• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“நீ போதுமா” சக்தி ஸ்ரீ கோபாலன்..!

by Tamil2daynews
February 16, 2021
in சினிமா செய்திகள்
0
“நீ போதுமா” சக்தி ஸ்ரீ கோபாலன்..!
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
*சக்திஸ்ரீ கோபாலனின் புதிய படைப்பு ‘நீ போதுமே’ காதலர் தினத்தன்று வெளியாகியுள்ளது*ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ள இசைக் கலைஞரான சக்திஸ்ரீ கோபாலனிடம் இருந்து காதலர் தினத்தன்று ஒரு சிறப்பு பாடல் வெளியாகியுள்ளது. ‘நீ போதுமே’ என்று பெயரிடப்பட்டுள்ள எளிமையான, மென்மையான இந்த தமிழ் பாப் சிங்கிள், காதலை கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.
இப்பாடலை சக்திஸ்ரீ கோபலனே எழுதி, இசையமைத்து தயாரித்துள்ளார். கிடார் கலைஞரும் பாடகருமான அக்‌ஷய் யசோதரன் இதில் தோன்றுகிறார்.2021 பிப்ரவரி 14 அன்று வெளியாகியுள்ள ‘நீ போதுமே’, காதலில் இருப்பவர்களின் உணர்வுகளையும், காதலின் மென்மை மற்றும் வலிமையையும் இசை வடிவில் வெளிப்படுத்துகிறது. 2020-ம் வருடம் வீடுகளே உலகமாக மாறியிருந்த வேளையில் எழுதி, இசையமைக்கப்பட்ட இப்பாடல், நேசத்துக்குரியவர்களின் பாசம் குறித்து பாசாங்கில்லாமல் பதிவு செய்துள்ளது.சிறந்த பாடகியும், இசை ஏற்பாட்டாளருமான கல்யாணி நாயரின் உணர்வுப்பூர்வமான இசைக் கோர்வைகளுடனும், ரித்து வைசாக், ஹர்ஷா சாஸ்திரி மற்றும் டோபி ஜோசப்பின் பங்களிப்புடனும் ‘நீ போதுமே’ உருவாகியுள்ளது. அக்‌ஷய் யசோதரனும் தனது கிடார் மூலாம் சிறப்பு சேர்த்துள்ளார்.
பல்வேறு மொழிகளில் 100 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ள சக்திஸ்ரீ கோபாலன், ஏ ஆர் ரஹ்மான், அனிருத் ஆகியோருடன் பணியாற்றியுள்ளார். 2008-ம் ஆண்டிலிருந்தே பாடல்களை எழுதி, இசையமைத்தும் வருகிறார்.சென்னையை சேர்ந்த பிக் சாம் மற்றும் சென்னை ஸ்ட்ரீட் பேண்ட் ஆகிய இசைக்குழுக்களில் அங்கம் வகிக்கும் அக்‌ஷய் யசோதரன், ரஹ்மானுடன் இசைப் பயணம் மேற்கொண்ட அனுபவம் கொண்டவராவார்.இவர்களின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ள ‘நீ போதுமே’, இந்த இசை இன்னும் வேண்டுமென்று ரசிகர்களை சொல்ல வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாடலைக் காண: https://www.shakthisreegopalan.com/nee-podhumey
Previous Post

ஏ. வி. எம் ஸ்டுடியோவுக்குள்  சசிகலா தயாரிப்பு நிறுவனம்!

Next Post

காமெடி கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ள ‘டிக்டாக்’

Next Post
காமெடி கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ள ‘டிக்டாக்’

காமெடி கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ள 'டிக்டாக்'

Popular News

  • முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி (The India Story) படத்தின் டீசர் விரைவில் வெளியீடு : ஜூலை 24ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • சுழல் மற்றும் வதந்தி முதல் எக்ஸாம் வரை: தமிழ் இணையத் தொடர் கதையாடலுக்கு புதிய முகம் கொடுக்கும் புஷ்கர் – காயத்ரி !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.டி. நாயுடு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது!

May 24, 2026

நடிகர் மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, ஜியோஹாட்ஸ்டார் ‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ திரைப்பட விழாவில் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஸ்ட்ரீம் செய்து கொண்டாடுகிறது!

May 24, 2026

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஒய் ஜீ எம்-ன் ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்

May 24, 2026

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

May 24, 2026

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

May 24, 2026

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

May 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.