• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

by Tamil2daynews
November 22, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

 

ஏ.வி.எல்.டி புரொடக்‌ஷன் (AVLT PRODUCTION) சார்பில் | ஜெகன் ஜான் பீட்டர் (Jegen John Peter) தயாரிப்பில் மலேசியாவில் உருவாகியுள்ள தமிழ்ப்படம் ‘இரும்புத் தோட்டம்’.

புலனாய்வு க்ரைம் த்ரில்லர் ஆக உருவாகியுள்ள இப்படத்தை ஜெயதேவ் ஜெயகுமார் இயக்கியுள்ளார்.

முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ள இந்த தமிழ்ப்படம் விரைவில் தமிழகமெங்கும் ரிலீசாக இருக்கிறது.

‘அடுத்த கட்டம்’, ‘மைந்தன்’ படங்களைத் தொடர்ந்து தமிழகத்தில் HAVEN PICTURES   RK. கண்ணன் வெளியிடும் மூன்றாவது மலேசியத்  தமிழ்ப்படம் இது.

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் ‘கோட்’ திரைப்படங்களின் மூலம் பெரும் கவனத்தைப் பெற்ற இர்ஃபான் ஜைனி இதில் கதாநாயகனாக நடிக்கிறார்.

மேலும்  லோகவர்மன் ஸ்ரீதரன், மேரி தாஷினி மேத்யூஸ், மோகன ராஜ், துர்காஷினி எஸ். வினோஷன், பாலன் காஷ், டத்தோ கீதாஞ்சலி G , கலைமாமணி கே. எஸ் மணியம், நிஷா மற்றும் விஜய்  நாயுடு உள்ளிட்ட மலேசியாவைச் சேர்ந்த நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.

மலேசியத் தேசிய ஒருமைப்பாட்டுத் துணை அமைச்சர் மாண்புமிகு துவான் யுனேஸ்வரன் ராமராஜ் இப்படத்தில் ‘துவான் தெய்வீகன்’ என்ற சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். பதவியில் இருக்கும் ஒரு துணை அமைச்சர் மலேசியத் தமிழ்த் திரைப்படத்தில் நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

தினேஷ் குமார் @ டி.கே ஒளிப்பதிவு செய்ய, ஷமேஷன் மணிமாறன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இயக்குநர் ஜெயதேவ் ஜெயகுமாரே படத்தொகுப்பையும் கவனித்துள்ளார்.

ஒரு மாணவியின் மர்மமான கொலை, அதைச் சுற்றி ஒரு ஆசிரியர் மேல் எழும் சந்தேகம்.. தடயவியல் டிடெக்டிவ் அதிகாரி ஒருவர் உள்ளூர் காவல்துறை அதிகாரியுடன் இணைந்து இந்த வழக்கை விசாரிக்கிறார். விசாரணையின் போக்கில் பல ரகசியங்கள் முடிச்சு முடிச்சாக அவிழ்கின்றன. உண்மையான கொலையாளி யார் எனக் கண்டுபிடிப்பதுடன் சமூகத்தின் மேலோட்டமான பிம்பத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் கசப்பான உண்மைகளைத் தேடும் நீதிக்கான பயணமே இந்த ‘இரும்புத் தோட்டம்’.

படம் குறித்து இயக்குநர் ஜெயதேவ் ஜெயகுமார் கூறும்போது, “நவீன சமூகத்திலும் கூட பேசத் தயங்கும் விஷயங்களைச் சுற்றியுள்ள மவுனத்தை உடைப்பதே ‘இரும்புத் தோட்டம்’ படத்தின் மூலம் எனது நோக்கமாக இருந்தது. குற்றப் புலனாய்வுத் திரைப்படங்களின் தீவிர ரசிகன் என்ற முறையில், இந்தக் கடினமான சமூக யதார்த்தங்களைப் பேசுவதற்குப் புலனாய்வு வகையின் விறுவிறுப்பையும் பதற்றத்தையும் ஒரு பாலமாகப் பயன்படுத்த விரும்பினேன்.

 கதாபாத்திரங்கள் மற்றும் சூழல் அனைத்தும் எனது சிறுவயது நினைவுகளிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதுடன், எனது சொந்த ஊரான மலாக்காவில் உள்ள டெபோங்கில் தான்  முழுப் படத்தையும் படமாக்கியுள்ளோம். சமூக விதிமுறைகள் குறித்த பார்வையாளர்களின் கண்ணோட்டத்திற்குச் சவால் விடுவது போல இப்படம் இருக்கும்” என்கிறார்.

இப்படம் விரைவில் திரைக்கு வரும் விதமாக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

*தொழில்நுட்பக் கலைஞர்கள்*

இயக்கம், திரைக்கதை & படத்தொகுப்பு: ஜெய்தேவ் ஜெயகுமார்
தயாரிப்பாளர்: ஜெகன் ஜான் பீட்டர்
கிரியேட்டிவ் ஹெட் (Creative Head) :  கார்த்திக் ஷாமளன்
ஒளிப்பதிவாளர்: தினேஷ் குமார் @ டி.கே (Thinesh Kumar @ TK)
இசையமைப்பாளர் : ஷமேஷன் மணிமாறன் (Shameshan Mani Maran)
உதவி இயக்குநர்கள்: சதீஸ்வரராவ் அனந்தராவ், தேவபிரசாந்த் ஆர். விஸ்வலிங்கம்
ஆடை வடிவமைப்பு : ஜெய துர்கா தேவி
ஒளிப்பதிவுக் குழு : ரவி தமிழரசன், சதீஷ், லோகன், மேகன் ஆர்ட்ஸ், ஜொனாதன், தேவ்குமார்
கலை இயக்குநர் : ரஜினி காந்த்
ஒப்பனைக் கலைஞர்கள் : ஷோபனா ஸ்ரீ, ஷீலா
விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX):  மனோஜ் குமார் கணபதி
தயாரிப்பு மேலாளர்கள் : அபோ ஷஃபிக் (Aboh Shafiq), பரதன் பாலச்சந்திரன்
மக்கள் தொடர்பு; A. ஜான்
Previous Post

பக்கத்து வீட்டுக்காரர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் தொடரின் டிரெய்லர் – நவம்பர் 27 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்!

Next Post

காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

Next Post

காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான 'ஹைக்கூ' திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

Popular News

  • பக்கத்து வீட்டுக்காரர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் தொடரின் டிரெய்லர் – நவம்பர் 27 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’ – இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது! 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழில் அடுத்தடுத்து இரண்டு படைப்புகள்… அசுர வளர்ச்சியில் கல்ட் டிஜிட்டல்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் இனிகோ பிரபாகர் நடிக்கும் ‘மின்னும் ஓர் இரவு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.