• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home Uncategorized

சரித்திரம் படைத்த சாதனை பெண்களை கௌரவித்த ரெய்ன்ட்ராப்ஸ் சமூக அமைப்பு

by Tamil2daynews
March 9, 2021
in Uncategorized
0
சரித்திரம் படைத்த சாதனை பெண்களை கௌரவித்த ரெய்ன்ட்ராப்ஸ் சமூக அமைப்பு
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ரஹ்மான் அவர்களின்  சகோதரியும் இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான  ஏ.ஆர்.ரெஹானா உள்ளார்.

‘ரெயின்டிராப்ஸ்’ சமூக அமைப்பின் சார்பில்  நடத்தப்படும் ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா, சென்னையில் உள்ள ராணி சீதை மஹாலில் நடைபெற்றது

 

ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும்.  இந்த அமைப்பு ஊடகங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக சமூக விழிப்புணர்வு கருத்துகளைக் கூறி வருவதன் மூலம் மிகவும் பிரபலமானது. குழந்தைகளுக்கு இலவச கல்வி ஊக்கத்தொகை, பெண்கள் முன்னேற்றத்தைக் கூறும் சாதனைப் பெண்கள் விருது, சாலையோரம்  பசித்திருக்கும்  ஏழை  மக்களுக்கு உணவு வழங்கும் விருந்தாளி திட்டம், மாற்றுத்  திறனாளிகளுக்கான  ரீச் தீ பீச்  திட்டம், போன்றவை ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நற்பணிகளுக்குச் சான்றுகளாகும். ரெயின்டிராப்ஸ் அமைப்பின்  நல்லெண்ணத் தூதராக, ஆஸ்கார் வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின்  சகோதரியும் இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான  ஏ.ஆர்.ரெஹானா உள்ளார்.

இந்த அமைப்பு தற்போது எட்டாவது முறையாக  ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழாவை நடத்தினர்.  இந்த விழா கடந்த 2012 ஆம் ஆண்டு முதல்  ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  தேசிய மகளிர் தினத்தை பாராட்டி நடந்த  இந்த விழாவை,  ரெயின்டிராப்ஸ் அமைப்பின்  நல்லிணக்க தூதுவர்  ஏ.ஆர்.ரெஹானா தலைமை வகித்தார்,  அமைப்பின் நிறுவன தலைவர் அரவிந்த் ஜெயபால் முன்னிலை  வகித்தார்,.

 

இந்த வருடம், ரெயின்ட்ராப்ஸ் வாழ்நாள் சாதனையாளர் விருதினை 105 வயதான இயற்கை விவசாயி பாப்பம்மாள் மற்றும் 93-வயதான மூத்த சுதந்திர போராட்ட தியாகி லட்சுமி கிருஷ்ணன் பெற்றுக்கொண்டனர்.

சிறந்த ஆளுமைக்கான விருதினை இளம் வனதுறை அதிகாரி சுதா ராமன் ஐ.எப்.எஸ், சிறப்பு அங்கீகாரத்தை இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி ஜோயிதா மோண்டல், குயின் ஒப் தமிழ் சினிமா – சிறந்த நடிகைக்கான விருதினை ஊர்வசி, சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதினை இந்திய கூடைப்பந்து மகளிர் அணி கேப்டன் அனிதா பால்துரை, நம்பிக்கையிற்கான விருதினை சென்னை உயர்நீதிமன்ற முதல் பார்வை சவால் கொண்ட  வழக்கறிஞர் கற்பகம், சிறந்த இயற்கை விசாயிக்கான விருதினை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பரிமளா தேவி, வீரத்திற்கான விருதினை சென்னை விமான நிலையத்தின் முதல் பெண் தீயணைப்பு வீரர் ரெம்யா ஸ்ரீகாந்தன்,

கருணைக்கான விருதினை டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணன், இளம் விஞ்ஞானிக்கான விருதினை திருவண்ணாமலையை  சேர்ந்த 14 வயது சிறுமி  வினிஷா உமாசங்கர், இந்தியாவின் முதல் பெண் கனரக வாகன ஓட்டுநர் ஜோதிமணி கௌதமன், தமிழகத்தின் முதல் பெண் 108 ஓட்டுநர் வீரலட்சுமி,  இடுகாடுகளில் வெட்டியாள் வேலை செய்யும் கோவையை சேர்ந்த வைரமணி, பிரபல வீணை இசை கலைஞர் புண்யா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பெண் சாதனையாளர்கள் ‘சாதனை பெண்கள் விருதுகளை’  பெற்றனர்.

 

பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ், இயக்குனர் பி வாசு, காவல்துறை அதிகாரி சரவணன், விஜிபி குழுமத்தின் நிறுவனர் டாக்டர் வி. ஜி. சந்தோஷம், பாடகர் ஸ்ரீனிவாஸ், வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யா, வருமான வரித்துறை அதிகாரி நந்தகுமார் IRS,  இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், விஜிபி குழுமத்தின் இயக்குனர் ராஜாதாஸ், தணிக்கைக் குழு அதிகாரி லீலா மீனாட்சி, நடிகை நீலிமா  உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அரவிந்த் ஜெயபால் இது குறித்துக் கூறுகையில், சர்வேதச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் சாதனைப் பெண்கள் விருது விழாவை நடத்துவதில் எங்களுக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. ஒவ்வொரு துறையிலும் இருக்கும் பெண் சாதனையாளார்களை அடையாளம்  கண்டு நாங்கள் விருது வழங்கி வருகிறோம்.  இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக கொரோனா காலங்களில் அயராது மக்கள் சேவையாற்றிய பெண் முன்கள பணியாளர்களையும் இவ்விழாவில் கௌரவித்ததில் பெருமை அளிக்கிறது  என்றார்.

Previous Post

‘The Last Customer’

Next Post

Actress Varalaxmi Sarathkumar Celebrated her Birthday with Kids

Next Post
Actress Varalaxmi Sarathkumar Celebrated her Birthday with Kids

Actress Varalaxmi Sarathkumar Celebrated her Birthday with Kids

Popular News

  • அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.