• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“கனெக்ட்” படத்தின் மூலம் தமிழ்  படங்கள், தமிழ் ரசிகர்கள் இடையே கனெக்ட் ஆவதில் பெருமை கொள்ளும், பிரபல பாலிவு நடிகர் அனுபம் கெர் !

by Tamil2daynews
November 27, 2021
in சினிமா செய்திகள்
0
“கனெக்ட்” படத்தின் மூலம் தமிழ்  படங்கள், தமிழ் ரசிகர்கள் இடையே கனெக்ட் ஆவதில் பெருமை கொள்ளும், பிரபல பாலிவு நடிகர் அனுபம் கெர் !
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
“கனெக்ட்” படத்தின் மூலம் தமிழ்  படங்கள், தமிழ் ரசிகர்கள் இடையே கனெக்ட் ஆவதில் பெருமை கொள்ளும், பிரபல பாலிவு நடிகர் அனுபம் கெர் !


இந்திய திரைத்துறையில்  மொழி மற்றும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு சில நடிகர்களே பெரும்புகழ் பெற்றுள்ளனர். அந்தவகையில் தன் திரைத்துறை பயணத்தில் பல ஆண்டுகளாக, பாலிவுட் நடிகர் அனுபம் கெர் இந்த உயரிய அந்தஸ்தை தன்னகத்தே  வைத்துக் கொண்டிருக்கிறார். பல தளங்களில் வித்தியாசமான பாத்திரங்களால் பல தசாப்தங்களாக தலைமுறை தலைமுறையாக அனைத்து  நடிகர்களாலும்  போற்றப்படும் அரிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.  உண்மையில், கோலிவுட்டில்  உள்ள பல திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, அவரைத் தங்கள் திரைப்படங்களில் இடம்பெறச் செய்வது என்பது ஒரு கனவாக இருந்தது, அவர்களில் வெகு சிலர் அற்புதமான கதாபாத்திரங்களை தந்து,  அவரைக் கவர்ந்து, தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்திருக்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் ‘கனெக்ட்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் மீண்டும் வந்திருக்கிறார் நடிகர் அனுபம் கெர். பாலிவுட்டின் பிரபல நடிகர் தனது தயாரிப்பில் பங்கு பெறுவதில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.  தனது கதாப்பாத்திரங்களை வெகு கவனமுடன் தேர்வு செய்து வரும் நடிகர் அனுபம் கெர், “கனெக்ட்” படத்தின் திரைக்கதையில் மிகவும் கவரப்பட்டு இப்படத்தில் பங்கேற்றிருக்கிறார்.

இயக்குநர் அஷ்வின் சரவணன் பெருமிதத்துடன் இது குறித்து கூறியதாவது…
“இந்தப் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தை அனுபம் கெர் ஏற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் அவரது திரைப்படங்களை பார்த்து வளர்ந்தோம், அவர் எங்கள் திரைப்படத்தில் இருப்பது உண்மையில் பெருமையாக இருக்கிறது. அவர் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் நட்புடன், இயல்பாக பழகினார்.  மிகவும் எளிமையுடன் அவரது பாத்திரம் பற்றி விவாதித்து  அதை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு, ஒரு தமிழ் திரைப்படத்தில் இணைந்ததற்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், தமிழ்த் திரையுலகினரின் தரம் மற்றும் பணியின் மீதான அர்ப்பணிப்பை பாராட்டி மகிழ்ந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ்ப் படங்கள் குறித்த அவரது கருத்து மேலும் வலுவடையும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் ” என்றார்.

இப்படத்திற்கு மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்கிறார், பிருத்வி சந்திரசேகர் இசையமைக்கிறார், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பைக் கையாளுகிறார். கலை இயக்கத்தை  ஸ்ரீராமன் & சிவசங்கர் செய்கின்றனர். சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் M (Sync Cinema)  ஆகியோர் ஒலி வடிவமைப்பு செய்கின்றனர். மேலும் தொழில்நுட்பக் குழுவில்  ராஜகிருஷ்ணன் M.R.  (ஒலி கலவை), “ரியல்” சதீஷ் (ஸ்டண்ட்), அனு வர்தன் & கவிதா J  (ஆடை வடிவமைப்பு), சிதம்பரம் (மேக்கப்), சினேகா மனோஜ், அஸ்தா பிசானி (பிராஸ்தடிக் கலைஞர்), Realworks Studios(VFX), வர்ஷா வரதராஜன் (நடிகர் தேர்வு), கோமளம் ரஞ்சித் (ஸ்டில்ஸ்), கபிலன் (பப்ளிசிட்டி டிசைனர்), சுரேஷ் சந்திரா – ரேகா D One (மக்கள் தொடர்பு), ரா. சிபி மாரப்பன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), குபேந்திரன் VK (அசோஷியேட் புரடியூசர் ), மயில்வாகனன் KS (இணைத் தயாரிப்பாளர்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

Previous Post

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் விருதுகள் அறிவிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு விருது!

Next Post

ராஜவம்சம் விமர்சனம்

Next Post
ராஜவம்சம் விமர்சனம்

ராஜவம்சம் விமர்சனம்

Popular News

  • டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக ஷாருக்கான் குறிப்பிடுகையில், ”நண்பர்களே மற்றும் தோழிகளே.. நல்ல நிகழ்ச்சிக்கு நன்றி” என தெரிவித்திருக்கிறார்.‌

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • யாஷின் ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic: A Fairy tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக வர்த்தகம் மிகப்பெரிய ஒப்பந்தத்தின் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.