• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

INFINITI FILM VENTURES வழங்கும், விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும்,மழை பிடிக்காத மனிதன் ( சலீம் 2 ) !

by Tamil2daynews
November 9, 2021
in சினிமா செய்திகள்
0
INFINITI FILM VENTURES வழங்கும், விஜய்  மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும்,மழை பிடிக்காத மனிதன் ( சலீம் 2 ) !
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘சலீம்’  திரைப்படம், தமிழ் சினிமாவில் தனிச்சிறப்பான  ஒரு திரைப்படமாகும். விமர்சன ரீதியில் பாராட்டுக்களை குவித்த இந்த திரைப்படம், வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மிகச்சிறப்பான திரைக்கதைக்காகவும், உணர்வுப்பூர்வமான கதைக்காகவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது இத்திரைப்படம். விஜய் ஆண்டனியின் அற்புதமான நடிப்பு திரையரங்குகளில் கைதட்டல்களையும், விசில் சத்ததையும் குவித்தது. தற்போது பன்முக திறமை கொண்ட கலைஞரான விஜய் ஆண்டனி சலீம் படத்தின் அடுத்த பாகமான “மழை பிடிக்காத மனிதன் “   படத்தில் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார். இப்படத்தை ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன்  எழுதி, இயக்குகிறார். ஆக்சன், கமர்ஷியல் படமாக உருவாகவுள்ள இப்படம், முதல் முறையாக தாமன் & தியூ பகுதியில் படமாக்கப்படும் முதல் தமிழ்படம் ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகிறது, 2022 ஆம் ஆண்டு மத்தியில் இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. திரையை தன் அழகால் வசியப்படுத்தும் தேவதை, மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மிக முக்கியமான பாத்திரமொன்றில் நடிக்கிறார். கன்னட திரையுலகின் மிக திறமை வாய்ந்த இரண்டு நடிகர்களான தனஞ்செயா மற்றும் ப்ருத்வி அம்பர் இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்கள். இத்திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா திறமை மிகுந்த நடிகர்களின் அற்புதமான நடிப்பை திரையில் காணவுள்ளது. மேலும் சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சுரேந்தர் தாகூர் பிரணிதி ஆகியோரும் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குநர் ரமணா ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார்.

விஜய் ஆண்டனி மற்றும் விஜய் மில்டன்  திரைப்படங்களில் எப்போதும் ஒரு பொதுவான அம்சம் இருக்கும், வித்தியாசமான கதைக்களம் மற்றும் மனதைக் கவரும் ஆக்சன்  காட்சிகள் இவர்கள் படத்தில் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் இந்த இரண்டு அம்சங்களுடன், மழை பிடிக்காத மனிதன் படத்தில், பிரமிக்க வைக்கும்  அதிரடி காட்சிகளோடு  ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது படக்குழு. தான் நடிக்கும் படங்களில் எப்போதும்  குறைந்த வசனங்கள் கொண்ட கதாபாத்திரத்தில்,  தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி, அசத்தி வருகிறார் பன்முக கலைஞரான  விஜய் ஆண்டனி. எப்போதும் நம்பிக்கையூட்டும் கதைக்களங்களுடன் வரும் விஜய் மில்டன், கதாநாயகனின் வாழ்க்கையில் பத்து அத்தியாயங்களை காலவரிசைப்படி கடந்து செல்லும் ஒரு தனித்துவமான கதைக்களத்தை, மழை பிடிக்காத மனிதன் படத்தில் உருவாக்கியுள்ளார். இந்தத் தலைப்பு வந்தவுடனேயே, மழை பிடிக்காத மனிதன் , சலீம்-2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்குமா ?  என பல கேள்விகள் இயல்பாகவே தோன்றும். அதனை தெளிவுபடுத்தும் விதமாக  இந்தப் படம் சலீம் படத்தின் நேரடித் தொடர்கதை என்றும் தயாரிப்பாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

இப்படத்தை எழுதி இயக்குவது மட்டுமின்றி, ‘மழை பிடிக்காத மனிதன் (சலீம்-2) படத்துக்கு விஜய் மில்டன் ஒளிப்பதிவும் செய்கிறார். விஜய் ஆண்டனி பாடல்களுக்கு இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையை கவனிக்கிறார். படத்தொகுப்பாளராக லியோ ஜான்பால், கலை இயக்குநராக K.ஆறுசாமி, ஸ்டண்ட் மாஸ்டராக சுப்ரீம் சுந்தர், நடன இயக்குநராக ஸ்ரீதர், ஸ்டில்களை மகேஷ் ஜெயச்சந்திரன், விளம்பர வடிவமைப்பாளராக பவன் (சிந்து கிராபிக்ஸ்), ஆடை வடிவமைப்பாளராக ஷிமோனா ஸ்டாலின். பணிபுரிகின்றனர்.

“மழை பிடிக்காத மனிதன்” கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் B, பங்கஜ் போஹ்ரா மற்றும் ,  S. விக்ரம் குமார் of INFINITI FILM VENTURES ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

Previous Post

ராசக்கண்ணு மனைவிக்கு வீடு கட்டித் தருவதாக ராகவா லாரன்ஸ் அறிவிப்பு.

Next Post

16 வருடங்களுக்கு பின் நடிக்க வரும் ‘வண்ண வண்ண பூக்கள் வினோதினி !

Next Post
16 வருடங்களுக்கு பின் நடிக்க வரும் ‘வண்ண வண்ண பூக்கள் வினோதினி !

16 வருடங்களுக்கு பின் நடிக்க வரும் ‘வண்ண வண்ண பூக்கள் வினோதினி !

Popular News

  • கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படப்பிடிப்பு அவருடைய பிறந்தநாளில் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குனர் சீனுராமசாமியிடம்  துணை இயக்குனராக பணியாற்றிய தயானந்தன் இயக்குனராக திரையுலகில் தடம் பதிக்கிறார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • 200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படம் (VEGULI) நவம்பர் 20 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

November 8, 2026

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

November 8, 2026

‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

November 8, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

November 8, 2026

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

November 8, 2026

ராமாயணா – விமர்சனம்

November 8, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.