• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி மற்றும் தமிழ்படம் புகழ் C.S.அமுதன் இணையும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது ! 

by Tamil2daynews
November 25, 2021
in சினிமா செய்திகள்
0
விஜய் ஆண்டனி மற்றும் தமிழ்படம் புகழ் C.S.அமுதன் இணையும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது ! 
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Infiniti Film Ventures தயாரிப்பில், விஜய் ஆண்டனி மற்றும் தமிழ்படம் புகழ் C.S.அமுதன் இணையும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது !
நடிகர் விஜய் ஆண்டனி உடைய அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பு, ரசிகர்களிடமட்டுமல்லாது,  வணிக வட்டாரத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.  அவரது  படங்களும், அதன் கதைகளங்களும் மக்களிடம் எளிதில்  சென்று சேரும்படி மிக கவர்ச்சிகரமான படைப்புகளாக அனைவரையும் கவர்ந்து வருகிறது. அவரது மிக இயல்பான  நடிப்பால், ரசிகர்கள்  மனதில் தனி இடத்தை பெற்றிருக்கிறார்.  இதற்கெல்லாம் சமீபத்திய பேருதாரணமாக ” கோடியில் ஒருவன் ” திரைப்படம் அமைந்துள்ளது.  மேலும், அவரது படங்கள் பெரும் லாபம் ஈட்டுவதால் மட்டும் தயாரிப்பாளர்களுக்கான நடிகராக  ஆகவில்லை, அவரது ஒழுக்கம், நேரம் தவறாமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்க, படக்குழுவிற்கு பெரிதும் உதவும் அம்சமாக இருக்கிறது.  மேலும், பல படங்களில், இடைவேளை இல்லாமல் தொடர்ந்து  நடித்து கொண்டிருப்பதால், தமிழ் சினிமாவின் பிஸியான நடிகராக மாறி இருக்கிறார். வணிக வட்டாரங்கள் 2022-ல் அவரது நடிப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படங்கள் மிகவும் லாபகரமாக  அமையும் என உறுதியாக நம்புகின்றனர். இந்த தருணத்தில்,  விஜய் ஆண்டனியும், “தமிழ்படம்” புகழ் C.S.அமுதன் அவர்களும் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை (நவம்பர் 25, 2021) பூஜையுடன் துவங்கியது. இந்த விழாவில் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழு கலந்து கொண்டனர்.
இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது ‘தமிழ்ப் படம்’ மூலம் தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய வகை ஜானரை அறிமுகப்படுத்தினார்.  அதே போல்  இந்த புதிய  படத்தின் மூலம் வித்தியாசமான முறையில், பார்வையாளர்களை கவர்வார்.
Infiniti Film Ventures தயாரிப்பாளர்கள் கமல் போரா, G.தனஞ்செயன், B. பிரதீப் மற்றும் பங்கஜ் போரா ஆகியோர் பல தயாரிப்பளார்களுக்கு முன்மாதிரியாக விளங்குகின்றனர்.  தயாரிப்பாளர்களின் பணி ஒரு படத்திற்கு நிதியளிப்பது மட்டுமல்ல, சரியாக வியாபாரம் செய்வதும் மற்றும் விளம்பரப் பணிகளுடன்  திரைப்படத்தின் சுமூகமான வெளியீட்டை உறுதி செய்வதும் தான் என்பதை அவர்கள் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர்.
இப்படத்தில் ஒரு முன்னணி நட்சத்திர நடிகையை நடிக்க வைக்க, பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
இன்னும் பெயரிடபடாத இந்த படத்தை  Infiniti Film Ventures-யை சேர்ந்த தயாரிப்பாளர்கள் கமல் போரா, ஜி தனஞ்செயன், B. பிரதீப் மற்றும் பங்கஜ் போரா ஆகியோர்  தயாரிக்கின்றனர். ‘கோடியில் ஒருவன்’ வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி நடிக்கும் ” கொலை” மற்றும் ” மழை பிடிக்காத மனிதன் ” திரைப்படத்திற்கும் இவர்கள் தான் தயாரிப்பாளர்கள் என்பது குறிப்பிடதக்கது.
Previous Post

Rajavamsam Movie Stills

Next Post

*RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) மூன்றாவது சிங்கிள் ‘உயிரே’ பாடல் வெளியீடு!:*

Next Post
*RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) மூன்றாவது சிங்கிள் ‘உயிரே’ பாடல் வெளியீடு!:*

*RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) மூன்றாவது சிங்கிள் 'உயிரே' பாடல் வெளியீடு!:*

Popular News

  • பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் நாகார்ஜுனாவின் ‘கிங் 100 – King 100’ திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் ‘கர்ணா – Karna’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி & RDC மீடியா வழங்கும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

November 12, 2026

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!

November 12, 2026

பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

November 12, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

November 12, 2026
ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

November 12, 2026

ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இயக்குநராக அறிமுகமாகும் ‘வன மடி’

November 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.