• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பாலாவின்  உதவியாளர்  வள்ளுவன்  ‘ஓகே கூகுள்’  என்கிற  7  நிமிடக் குறும்படத்தை  இயக்கியுள்ளார்.

by Tamil2daynews
February 9, 2021
in சினிமா செய்திகள்
0
பாலாவின்  உதவியாளர்  வள்ளுவன்  ‘ஓகே கூகுள்’  என்கிற  7  நிமிடக் குறும்படத்தை  இயக்கியுள்ளார்.
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
வள்ளுவன்  பிரபல  எடிட்டர்  லெனினிடம்  உதவியாளராக  இருந்து  எடிட்டிங் தொழில்நுட்பத்தையும்  பாலாவிடம்  உதவியாளராக  இருந்து  இயக்குநர்  பயிற்சியையும்  பெற்றவர்.
வள்ளுவனின் அண்ணன்   தியாகராஜன்  (நாடக கலைஞர் – திணை நிலவாசிகள்) ‘தமிழ் ஸ்டுடியோ’வின் தன்னார்வலராக இருந்துள்ளார். ஒருமுறை பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு ஒரு கண்காட்சி  நடத்தினார்கள். அப்போது  அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே  அவருக்குப் பதிலாக வள்ளுவன் அந்தப் பணியை மேற்கொள்ள அந்த விழாவுக்கு வந்த  எடிட்டர் லெனின் இவரைப் பற்றி  விசாரிக்கவும்  மறைந்திருந்த சினிமா ஆசை வெளிப்பட்டு  அவரது  உதவியாளராகியிருக்கிறார்.
பின்னர் எடிட்டர்  கிஷோர்,  ஜி. சசிகுமார் , எல்.வி. கே. தாஸ் ஆகியோருடன் எடிட்டிங் துறை சார்ந்த நட்பான அனுபவங்கள்.  அவர்கள் மூலம் கிடைத்த நட்பில் பாலாவிடம் இணைந்திருக்கிறார் . உதவி எடிட்டராக இருந்த போது பாலாவின் படப்பிடிப்பிற்குப்  போய்  பார்த்தபோது  தான் இயக்குநரின் ஆளுமை மீது இவருக்கு காதல் வந்திருக்கிறது . அதன்பின் இயக்குநர் கனவு தீவிரமாகி இருக்கிறது . ஒருவழியாக பாலாவிடம்  உதவி  இயக்குநராகவும் சேர்ந்து விட்டார். பாலாவிடம்  இயக்கம்  பற்றிய  அனுபவங்களைக்  கற்றார்.
படித்துவிட்டு கணினி மென்பொருள் துறையில் வேலை பார்த்தவர்  இப்படி மெல்ல  மெல்ல  நகர்ந்து  சினிமாவில்  இயக்குநராகி  இருக்கிறார்.
தனது  இயக்குநர்  கனவை  நோக்கிச்  செல்லும்  முதல்படியாக  ‘ஓகே கூகுள் ‘ என்கிற  ஒரு  ஏழு  நிமிடக்குறும்படத்தை  இயக்கியிருக்கிறார் . இது  ஒரு  அடல்ட் காமெடி படமாகும்.
படத்தில்  நாயகனுக்கு  கள்ளச்சந்தையில்  ஒரு  மர்மமான  மொபைல்  போன் கிடைக்கிறது.  அதிலுள்ள  அப்ளிகேஷன்கள்  செயல்பட  ஆரம்பிக்கும்போது அவனது  வாழ்க்கையே  திசை  மாறுகிறது . முடிவு  என்ன  என்பதுதான்  கதை.
இதில் பேராசிரியரும் அறிவழகன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.  சன் டிவி தொடர்களில்  வில்லியாக  நடிக்கும்  காயத்ரி  கிருஷ்ணன்  கதாநாயகியாக நடித்திருக்கிறார்.  இந்த 7 நிமிடக் குறும்படம் ஒரே  நாளில் படமானது . ஆனால் இதற்காக  எடிட்டிங்  செய்ய ஏழு நாட்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார். பாலாவின் சீடர் ஆயிற்றே.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு வினோத், இசை- கோகுல் கிருஷ்ணன் ,எடிட்டிங் -அமர்நாத். தயாரிப்பு  எஸ். மலர்விழி, ஜி. பூரணி, ஜி.கே. ரம்யா, சி.வி .பச்சையா பிள்ளை, ஐ. கார்த்திக்.
தனது திரைப்பட உருவாக்கம் திறமைக்கு ஒரு மாதிரிக்காக இந்தத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் .  மூன்று திரைக் கதைகள் தயாராக வைத்திருக்கிறார். நல் வாய்ப்புக்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறார். பாலாவின் மாணவர் நிச்சயம் ஏமாற்ற மாட்டார் என்று நம்பலாம்..
Watch Interesting & Trending #OKGoogle Tamil Science Fiction Romantic Adults Short film
➡https://youtu.be/0SztCFsiqus
Previous Post

*தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் மகள் திருமண வரவேற்பு – பிரபலங்கள் நேரில் வாழ்த்து*

Next Post

காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் ”பழகிய நாட்கள்”

Next Post
காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் ”பழகிய நாட்கள்”

காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் ''பழகிய நாட்கள்''

Popular News

  • “‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் குரலில் இறுதியாக உருவான ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் முதல் பாடலான ‘வா சிவா’ வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.