• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இயக்குனர் சீனுராமசாமியிடம்  துணை இயக்குனராக பணியாற்றிய தயானந்தன் இயக்குனராக திரையுலகில் தடம் பதிக்கிறார்.

by Tamil2daynews
February 21, 2020
in சினிமா செய்திகள்
0
இயக்குனர் சீனுராமசாமியிடம்  துணை இயக்குனராக பணியாற்றிய தயானந்தன்  இயக்குனராக  திரையுலகில் தடம் பதிக்கிறார்.
0
SHARES
153
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழிசை தந்த உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் மகன் ‘சாதக பறவைகள்’ சங்கர் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்
வார்வின் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஐ ராஜா தயாரிக்க, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர் பறவை’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட படங்களில் முன்னணி இயக்குனர் சீனுராமசாமியிடம்  துணை இயக்குனராக பணியாற்றிய தயானந்தன் இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் தடம் பதிக்கிறார்.இத்திரைப்படம் இன்றைய காலகட்டத்தில், மனித வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்து கொண்டிருக்கும் மதுவுக்கு அடிமையான ஒருவர், தன்னை உணர்ந்து, அதிலிருந்து விடுபட்டு, முன்னெடுக்கும்  புரட்சிகரமான நடவடிக்கைகளை தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டுகிறது.  தனிமனித வாழ்வின் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ஒரு முக்கியமான திரைப்படமாக இது அமையும்.

சாஸ்திரீய இசை அனைவருக்கும் புரியவில்லை என்ற போதிலும், ராகத்திலும் தாளத்திலும் மயங்கி, மொழியும் அர்த்தமும் புரியாமல் ரசித்து வந்த நிலையில்,  எளிய தமிழில் உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களின் இசைப்பங்களிப்புப் போற்றுதலுக்குரியது. பெரும்பாலும் பக்தி இலக்கிய படைப்புகளை உருவாக்கிய அவர், திருவாசகம், பன்னிரு திருமுறைகளுக்கு அப்பாற்பட்டு எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளத்தக்க வகையில் பாடல்களை உருவாக்கினார்.

அவரது மகனான ‘சாதக பறவைகள்’ இசைக்குழு அமைப்பாளர் சங்கர், உலகெங்கிலும் சுமார் 8000 க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்திய பெருமைக்குரியவர், தொடர்ந்து நடத்தியும் வருகிறார். தீவிர இசை ரசிகர், பல்வேறு இசை வடிவங்களில் முறையான தேர்ச்சி பெற்றவர். அறிமுகமாகும் முதல் படத்திலேயே பல புதுமைகளை புகுத்தியிருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் தீரத் தீர் எனும் முதல் பாடல் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் ‘அக்கப்பல்லா’ என்றழைக்கப்படும் பாரம்பரிய முறையில், மிகக் குறைவான இசைக்கருவிகளின் துணையுடன், வாய்மொழியாகவே ஒரு முழுப்பாடலையும் வடிவமைத்திருக்கிறார். இப்பாடலை வைரபாரதி எழுதியிருக்கிறார்.

இப்படத்தில் விஜய் டிவி புகழ் பிராஜின், அறிமுக நாயகி ரியாமிகா, இயக்குனர் கே பாக்யராஜ், இமான் அண்ணாச்சி மற்றும் ஷகிலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

வார்வின் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் தயானந்தன் இயக்கத்தில், உருவாகியுள்ள ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில், வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

Previous Post

மதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் “தேரும் போரும்”

Next Post

“ரஜினிகாந்தை யார் நீங்கள்” என கேள்வி கேட்ட இளைஞர் பைக் திருட்டு வழக்கில் கைது*

Next Post
“ரஜினிகாந்தை யார் நீங்கள்” என கேள்வி கேட்ட இளைஞர் பைக் திருட்டு வழக்கில் கைது*

"ரஜினிகாந்தை யார் நீங்கள்" என கேள்வி கேட்ட இளைஞர் பைக் திருட்டு வழக்கில் கைது*

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • மஞ்சு விரட்டு பின்னணியில் விமல் நடிப்பில் உருவாகும் “வடம்”!!

    0 shares
    Share 0 Tweet 0
  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

May 30, 2026

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

May 30, 2026

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

May 30, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

May 30, 2026

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.