• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

by Tamil2daynews
November 12, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

 

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் அதிரடித் திரைப்படமான ‘மக்கள் காவலன்’ (Makkal Kaavalan) திரைப்படத்திலிருந்து ‘இக்னோர் – IGNORE’ எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் கே. மணிகண்டன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை சந்தோஷ்குமார் எழுதி, இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘இக்னோர் – IGNORE’ பாடலுக்கு ‘தமிழ் ஹிப் ஹாப்பின் தந்தை’ (Godfather of Tamil Hip-Hop) என அழைக்கப்படும் மலேசிய ராப்பர் யோகி பி (Yogi B), நடிகையும் பாடகியுமான அதிதி ஷங்கர், நிவாஸ் கே. பிரசன்னா ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளதுடன், பாடலுக்கான இசை ஒருங்கிணைப்பு மற்றும் நிரலாக்கப் பணிகளையும் (Arrangements & Programming) மேற்கொண்டுள்ளார். பாடல் வரிகளைப் பாடலாசிரியர் எம். கே. பாலாஜி எழுதியுள்ளார்.

இத்திரைப்படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் (Think Music) நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
ஒவ்வொரு கட்டத்திலும் புறக்கணிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்படும் ஒரு காவல்துறை அதிகாரியின் கதையைச் சொல்லும் ‘இக்னோர் – IGNORE’.தொடர்ந்து ஒலிக்கும் அதிரடி ராப் இசையால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வலியால் முடங்கிவிடாமல், அதிலிருந்து மீண்டெழும் மன உறுதியை வெளிப்படுத்தும் ஒரு ராப் பாடலாகும் (Rap-driven anthem). காயங்களுக்கும் உறுதியான தீர்மானத்திற்கும் இடையே ஊசலாடும் இந்தப் பாடலில், தன்னை மனதளவில் காயப்படுத்திய அதே காயங்களிலிருந்தே அவர் வலிமையைப் பெறுகிறார்; அந்த மாற்றத்திற்கு ராப் இசை கூடுதல் வீரியத்தை அளிக்கிறது. பாடலின் ஒரு பகுதியில் இடம்பெறும் நாட்டுப்புறச் சடங்கு மரபைச் சார்ந்த இசை, ஒருவிதமான இயல்பான மண்ணின் மணத்தையும் உணர்வையும் வெளிப்படுத்துகிறது. அதனைத் தொடர்ந்து, ‘பறை’ இசையின் முழக்கத்துடன் பாடல் மீண்டும் எழுச்சி பெற்று, எதிர்ப்புணர்வையும் துணிச்சலையும் வெளிப்படுத்தும் உச்சத்தை அடைகிறது. மீண்டெழும் மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் உரத்துப் பேசும் இந்தப் பாடல், பாதிக்கப்பட்ட ஒருவர் எப்படி வெற்றியாளராக மாறுகிறார் என்பதையும் உணர்த்துகிறது.

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் பா. ரஞ்சித், அதிதி ஆனந்த் ஆகியோரின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தை சந்தோஷ்குமார் எழுதி, இயக்கியுள்ளார். கண்ணியத்துடன் வாழ விரும்பும் ஒரு சாதாரண மனிதன், ஊழல்கள் நிறைந்த அமைப்பால் ‘சரணடைதல்’ அல்லது ‘எதிர்த்து நிற்றல்’ என்ற இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்படுகிறான். உயிர் வாழ்வதற்கான ஒரு தனி மனிதனின் போராட்டம், காலப்போக்கில் மிகப்பெரிய பரிமாணத்தை எட்டுகிறது. இதனால், தான் விரும்பாத ஒரு சூழலில் அவன் ஒரு தலைவனாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. போராட்டம் தீவிரமடைந்து, எதிர்ப்புக்கான விலை அதிகரிக்கும்போது, ஒரு சாதாரண மனிதனுக்கும் மக்களின் காவலனுக்கும் இடையிலான எல்லை மறையத் தொடங்குகிறது.

ஒரு சாதாரண மனிதன் எப்படி மக்களின் காவலனாக மாறுகிறான் என்பதை உணர்த்தும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் அறிமுகமாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Previous Post

லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Next Post

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!

Next Post

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!

Popular News

  • ராமாயணா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

    0 shares
    Share 0 Tweet 0
  • டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

November 12, 2026

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!

November 12, 2026

பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

November 12, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

November 12, 2026
ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

November 12, 2026

ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இயக்குநராக அறிமுகமாகும் ‘வன மடி’

November 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.