• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தன் மகன் விவாகரத்து பற்றி நடிகர் நாகர்ஜுனா உருக்கமான பதிவு..

by Tamil2daynews
October 4, 2021
in சினிமா செய்திகள்
0
தன் மகன் விவாகரத்து பற்றி நடிகர் நாகர்ஜுனா உருக்கமான பதிவு..
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து குறித்து நடிகரும் சமந்தாவின் மாமனாருமான நாகர்ஜூனா உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார். நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கிறிஸ்துவ, இந்து முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இந்த நிலையில் தாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் இன்றும் தங்கள் சமூக வலைதளத்தில் அறிவித்து இருந்தனர். ஆனால், அதில் என்ன காரணத்திற்காக இருவரும் பிரிகின்றனர் என்பதை இருவருமே சொல்லவே இல்லை.
மாறாக தாங்கள் இருவரும் நண்பர்களாக தொடருவோம் என்றும் தங்களின் இந்த முடிவுக்கு நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் மீடியா என அனைவருமே தங்களின் இந்த முடிவுக்கும் எங்களின் பிரைவசிக்கும் மதிப்பு கொடுங்கள் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். வரும் 7 ஆம் தேதி இவர்களின் 4வது திருமணம் நாள் கொண்டாடபட இருந்த நிலையில் இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சமந்தா மற்றும் தனது மகனின் விவாகரத்து குறித்து நடிகர் நாகர்ஜுனா மிகவும் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், மிகவும் கனத்த இதயத்துடன் இதை நான் சொல்கிறேன். சமந்தாவிற்கும் சைத்தன்யாவிற்கும் இடையே நடந்தது ஒரு எதிர்பாராத விஷயம். ஒரு கணவன் மனைவிக்குள் நடக்கும் விஷயம் மிகவும் தனிப்பட்ட ஒரு விஷயம்.சமந்தா மற்றும் சைதன்யா இருவருமே எனக்கு பிடிக்கும். என்னுடைய குடும்பம் சமந்தா உடன் இருந்த அழகான தருணங்களை என்றும் நினைவில் கொள்ளும்.
இருவரையும் கடவுள் ஆசீர்வதித்து அவர்களுக்கு வலிமையை கொடுக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட நாகர்ஜுனா, தனது தந்தையின் நினைவு நாளை ஒட்டி தனது தந்தை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதை சமந்தா அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் மிகவும் அழகாக இருப்பதாக பதிவிட்டிருந்தார். பின் திடீரென அந்த பதிவை நீக்கிய சமந்தா ‘மிகவும் அழகாக இருக்கிறது மாமா’ என குறிப்பிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Previous Post

30 வருடங்கள் கடந்தும் கலையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் விச்சு விஸ்வநாத்

Next Post

*அஜித் வீட்டின் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி . போலீசார் தடுத்து நிறுத்தி கைது.*

Next Post
*அஜித் வீட்டின் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி . போலீசார் தடுத்து நிறுத்தி கைது.*

*அஜித் வீட்டின் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி . போலீசார் தடுத்து நிறுத்தி கைது.*

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.