• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சூர்யாவின் “சூரரைப்போற்று”

by Tamil2daynews
September 24, 2021
in சினிமா செய்திகள்
0
விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சூர்யாவின் “சூரரைப்போற்று”
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ சர்வதேச திரைப்பட விழாக்கள் மற்றும் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாக்களில் கலந்துகொண்டு தொடர்ந்து விருதுகளை குவித்து வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒன்பதாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது (SIIMA) வழங்கும் விழாவில் ‘சூரரைப்போற்று’ ஏழு விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கிறது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்தாண்டில் அமேசான் ப்ரைம் டிஜிட்டல் தளத்தில் வெளியான திரைப்படம் ‘சூரரை போற்று’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்த ‘சூரரை போற்று’ 78 ஆவது கோல்டன் குளோப் விருதிற்கான போட்டிப்பிரிவில் இந்தியா சார்பில் திரையிட தேர்வானது. அதையடுத்து மெல்பேர்ன் நகரில் நடைபெற்ற 12-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறந்த படமாக ‘சூரரைப்போற்று’ தேர்வு செய்யப்பட்டது. அத்துடன் சிறந்த நடிகராக நடிகர் சூர்யா தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒன்பதாவது சைமா (SIIMA) விருது வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படங்களுக்கான பல்வேறு பிரிவுகளில் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் இடம்பெற்றது.  இதில் சிறந்த நடிகர், சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை (விமர்சகர்), சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி பாடகர் ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்று, ஏழு விருதுகளை வென்றிருக்கிறது.

இதற்காக ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில்‌ 2டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், இயக்குநர் சுதா கொங்கரா, இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார், நடிகை அபர்ணா பாலமுரளி, ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, பாடகர் ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதனிடையே சிறந்த படங்களுக்கான ஐஎம்டிபி எனப்படும் சர்வதேச திரைப்படங்களை வரிசைப்படுத்தும் இணையதள பட்டியலில் அதிக மதிப்பீடு செய்யப்பட்ட மூன்றாவது படமாக ‘சூரரை போற்று’ (9.1) பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

OTT யில் களமிறங்கும் நடிகை  சாந்திப்பிரியா !

Next Post

டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை அள்ளிய ‘ஷார்ட் கட்’..!

Next Post
டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை அள்ளிய ‘ஷார்ட் கட்’..!

டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை அள்ளிய 'ஷார்ட் கட்'..!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மூன்வாக்’ மூலம் நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.