந்த ”நாற்காலி” யை வரும் மார்ச் மாதம் திரையரங்கில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

Previous Post

வரும் ஜனவரி 15 அன்று, பூஜையுடன் தொடங்குகிறது.

Next Post

முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் இல்லை பாடம் “ சில்லு வண்டுகள் “

Next Post
முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் இல்லை பாடம் “ சில்லு வண்டுகள் “

முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் இல்லை பாடம் “ சில்லு வண்டுகள் “

Popular News

  • 25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

    0 shares
    Share 0 Tweet 0
  • 100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

    0 shares
    Share 0 Tweet 0
  • இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

September 27, 2026

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

September 27, 2026

மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!

September 27, 2026

காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

September 27, 2026

இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

September 27, 2026

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

September 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.