• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கோலாகலமாக துவங்கியிருக்கிறது  “தி கிரேட் இந்தியன் கிச்சன்”  தமிழ் பதிப்பு !

by Tamil2daynews
April 23, 2021
in சினிமா செய்திகள்
0
கோலாகலமாக துவங்கியிருக்கிறது  “தி கிரேட் இந்தியன் கிச்சன்”  தமிழ் பதிப்பு !
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மலையாள மொழியில் வெளியாகி இந்தியாவெங்கும் அதிர்வலைகளை கிளப்பிய, “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படம், இயக்குநர்  R.கண்ணன் இயக்கத்தில் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவிச்சந்திரன் நடிக்க தமிழில் உருவாகிறது. இயக்குநர்  R.கண்ணன் அவர்களே தனது மசாலா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. படத்தினை  ஒரே கட்டமாக படமாக்ககியுள்ளார்கள்.

கனா, கா பெ ரணசிங்கம், என தரமான வெற்றிபடங்களில் அழுத்தமான கதாப்பாத்திரம் செய்து பாராட்டுக்கள் குவித்து வரும் ஐஷ்வர்யா ராஜேஷ் இப்படத்தின் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார்

படம் குறித்து நாயகி ஐஷ்வர்யா ராஜேஷ் கூறியதாவது…

பொதுவாக ஒரு படத்தை ரீமேக் செய்வது என்பது மிகக்கடினம். படத்தின் அடிப்படை ஆத்மாவை அப்படியே கொண்டு வருவது என்பது முடியாத காரியம் அதனால் நான் நிறைய ரீமேக் நடிக்க மறுத்திருக்கிறேன். ஆனால் இந்தப்படம் என்னை தேடி வந்த போது கண்டிப்பாக செய்ய வேண்டும் என நினைத்தேன். இன்றைய சமூகத்திற்கு மிகவும் தேவையான கருத்து இப்படத்தில் இருக்கிறது. நான் கா பெ ரண்சிங்கம் படத்தில் நடித்துகொண்டிருந்தபோது ஒரு சிறு பெண்ணை சந்தித்தேன் அவளக்கு எதுவும் சொல்லாமலேயே சிறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தது. இன்றும் பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பழக்கம் நம் சமூகத்தில் இல்லை. கிராமம் நகரம் என அனைத்து இடங்களிலும் கண்டிப்பாக இப்படம் பார்க்கப்பட வேண்டும். இயக்குநர் R.கண்ணன்  அவர்களுடன் எனக்கு முதல் படம் மிகச் சிறந்த இயக்குநர், அருமையான படக்குழு படப்பிடிப்பு அனுபவம் அற்புதமாக இருக்கிறது படமும் மிகச்சிறப்பாக வரும் என்றார்.

இயக்குநர்  R.கண்ணன் படம் குறித்து கூறியதாவது….

நம் கலாச்சாரத்தில் பெண்கள் வாழ்வின் பெரும்பகுதியை சமையலறை ஆக்கிரமித்துள்ளது. இன்றைய நவநாகரீக உலகிலும் பெண்களின் அடிப்படை உணர்வுகளுக்கு எந்த மதிப்பும் இருப்பதில்லை. இதையெல்லாம் முகத்தில் அறைந்தாற்போல், அருமையாக சொல்லியிருந்தது  “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படம். பலர் இப்படத்தை தமிழில் இயக்க முயன்றார்கள் தரமான படங்களை இயக்கியிருந்ததால் என்னை நோக்கி இப்படம் வந்தது. நகரங்களில் ஆர்டர் செய்து சாப்பிடும் ஃபாஸ்ட்புட் கலாச்சாரம் வளர்ந்திருக்கிறது ஆனால் கிராமங்களில் பெண்கள் எந்நேரமும் சமையலறையில் தான் இருக்கிறார்கள் அதனால் தான் கதை காரைக்குடியில் நடப்பதாக அமைத்தேன். ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் காரைக்குடியை சேர்ந்தவர் என்பதால் படப்பிடிப்பு மிக எளிமையாக இருக்கிறது. படத்தின் ஆன்மா கெடாமல் சமூகத்திற்கு தேவையானதை சொல்வதே குறிக்கோள் என்றார்.

இயக்குநர் R.கண்ணன் இப்படத்தினை இயக்குவதுடன் Masala Pix நிறுவனத்தின் சார்பில் M.K.R.P நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

தொழில்நுட்ப குழுவினர் விபரம்

தயாரிப்பு  & இயக்கம் : R கண்ணன்

ஒளிப்பதிவு : பாலசுப்பிரமணியம்

வசனம் : சவரிமுத்து & S.ஜீவிதா சுரேஷ்குமார்.

கலை இயக்கம் : ராஜ்குமார்

உடை வடிவமைப்பு : பிரதீபா பாண்டியன்

புரொடக்சன் எக்ஸிக்யூட்டிவ் : அய்யாபிள்ளை

எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் : ஓம்சரண்

மக்கள் தொடர்பு : ஜான்சன்

Previous Post

‘சின்ன கலைவாணர்’ விவேக் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய ‘கும்பாரி’ படக்குழுவினர்..

Next Post

மூன்று நண்பர்களை காதலிக்கும் நாயகியாக மேக்னா நடிக்கும் ‘நான் வேற மாதிரி’..!

Next Post
மூன்று நண்பர்களை காதலிக்கும் நாயகியாக மேக்னா நடிக்கும்  ‘நான் வேற மாதிரி’..!

மூன்று நண்பர்களை காதலிக்கும் நாயகியாக மேக்னா நடிக்கும் 'நான் வேற மாதிரி'..!

Popular News

  • நடிகர் வி ஆர் தினேஷ் நடிக்கும் 26 வது படம் பந்தா கேங்ஸ்.

    0 shares
    Share 0 Tweet 0
  • திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை மற்றும் உணர்வுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள ‘டோரதி’ திரைப்படம் உதவுகிறது”… சகோதரன் அமைப்பினர் பாராட்டு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் வி ஆர் தினேஷ் நடிக்கும் 26 வது படம் பந்தா கேங்ஸ்.

September 29, 2026

ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்

September 29, 2026

நடிகர் ரன்பீர் கபூர் பிறந்தநாளில் ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்ட சிறப்பு BTS காட்சிகள்!

September 29, 2026

அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்

September 29, 2026

கே.மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

September 29, 2026

திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

September 29, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.