• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பாலையா, ஆச்சர்யத்தில் குதூகலித்த விஜய் தேவரகொண்டாவின் LIGER ( saala Crossbreed ) படக்குழு  ! 

by Tamil2daynews
September 24, 2021
in சினிமா செய்திகள்
0
படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பாலையா, ஆச்சர்யத்தில் குதூகலித்த விஜய் தேவரகொண்டாவின் LIGER ( saala Crossbreed ) படக்குழு  ! 
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் LIGER ( saala Crossbreed ) படத்தை கமர்ஷியல் கிங் இயக்குநராக புகழப்படும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோவாவில் துவங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சண்டை கலைஞர்கள் பங்குகொள்ள,  படத்தின் அதிரடியான சண்டைக்காட்சிகள் மற்றும் படத்தின் மிக முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்திற்கு, எதிர்பாராத  சிறப்பு விருந்தினர் வந்து, படக்குழுவினர் அனைவரையும்  ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நரசிம்மா நந்தமூரி பாலகிருஷ்ணா படப்பிடிப்பை பார்வையிட்டு குழுவினரை வாழ்த்தியுள்ளார். அவர் நடிக்கும் Akhanda  படத்தின் படப்பிடிப்பும் கோவாவுக்கு அருகில் தான் நடைபெற்று வருகிறது.
படத்திற்கு போடப்பட்டிருந்த பிரமாண்ட செட்டை பார்வையிட்ட பாலகிருஷ்ணா தயாரிப்பாளர்களை வியந்து பாராட்டினார். படத்தை மிகப்பிரமாண்ட வகையில் உருவாக்கும் தயாரிப்பாளர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். விஜய் தேவரகொண்டாவின் வித்தியாசமான லுக் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக தெரிவித்த பாலகிருஷ்ணா படக்குழுவினரை ஆசிர்வதித்துடன், படம் ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நடிகர் விஜய் தேவரகொண்டா முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைகளில் சிறப்பு பயிற்சி எடுத்து, இந்த ஸ்போர்ட்ஸ் ஆக்சன் திரில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கிறார்.
Puri connects நிறுவனத்துடன்,  இந்த பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படத்தினை பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான Dharma Productions  இணைந்து தயாரிக்கிறது.
இந்தியளவில் பன்மொழி திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை Puri connects மற்றும் Dharma Productions நிறுவனங்கள் இணைந்து மிகப்பெரும் பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான படைப்பாக உருவாக்குகின்றனர்.
மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
 பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்கள்.
ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் மிக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். லைகர் (Liger) படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகிறது.
நடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு.
இயக்கம் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா
தயாரிப்பு நிறுவனங்கள் : Puri connects and Dharma Productions
ஒளிப்பதிவாளர்- விஷ்ணு சர்மா
கலை இயக்கம்- ஜானி சையிக் பாட்ஷா
படதொகுப்பாளர்- ஜுனைத் சித்திக்
சண்டை காட்சிகள் இயக்குனர்- Kecha
Previous Post

‘Veerapuram 220’ Movie Stills

Next Post

மறைந்த சில்க் ஸ்மிதாவை மறக்காத திரையுலகம்..

Next Post
மறைந்த சில்க் ஸ்மிதாவை மறக்காத திரையுலகம்..

மறைந்த சில்க் ஸ்மிதாவை மறக்காத திரையுலகம்..

Popular News

  • முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • நண்பன் அழைத்து வராமல் இருக்க முடியுமா? – அதிரடி பட விழாவில் சஞ்சு சாம்சன்..!!

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் (Vels Film International) தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கும் புதிய படம் கோலகல ஆரம்பம் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE5 ஒரிஜினல் சீரிஸ் வழங்கும், பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” சீரிஸ் டிரெய்லர் அறிமுக விழா !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.டி. நாயுடு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது!

May 24, 2026

நடிகர் மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, ஜியோஹாட்ஸ்டார் ‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ திரைப்பட விழாவில் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஸ்ட்ரீம் செய்து கொண்டாடுகிறது!

May 24, 2026

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஒய் ஜீ எம்-ன் ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்

May 24, 2026

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

May 24, 2026

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

May 24, 2026

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

May 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.