• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் குரலில் இறுதியாக உருவான ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் முதல் பாடலான ‘வா சிவா’ வெளியீடு!

by Tamil2daynews
November 22, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் குரலில் இறுதியாக உருவான ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் முதல் பாடலான ‘வா சிவா’ வெளியீடு!

 

இயக்குநர் K.P. ஜெகன் நடிக்கும் ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

இயக்குநரும் நடிகருமான K. P. ஜெகன் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தில், மறைந்த ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் இனிமையான குரலில் பதிவு செய்யப்பட்ட கடைசிப் பாடலான ‘வா சிவா’ எனும் பாடலும், பாடலுக்கான பிரத்யேக வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இயக்குநர் K.P. ஜெகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தில் K.P. ஜெகன், விஜய் வர்மா, எம். எஸ். பாஸ்கர், சனாஷ்கா ஸ்ரீ, மௌனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, ‘உறியடி’ சங்கர், சாய் அபிநயா, வீரசமர், கதிரவன் பாலு, திண்டுக்கல் அலெக்ஸ், இயக்குனர் மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுக. செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை மணிகண்டன் சிவக்குமார் மேற்கொள்ள, கலை இயக்கத்தை வீரசமர் கவனித்திருக்கிறார். தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமாவாகத் தயாராகியுள்ள இந்தத் திரைப்படத்தை யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தை பசங்க புரொடக்ஷன்ஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. இப்படத்தின் ஆடியோவை வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது.‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் அறிமுகக் காணொளி வெளியாகி, மில்லியன் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளைப் பெற்று ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘எங்கெங்கோ தேடிப் போனேன்… ஏதேதோ நாடி போனேன்… இப்போ நான் ஆடிப் போனேனே… என் அப்பன் சிவனே… இப்போ நான் ஆடிப் போனேனே… என் ஐயன் சிவனே…’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான பிரத்யேக வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்தப் பாடலை அறிமுகப் பாடலாசிரியர் சக்தி உமா பாலகிருஷ்ணா எழுத, மறைந்த ‘தேனிசைத் தென்றல்’ தேவா பாடியிருக்கிறார்.

மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்குச் செல்வதற்கு முன் தேவாவின் குரலில் பதிவான கடைசிப் பாடல் இது என்பதே இந்தப் பாடலின் சிறப்பம்சம். சிவபெருமானிடம் பக்தன் ஒருவன் மனம் வருந்தி பாடும் பாடலாக இது அமைந்திருப்பதுடன், தேவாவின் குரலில் ஆன்மிக உணர்வும் மேலோங்கி இருப்பதால், இசை ரசிகர்களைக் கடந்து ஆன்மிக ரசிகர்களையும் இந்தப் பாடல் வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.

இதனிடையே, இந்தப் பாடலில் தேசிய விருது பெற்ற குணச்சித்திர நடிகரான எம். எஸ். பாஸ்கர் சிவனடியாராகத் தோன்றி நடித்திருப்பதும், இந்தப் பாடல் படமாக்கப்பட்டபோது ஐம்பதிற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பல்வேறு தளங்களில் இருந்து ஒன்றுதிரண்டு பங்கேற்றிருப்பதும், இந்தப் பாடலின் பதிவின்போது கொக்கரை, நந்தி சிருங்கி போன்ற சிவ வாத்தியங்கள் வரவழைக்கப்பட்டுப் பிரத்யேகமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கவை.

https://www.youtube.com/watch?v=1QkC9LEGzNw
Previous Post

“கனவுகள், விடாமுயற்சி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வாழும் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் பேசும் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’”…இயக்குநர் சேகர் கேசவ் சிரின்!

Next Post

சத்தியவான் சாவித்திரி – விமர்சனம்

Next Post

சத்தியவான் சாவித்திரி - விமர்சனம்

Popular News

  • பக்கத்து வீட்டுக்காரர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் தொடரின் டிரெய்லர் – நவம்பர் 27 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’ – இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது! 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழில் அடுத்தடுத்து இரண்டு படைப்புகள்… அசுர வளர்ச்சியில் கல்ட் டிஜிட்டல்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் இனிகோ பிரபாகர் நடிக்கும் ‘மின்னும் ஓர் இரவு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT) திரைப்படம் – சென்னையில் நடைபெற்ற தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.