• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சத்யஜோதி ஃபிலிம்ஸ் வழங்கும் “அன்பறிவு” !

by Tamil2daynews
April 17, 2021
in சினிமா செய்திகள்
0
சத்யஜோதி ஃபிலிம்ஸ் வழங்கும் “அன்பறிவு” !
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 

பன்முக திறமை கொண்ட நட்சத்திர நடிகர் ஹிப்ஹாப் ஆதி, தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான “அன்பறிவு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் அதிரடியான புதிய தோற்றத்தில் அசத்தலாக தோன்றியுள்ளார்.

அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கியுள்ள இப்படத்தினை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்  நிறுவனம் சார்பில் T.G.தியாகராஜன் தயாரித்துள்ளார்.

அனைத்து வகை ரசிகர்களும் குடும்பத்துடன் கொண்டாடும் கமர்சியல் திரைப்படமாக “அன்பறிவு” படம் உருவாகியுள்ளது. மிகபெரும் பொருட்செலவில், நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத், விதார்த், விஜய் டிவி தீனா, காஷ்மீரா, ஷிவானி ராஜசேகர் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிப்பில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி கிராமத்து பின்னணியில் மதுரை வட்டார வழக்கு பேசி நடித்துள்ளார்.

நெப்போலியன், ஹிப்ஹாப் ஆதி இணைந்து தோன்றும் காட்சிகள் படத்தின் வெகு முக்கிய அம்சமாக இருக்கும். மேலும் திரிஷியம் புகழ் ஆஷா சரத் மற்றும் காஷ்மீரா ஆகியோருடன் முன்னெப்போதும் கண்டிராத பாத்திரத்தில் விதார்த் ஆகியோர் இப்படத்தில் தோன்றியுள்ளனர்.

“அன்பறிவு”  கிராமத்து பின்னணியில் மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ரஷ்யாவின் வெகு அழகான இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது. திறமையான,  புத்தம் புது நாயகி ஷிவானி ராஜசேகர் பங்குபெறும் காட்சிகள் ரஷ்ய பின்னணியில் அனைவர் மனதையும் கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

சரியான அளவில் காமெடி, காதல், செண்டிமெண்ட், கிராம மற்றும் நகர பின்னணி என அனைத்தும் கலந்த வகையில் குடும்பத்துடன் கொண்டாடும் வகையிலான திரைப்படமாக அன்பறிவு உருவாகியிருக்கிறது.

இப்படத்தல்  ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி ரசிகர்கள் கொண்டாடும் வகையில் பாடல்கள் அருமையாக அமைந்துள்ளது.

படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் ரஷ்யா ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. 8 லிருந்து 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் படத்தினை விரைவில் வெளியிட தீவிரமான பணிகள் நடந்து வருகிறது.

பரபரப்பான ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து, சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் ட்ரெயலர் மற்றும் இசை வெளியீட்டை சிறப்பாக செய்திட திட்டமிட்டு வருகிறது.

இப்படத்தின் வசனத்தை பொன் பார்த்திபன் எழுதியுள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் E ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

 
Previous Post

கௌதம் கார்த்திக்கின் “செல்லப்பிள்ளை”  படக்குழு வெளியிட்ட நேதாஜி மோஷன் டீஸர் !

Next Post

MGR Magan Press Meet Stills

Next Post
100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்: அண்ணன் அல்லு அர்ஜூன் பாராட்டு

MGR Magan Press Meet Stills

Popular News

  • 25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

    0 shares
    Share 0 Tweet 0
  • டிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் படம் ‘ நீ சுடத்தான் வந்தியா’

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய விருது பெற்ற வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

September 27, 2026

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

September 27, 2026

மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!

September 27, 2026

காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

September 27, 2026

இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

September 27, 2026

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

September 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.