• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சாந்தி செளந்தரராஜனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது.

by Tamil2daynews
March 16, 2021
in சினிமா செய்திகள்
0
சாந்தி செளந்தரராஜனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது.
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

888 Productions-ன் முதல் தயாரிப்பான இப்படத்தை, எழுதி இயக்குபவர் ஜெயசீலன் தவப்புதல்வி. திரைப்படத்தின் தலைப்பு ‘சாந்தி செளந்தரராஜன்’.

 


இதுவரை பல படங்களை விநியோகம் செய்து வரும் 888 Productions நிறுவனம் முதன் முறையாக தயாரிப்புத் துறையில் தடம் பதிக்கிறது.

கடந்த வருடம் மம்மூட்டி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘மாமாங்கம்’ திரைப்படத்தில ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மனோஜ் பிள்ளையிடம் அசோஸியேட் ஒளிப்பதிவாளராகவும் மற்ற பல படங்களில் இணை, துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜெயசீலன் தவப்புதல்வி இப்படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனமெழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்தியாவிற்கு 12 சர்வதேச பதக்கங்களையும், தன் சொந்த மாநிலமான தமிழகத்திற்கு 50 பதக்கங்களுக்கு மேல் வென்ற தடகள வீராங்கனை சாந்தி செளந்தரராஜன். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ் பெண் சாந்தி செளந்தரராஜன். 2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடத்தப்பட்ட பாலின சோதனையின் அறிக்கையின் அடிப்படையில், பெண்களுக்கான போட்டியில் தகுதி மறுக்கப்பட்டு அவர் வென்ற வெள்ளிப் பதக்கம் அவரிடமிருந்து திரும்பி பெறப்பட்டது.

இந்த அவமானகரமான சோதனையின் காரணமாக சாந்தி செளந்தரராஜன் தடகள போட்டிகளில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.

அவர் வாழ்க்கையில் நடந்த, இதுவரை வெளிவராத பல சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் திருப்பங்களுடன் கதை வடிவமைக்கப்பட்டு, முழுக் கதையினையும் சாந்தி செளந்தரராஜனிடம் ஒப்புதல் பெற்று, இக்கதை படமாக்கப்பட உள்ளது.

இப்படத்தில், சாந்தி செளந்தரராஜனின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மூன்று நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, ‘ஆஸ்கர் விருது பெற்ற ‘ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்கிறார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுத, வசனங்கள் பொன் பார்த்திபன் எழுதியுள்ளார். மேலும் இப்படத்தில், ஒளிப்பதிவு – கோபிநாத் D தேவ், படத்தொகுப்பு – சங்கத்தமிழன் , கலை – காளி. ப்ரேம் குமார், ஒப்பனை – ரஞ்சித் அம்பாடி, உடை – ஜேம்ஸ் ஆப்ரஹாம் – என பல தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகின்றனர்.

ஏப்ரலில் தமிழ் புத்தாண்டு துவங்கும் நாளன்று படத்தின் கதாநாயகியின் அறிவிப்பு வெளியிடப்படும்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, புதுக்கோட்டை அருகே உள்ள சாந்தி செளந்தரராஜனின் கிராமத்தில் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து பஞ்சாப், கத்தார், ஓமான் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.

பெண்களின் திறமை மற்றும் வலிமையையும், பெண்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் படத்தின் பல காட்சிகள் நடந்த நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகிறது.

Previous Post

ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறார், அஷிமா நர்வால்

Next Post

இயக்குனர் மணி செயோன் இயக்கத்தில் சுந்தர் C நாயகனாக நடிக்கும் புதிய படம்

Next Post
இயக்குனர் மணி செயோன் இயக்கத்தில்  சுந்தர் C நாயகனாக நடிக்கும் புதிய படம்

இயக்குனர் மணி செயோன் இயக்கத்தில் சுந்தர் C நாயகனாக நடிக்கும் புதிய படம்

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.