அறிமுக இயக்குனர் அர்ஜுனன் ஏகலைவன் இயக்கிய க்ரைம் திரில்லர் படமான ஊமைச் செந்நாயின் டீசரை மஞ்சு வாரியர் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இருவரும் அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
மற்ற டீசர்களை போல் வசனங்களால் நிரப்பாமல் மியூசிக்கல் டீசராக இதனை புதுமையாக இயக்குனர் அர்ஜுனன் ஏகலைவன் செய்துள்ளார்..

நடிப்புத் திறமையை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கக்கூடிய மஞ்சு வாரியரும் புதிய கதைக்களங்களில் படங்களை இயக்கி நடிகர்களின் நேர்த்தியான நடிப்பை வெளிக்கொண்டு வருவதில் சிறந்தவரான கார்த்திக் சுப்புராஜும் இந்த டீசரை வெளியிட்டது இவர்களின் ரசிகர்களிடையே ஊமைச் செந்நாய் திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
*நடிகர்கள்*
*மைக்கேல் தங்கதுரை* ; (பர்மா படத்தில் நாயகனாக நடித்தவர்.- N4 & Ward 126 படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ளன)
*சனம் ஷெட்டி* ; (பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பின்னர் வெளியாகும் முதல் படம்)
*தொழில்நுட்ப கலைஞர்கள்*
*ஒளிப்பதிவு* ; கல்யாண் வெங்கட்ராமன்
*இசை* ; சிவா
*படத்தொகுப்பு* ; அதுல் விஜய்