• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

OTT யில் மாஸ்டர் ரிலீஸ்..!

by Tamil2daynews
January 28, 2021
in சினிமா செய்திகள்
0
OTT யில் மாஸ்டர் ரிலீஸ்..!
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஜனவரி 29 அன்று ஆக்‌ஷன் த்ரில்லர் தமிழ் திரைப்படமான மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் ப்ரீமியர் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது
சேவியர் ப்ரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான மாஸ்டர் படத்தின் பிரத்யேக டிஜிட்டல் வெளியீட்டை இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் வரும் ஜனவரி 29 முதல் காணலாம்.
மும்பை, இந்தியா, 27 ஜனவரி 2021 – அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான மாஸ்டர் திரைப்படம்  வரும் ஜனவரி 29 அன்று பிரத்தியேகமான டிஜிட்டலில் வெளியாகும் என்று அமேசான் ப்ரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது. மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நடித்துள்ளனர். இவர்களுடன் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த மாஸ்டர் திரைப்படத்தில் இரு சூப்பர்ஸ்டார்களான தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி கதாபாத்திரங்களுக்கு இடையே மோதல் பார்வையாளர்களைச் சீட்டின் நுனிக்கு கொண்டு வரக்கூடியவை. இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் வரும் ஜனவரி 29, 2021 முதல் மாஸ்டர் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் கண்டு மகிழலாம்.
இது குறித்து அமேசான் ப்ரைம் வீடியோவின் இந்திய பிரிவு தலைவரும், இயக்குநருமான விஜய் சுப்ரமணியம் கூறுகையில், ‘அமேசான் ப்ரைம் வீடியோவில் மாஸ்டர் படம் வெளியாவது பற்றி அறிவிப்பில் நாங்க பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படங்களில் ஒன்று மாஸ்டர். இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்களுக்கு இந்த மாதம் இப்படத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த டிஜிட்டல் பிரீமியர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவில் மட்டுமன்றி, உலகமெங்கும் உள்ள தங்களின் வீடுகளின் பாதுகாப்பு மற்றும் வசதியிலிருந்து இந்த சமீபத்திய தமிழ் பிளாக்பஸ்டர் திரைப்படத்தை ரசிப்பதற்கான தேர்வை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.’ என்றார்
இப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து தளபதி விஜய் கூறியுள்ளதாவது: இப்படத்தில், குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஜான் துரைராஜ் என்ற ஒரு கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். ஒரு சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்படும் அவர், அங்குத் தனது எதிரியான பவானியைச் சந்திக்கிறார். விஜய் சேதுபதி ஏற்று நடித்திருக்கும் பவானி கதாபாத்திரம் அந்தப் பள்ளிக் குழந்தைகளைத் தனது சொந்த லாபத்துக்காகப் பயன்படுத்தி வருகிறார். ஜான் மற்றும் பவானிக்கும் இடையிலான சுவாரஸ்ய மோதல்கள் பார்வையாளர்களுக்கு ஒரு ஆக்‌ஷன் ரோலர் கோஸ்டர் பயணமாக இருக்கும் என உறுதியளிக்கிறேன். இந்தியா மற்றும் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் அமேசான் ப்ரைம் விடியோவில் இப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்த்து ரசிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.’ இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
தனது படத்தின் டிஜிட்டல் வெளியீடு குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளதாவது: மாஸ்டர் படம் இரண்டு வலிமையான நடிகர்கள் நேருக்கு நேர் மோதும் காட்சிகளைக் கொண்டுள்ளது. இது மக்களை திரையரங்குகளுக்கு வந்து படம் பார்க்கச் செய்யும் காரணிகளாக அமைந்துள்ளது. எனினும், அமேசான் ப்ரைம் வீடியோவில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாவதன் மூலம் வீட்டில் உள்ள பார்வையாளர்களையும், சாத்தியமற்ற பகுதிகளையும் அடைய நாங்கள் விரும்புகிறோம். என் படம் அமேசான் ப்ரைம் வீடியோவின் மூலம் உலகளாவிய அளவில் வெளியாவது ஒரு இயக்குநராக மிகவும் திருப்தியாக உள்ளது. வரும் ஜனவரி 29 முதல் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இப்படத்தைக் கண்டு ரசிக்கலாம்.
கதைச் சுருக்கம்:
சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஒன்றுக்கு அனுப்பப்படும் குடிபோதைக்கு அடிமையான பேராசிரியர் ஒருவருக்கு, அந்த பள்ளியின் குழந்தைகளைக் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தி வரும் கேங்க்ஸ்டர் ஒருவருடன் மோதல் ஏற்படுகிறது.
Previous Post

பிரதமருக்கு நடிகர் உதயா நன்றி..!

Next Post

லைகா புரடக்‌சன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜா வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” ! 

Next Post
லைகா புரடக்‌சன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜா வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” ! 

லைகா புரடக்‌சன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜா வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” ! 

Popular News

  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • “எனது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்வதே எனது மிகப்பெரிய இலக்கு”…‘மொத ராத்திரி’ படத்தில் இயக்குநராக அறிமுகமாவது குறித்து ராஜா கருப்பசாமி!

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.