• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

*பாகுபலி-2 விநியோக நிறுவனமான கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் மாநாடு திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடுகிறது*

by Tamil2daynews
November 17, 2021
in சினிமா செய்திகள்
0
*பாகுபலி-2 விநியோக நிறுவனமான கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் மாநாடு திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடுகிறது*
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பல வெற்றிப்படங்களை வெளிநாடுகளில் விநியோகித்துள்ள கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ், எஸ்டிஆர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடவுள்ளது. அங்குள்ள 150-க்கும் மேற்பட்ட இடங்களில் மாநாடு வெளியாகும்.
பாகுபலி-2 திரைப்படத்தை 1000-க்கும் அதிகமான திரைகளில் 2017-ம் ஆண்டு வெளியிட்ட கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ், பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ராதே ஷியாம் படத்தை 2022 ஜனவரியில் விநியோகிக்க உள்ளது.
2021-ம் ஆண்டில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட படங்களை கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் விநியோகித்துள்ளது. பெருந்தொற்றின் போது தற்காலிகமாக மூடப்பட்ட திரையரங்குகள் 2021-ல் மீண்டும் திறக்கப்பட்ட போது, அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்களில் முதல்முறையாக தென்னிந்திய திரைப்படங்களை வெளியிட்டதும் கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் நிறுவனமே ஆகும்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தில் இது வரை ஏற்றிராத வேடத்தில் எஸ்டிஆர் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷினி கதாநாயகியாக நடிக்க, காவல் அதிகாரி பாத்திரத்தை எஸ் ஜே சூர்யா ஏற்றுள்ளார்.
அதிரடி ஆக்‌ஷன் திரில்லரான மாநாட்டில் அறிவியல் புனைவும் உண்டு. வி ஹவுஸ் புரொடக்‌ஷனின் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்தின் டிரைலர் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
2001-ம் ஆண்டு தனது வெளிநாட்டு விநியோக பயணத்தை ஆரம்பித்த கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ், அயல்நாட்டு திரைப்பட விநியோகத்தில் 20-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒரு முன்னணி நிறுவனமாகும்.
பல்வேறு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி, பல இந்திய திரைப்படங்களை அமெரிக்காவில் வெளியிட்டிருப்பதோடு, நமது படங்களின் பிரிமியர் காட்சிகளை முதல்முறையாக அந்நாட்டில் கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் அறிமுகப்படுத்தியது.
தரவுகள் மற்றும் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் திட்டமிட்டு சரியான நேரத்தில் சரியான இடங்களில் திரைப்படங்களை வெளியிடும் நிபுணத்துவம் கிரேட் இந்தியா ஃபிலிம்ஸுக்கு உண்டு. மேலும் விவரங்களுக்கு www.greatindiafilmsusa.com எனும் இணையதளத்தை பார்க்கவும்.
Previous Post

மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் “நாம் தமிழர்” சீமான் வலியுறுத்தல்…!

Next Post

*குழந்தைகள், முதியோர் 500 பேருக்கு உணவளித்து பிறந்தநாளை கொண்டாடிய  இ.வி.கணேஷ்பாபு*

Next Post
*குழந்தைகள், முதியோர் 500 பேருக்கு உணவளித்து பிறந்தநாளை கொண்டாடிய  இ.வி.கணேஷ்பாபு*

*குழந்தைகள், முதியோர் 500 பேருக்கு உணவளித்து பிறந்தநாளை கொண்டாடிய  இ.வி.கணேஷ்பாபு*

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.