• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரியின் ஆசிரியர் பணிக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியுமெனும் அரசின் உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்* | நாம் தமிழர் கட்சி

by Tamil2daynews
October 17, 2021
in செய்திகள்
0
தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரியின் ஆசிரியர் பணிக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியுமெனும் அரசின் உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்* | நாம் தமிழர் கட்சி
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழ்நாடு அரசால் கொளத்தூர் தொகுதியில் அண்மையில் தொடங்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆசிரியர் மற்றும் பல்வேறு பணிகளுக்காக நடைபெறவிருக்கும் நேர்முகத்தேர்விற்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. அரசுக்குச் சொந்தமான கலைக்கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க முடியுமென மதத்தீண்டாமையோடு கொடுக்கப்பட்டுள்ள திமுக அரசின் அறிவிப்பு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டிலுள்ள எந்த ஓர் அரசு கல்லூரியிலும் வெளிப்படையாக இதுவரை கடைப்பிடிக்கப்படாத மதத்தீண்டாமை தற்போது திமுக அரசின் இந்து சமய அறநிலையத்துறையால் தொடங்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடைப்பிடிக்கப்படுவது வெட்கக்கேடானது. தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமன்றி, தமிழ்நாட்டில் மதம் சார்ந்த அமைப்புகளால் நிருவகிக்கப்படும் கல்வி நிறுவனங்களிலும்கூட, மாற்று மதங்களைச் சேர்ந்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் பணிபுரிந்துவரும் வேளையில், அரசு சார்பில் தொடங்கப்பட்ட கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே பணிபுரிய வாய்ப்பளித்து, மற்ற மதத்தினர் பணிபுரியத் தடைவிதிப்பது திமுக அரசின் மதச்சார்பின்மை முகமூடியைத் தோலுரிக்கிறது.
முதல்வருடைய சொந்தத்தொகுதியில் தொடங்கப்பட்ட அரசு கல்லூரியில் நடைபெறும் இத்தகைய மதத்தீண்டாமை முதலமைச்சருக்குத் தெரியாமல் நடைபெறுகிறதா? அல்லது முதல்வர் உத்தரவின் பெயரில் நடைபெறுகிறதா? சமத்துவம், சமூகநீதி என வாய்கிழியப்பேசி, பெரியார் வழியில் செயல்படுவதாகவும், மதச்சார்பற்ற ஆட்சி நடத்துவதாகவும் மார்தட்டும் திமுக அரசின் முற்போக்கு செயல்பாடு இதுதானா? இசுலாமிய,கிருத்துவ மக்களின் பாதுகாவலெனக் கூறிக்கொண்டு வாக்குவேட்டையாடும் திமுக, இந்துக்கள் மட்டுமே பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பது மதஒதுக்கல் இல்லையா? இதுதான் இசுலாமிய, கிருத்துவ மக்களைப் பாதுகாக்கிற இலட்சணமா? 90 விழுக்காடு இந்துக்களின் கட்சியெனக் கூறிக்கொள்ளும் திமுக பெரும்பான்மை மதவாதத்தைக் கையிலெடுக்கிறதா? என நீளும் கேள்விகளுக்கு என்ன விடையுண்டு!
ஆகவே, ஆளும் திமுக அரசு இத்தகைய மதஒதுக்கல் போக்கைக் கைவிட்டு, கொளத்தூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்காக நடைபெறவிருக்கின்ற, ஆசிரியர் மற்றும் அனைத்துப் பணியாளர் தேர்வுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பினை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Previous Post

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி S தாணு தயாரிக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

Next Post

எதிர்பார்ப்பை உண்டாக்கிய மஞ்சு வாரியர்-கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட டீசர்

Next Post
எதிர்பார்ப்பை உண்டாக்கிய மஞ்சு வாரியர்-கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட டீசர்

எதிர்பார்ப்பை உண்டாக்கிய மஞ்சு வாரியர்-கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட டீசர்

Popular News

  • ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

    0 shares
    Share 0 Tweet 0
  • புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 3, 2026

ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

August 3, 2026

புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

August 3, 2026

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

August 3, 2026

கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு

August 3, 2026

பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

August 3, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.