• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தேசிய அளவிலான அங்கீகாரம் ஒவ்வொரு கலைஞனுக்குமான எதிர்பார்ப்பாக இருக்கும். 

by Tamil2daynews
March 25, 2021
in சினிமா செய்திகள்
0
தேசிய அளவிலான அங்கீகாரம் ஒவ்வொரு கலைஞனுக்குமான எதிர்பார்ப்பாக இருக்கும். 
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழ் சினிமாவை பெருமைப்படுத்திய தேசிய விருது பெற்ற கலைஞர்கள் தேசிய அளவிலான அங்கீகாரம் ஒவ்வொரு கலைஞனுக்குமான எதிர்பார்ப்பாக இருக்கும்.
கடின உழைப்பை மதிக்க வேண்டும்… அந்த உழைப்பு தேசிய அளவில் உச்சி நுகரப்பட வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அவ்விருதை ஏற்புடைய கலைஞர்கள் பெறும்போது தமிழ் சினிமா தலை நிமிர்கிறது.
2019-ல் வெளியான படங்களில் எல்லோரையும் அசத்தியெடுத்த படம் ‘அசுரன்’.  அதோடு இன்னும் சில நல்ல படங்களும் தேர்வில் கலந்துகொண்டன.
நம் தமிழ் சினிமாவில் நல்ல சினிமாக்கள் பிறந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் 2019 ஆண்டில் நமக்கு நெருக்கமான படமான அசுரன்-க்காக சிறந்த நடிகர் விருது அசுர உழைப்பாளன் திரு. தனுஷூக்கு கிடைத்தது உண்மையிலேயே பெருமை கொள்கிறது நம் தமிழ் சினிமா.
அசுரனை இயக்கிய இயக்குநர் திரு. வெற்றிமாறன், அதீத உழைப்பாளி. கதைக்களம் தேர்ந்தெடுத்து படைப்பாக்கம் செய்வதில் வல்லுனன். பெருமைமிகு தயாரிப்பாளர் திரு. கலைப்புலி எஸ். தாணு ஆகிய மூவருக்கும்   வாழ்த்துகள்.
நம்மை பெருமைகொள்ளச் செய்யும் இயல்பான நடிகர் திரு. விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருது “Super Deluxe” திரைப்படத்தில் அனைவரையுமே ஆச்சரியப்படுத்திய ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததற்கு கிடைத்ததில் மகிழ்கிறோம். சிறந்த நடிகருக்கான அங்கீகாரம் தேசிய அளவில் வரும் ஆண்டுகளில் கிடைக்க வாழ்த்துகிறோம்.
சிறந்த படம் என்ற சிறப்பு விருதைப் பெற்ற “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தின் நாயகன், புதுமை பித்தன், விடா முயற்சியின் உச்சம் திரு. ஆர். பார்த்திபனுக்கும், அப்படத்தின் ஒலிப்பதிவு கலைஞரான திரு. ரசூல் பூக்குட்டிக்கும் பெருமைமிகு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
“விஸ்வாசம்” என்ற மாபெரும் வெற்றி படத்தின் தூணாக விளங்கி, இசையில் சிறப்பித்த இசையமைப்பாளர் திரு.D.இமானுக்கும், “K.D. என்கிற கருப்புதுரை” என்ற அழகிய படத்தில் நம்மை அதிகம் கவர்ந்த குழந்தை நட்சத்திரம் நாக விஷாலுக்கும் தேசிய விருது கிடைத்ததற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
உங்கள் அனைவரின் அங்கீகாரம் நம் தமிழ் சினிமாவை பெருமைகொள்ளச் செய்திருக்கிறது.
உள்ளபடியே பெருமை கொள்கிறோம். வாழ்த்துகிறோம். ஒவ்வொரு ஆண்டும் உங்களின் மதிப்பிற்குரிய திறனை வெளிப்படுத்துங்கள்.
வாழ்த்துகள்.
உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா
தலைவர்,
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்
Previous Post

தேசிய விருது பெற்ற கலைஞர்களை வாழ்த்தியது சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம்..

Next Post

தெலுங்கில் நாயகியாக “துப்பாக்கி” பட நடிகை சஞ்சனா சாரதி !

Next Post
தெலுங்கில் நாயகியாக “துப்பாக்கி” பட நடிகை சஞ்சனா சாரதி !

தெலுங்கில் நாயகியாக “துப்பாக்கி” பட நடிகை சஞ்சனா சாரதி !

Popular News

  • நடிகர் வி ஆர் தினேஷ் நடிக்கும் 26 வது படம் பந்தா கேங்ஸ்.

    0 shares
    Share 0 Tweet 0
  • திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை மற்றும் உணர்வுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள ‘டோரதி’ திரைப்படம் உதவுகிறது”… சகோதரன் அமைப்பினர் பாராட்டு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விதார்த் நடிப்பில் மாயங்களும் மர்மங்களும் நிறைந்த “நட்சத்திரா” பட ஃபர்ஸ்ட் லுக் ! 

    5 shares
    Share 5 Tweet 0
  • ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் வி ஆர் தினேஷ் நடிக்கும் 26 வது படம் பந்தா கேங்ஸ்.

September 29, 2026

ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்

September 29, 2026

நடிகர் ரன்பீர் கபூர் பிறந்தநாளில் ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்ட சிறப்பு BTS காட்சிகள்!

September 29, 2026

அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்

September 29, 2026

கே.மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

September 29, 2026

திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

September 29, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.