• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு தடை

by Tamil2daynews
April 7, 2021
in சினிமா செய்திகள்
0
ப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு தடை
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பிரபல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றும் பாராமல் கடுமையாக விமர்சிப்பவர் ‘தமிழ் டாக்கீஸ்’ ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன்.
‘பல படங்களை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறாயே? தில் இருந்தால் நீ ஒரு படம் எடுத்துக்காட்டு. நாங்கள் அதை விமர்சிக்கிறோம்’ என்று திரைத்துறை பிரபலங்களும், முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் அவ்வப்போது சவால் விட்டு வருகின்றனர்.
அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ‘ஆன்டி இண்டியன்’ எனும் தனது முதல் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையமைத்து இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தை ஏப்ரல் 5 ஆம் தேதி, 2021 அன்று சென்சார் குழுவினர் பார்த்தனர்.
ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் ‘ஆன்டி இண்டியன்’ படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்துள்ளனர்.
அடிப்படையிலேயே சர்ச்சையான கதைக்களம் கொண்ட படங்களுக்கு இப்படி நிகழ்வது வழக்கம்.
சமீபத்தில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய அனுராக் கஷ்யப்பின் உட்தா பஞ்சாப், தீபிகா படுகோனின் பத்மாவதி போன்ற படங்களுக்கும் இதுபோன்ற நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மதம் சார்ந்த சமகால பிரச்னைகளையும், அரசியலையும்  மையப்படுத்தி அழுத்தமாகவும், நையாண்டி பாணியிலும்  எடுக்கப்பட்ட இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டி வரும் வேளையில், சென்சார் குழுவினர் இதற்குத்தடை விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தடை குறித்து  தயாரிப்பாளர் ‘மூன் பிக்சர்ஸ்’ ஆதம் பாவா கூறுகையில் ‘சென்சார் குழுவினர் அவர்களின் முடிவை சொல்லியுள்ளனர். நாங்கள் மறுதணிக்கைக்கு   மேல்முறையீடு செய்யவுள்ளோம். விரைவில் இத்தடை நீங்கி ‘ஆன்டி இண்டியன்’ படம் திரைக்கு வரும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Previous Post

ஒரு மாஸ் ஹீரோவின் கனவை காலி பண்ணிய சூர்யாவின் படம்..

Next Post

கதையின் நாயகனாக காமெடி நடிகர் சதீஸ் நடிக்கும் படம்.

Next Post
கதையின் நாயகனாக காமெடி நடிகர் சதீஸ் நடிக்கும் படம்.

கதையின் நாயகனாக காமெடி நடிகர் சதீஸ் நடிக்கும் படம்.

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் சுரேஷ் சங்கையா இந்தப் படத்தை கொடுத்தது பாக்கியமாக பார்க்கிறேன் – யோகி பாபு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ டைட்டில் டீசர் வெளியீடு… ரசிகர்களின் அமோக வரவேற்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நாயகனாக அறிமுகமாகும் ஹர்ஷவர்தன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.