
கடந்த 5 நாட்களாக காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்து வரும் தலைநகரான சென்னையில் வசிக்கும் மக்கள் மிகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் .



அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவ்வப்போது அரசு உதவி செய்தாலும் உதவி செய்வதில் வல்லவரான நாம் தமிழர் சீமான் அவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் மக்களுக்கும் நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறியும் ஒரு வேளை உணவு அளித்து உபசரித்து வந்துள்ளார்.


தற்போது 11.11.2021 கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள #வில்லிவாக்கம் சத்யா நகர், வள்ளியம்மை நகர் கொளத்தூர் ஜி கே எம் குடியிருப்பு பகுதிகளில், பாதிக்கப்பட்டுள்ள மக்களை, தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.









