• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வித்தியாசமான முறையில் காதலர் தினத்தைக் கொண்டாடிய நடிகை சாக்ஷி அகர்வால்! உற்சாகத்தில் மிதந்த குழந்தைகள்!

by Tamil2daynews
February 16, 2021
in சினிமா செய்திகள்
0
வித்தியாசமான முறையில் காதலர் தினத்தைக் கொண்டாடிய நடிகை சாக்ஷி அகர்வால்! உற்சாகத்தில் மிதந்த குழந்தைகள்!
0
SHARES
38
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘வேலன்டைன்ஸ் டே’ என்றாலே டேட்டிங் என்ற பெயரில் ஊர் சுற்றுவது என இன்றைய தலைமுறை ஒரு மோசமான ஃபார்முலாவை உருவாக்கி வைத்திருக்கிறது. அதனாலேயே காதலர் தினத்தை வெறுப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.நடிகை சாக்ஷி அகர்வாலும் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு முக்கியத்துவம் தருபவர். அவர் காதலிப்பது ஆதரவற்ற குழந்தைகளை என்பது ஹைலைட்!

ஆம், காதலர் தினத்தையொட்டி ஆதரவற்ற குழந்தைகளோடு நேரத்தைச் செலவிடுவது, அவர்களுக்கு உணவு வழங்கி மகிழ்வது என்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சாக்ஷி.தான் நடித்த ‘குட்டி ஸ்டோரி’ படம் ரிலீஸான உற்சாகத்திலிருக்கும் நேரமாகப் பார்த்து காதலர் தினம் வருகிறது. அதே உற்சாகத்தோடு, சென்னை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள ‘நியூ ஹோப் அண்ட் நியூ லைஃப்’ என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு உணவு வழங்கி, கலந்து பழகி, அவர்களோடு விளையாடி மகிழ்வித்து திரும்பியிருக்கிறார். அதுதான் தன்னுடைய காதலர் தினக் கொண்டாட்டம் என்கிறார்.

அவரிடம் பேசினோம்… ” ‘வேலன்டைன்ஸ் டே’வை  உலகம் பார்க்கிற பார்வை வேற. நான் அதை மனுஷங்க மேல மனுஷங்க அன்பு செலுத்துறதுக்கான தினமாத்தான் பார்க்கிறேன். யார் வேணாலும் யார் மேல வேணாலும் அன்பு செலுத்தலாம். எனக்கு ஆதரவற்ற குழந்தைகள் மேல அன்பு செலுத்துறது பிடிச்சிருக்கு. அவங்கதான் என்னோட காதலர்கள். அதனால, காதலர் தினத்தை அவங்களோட கொண்டாடுறேன்.

மூணு வருஷத்துக்கு முன்னே, ‘ஃபுட் ஃபார் டூ’ங்கிற (Food for Two) கான்செப்ட்ல காதலர் தினத்தைக் கொண்டாடினேன். அதாவது ‘ஒரு மனுஷன் இரண்டு பேருக்கு உணவு கொடுத்தாலே போதும்; நாட்டுல ஏழைகளுக்கு பசி பட்டினி இருக்காது’ங்கிற விழிப்புணர்வை உருவாக்குறதுக்காக பண்ணது அது.போன வருஷ காதலர் தினத்தை,’எய்ட்ஸ்’ பாதித்த பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகளுக்கான ஒரு காப்பகத்துல அவர்களைத் தொட்டுப் பேசி பழகி, சாப்பாடு கொடுத்து கொண்டாடினேன். ‘எய்ட்ஸ் பாதித்தவங்களை தொடுறதால நமக்கு எய்ட்ஸ் தொற்றாது; அவங்களை தொட்டுப் பழக தகுதியற்றவர்களா நினைக்கிறது தப்பு’ங்கிறதை எடுத்துச் சொல்றதுக்கான முயற்சியா அதை பண்ணேன்.

இந்த வருஷம், கிட்டத்தட்ட 100 ஆதரவற்ற குழந்தைகள் இருக்கிற ‘நியூ ஹோப் அண்ட் நியூ லைஃப்’ காப்பகத்துல காதலர் தினத்தைக் கொண்டாடினேன். மனசுக்கு அவ்ளோ ஹேப்பி… இது அடுத்தடுத்த வருஷமும் தொடரும்” என்றார்.

‘குட்டி ஸ்டோரி’ படத்தையடுத்து சாக்ஷி அகர்வால் நடித்துள்ள ‘சின்ட்ரெல்லா’ படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள ‘டெடி’ படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான கேரக்டரில் நடித்துள்ளார். அடுத்ததாக, சாக்ஷி அகர்வால் ஒப்பந்தமாகியுள்ள படம் ‘தி நைட்.’ விலங்கு ஒன்று முக்கிய கதாபாத்திரமாக நடிக்கப் போகிற அந்த படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்னும் சில நாட்களில் துவங்கவிருக்கிறதாம். ‘அரண்மனை 3’யிலும் நடிக்கவிருக்கிறார் என்பது சாக்ஷி பற்றிய அடுத்த அப்டேட்.

Previous Post

காமெடி கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ள ‘டிக்டாக்’

Next Post

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த யாமா டீசர்!!! 

Next Post
மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த யாமா டீசர்!!! 

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த யாமா டீசர்!!! 

Popular News

  • ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் குரலில் இறுதியாக உருவான ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் முதல் பாடலான ‘வா சிவா’ வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பக்கத்து வீட்டுக்காரர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் தொடரின் டிரெய்லர் – நவம்பர் 27 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்!

    0 shares
    Share 0 Tweet 0
  • உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’ – இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது! 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.