• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வுமன் சென்ட்ரிக் படமான ‘உத்ரா’ டிசம்பர் 10 ல் வெளியாகிறது.

by Tamil2daynews
November 28, 2021
in சினிமா செய்திகள்
0
வுமன் சென்ட்ரிக் படமான ‘உத்ரா’ டிசம்பர் 10 ல் வெளியாகிறது.
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஃபேண்டஸி கதைகளுக்கு எப்போதும் ரசிர்களிடையே பெரும் வரவேற்பு உண்டு. அந்த வகையில் ரசிகர்களின் மனதை கவரும் விதத்தில் ஒரு புதிய படம் உருவாகியுள்ளது. படத்தின் பெயர் ‘உத்ரா’. இந்தப் படத்தை ரேகா மூவிஸ் எம்.சக்கரவர்த்தி தயாரித்துள்ளார். நவீன் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
இதில் உத்ராவாக ரக்‌ஷா நடிக்கிறார். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். அம்மன் வேடத்தில் ‘ கெளசல்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கதைச் சுருக்கம்:
வட்டப்பாறை என்ற கிராமத்திற்கு தங்கள் பாட திட்டத்துக்காக மூன்று கல்லூரி ஜோடிகள் செல்கிறார்கள். அந்த கிராமத்தில் மின்சாரம் இல்லை, சந்தோஷம் இல்லை, அவ்வளவு ஏன்?  திருமணம் நடந்தே பல வருடங்கள் ஆகிறது.  அப்படியே,  அந்த மண்ணில் மீறி திருமணம் நடந்தாலும்  அந்த புது மண தம்பதி அன்றிரவே  அரூபத்தால் மர்மமான முறையில் இறந்துவிடுவதாக நம்புகிறார்கள்.
இது மூட நம்பிக்கை என்று கல்லூரி மாணவர்கள் நிரூபிக்க தங்களுக்குள் ஒரு ஜோடியை தேர்வு செய்து திருமணம் செய்வது போல் நாடகமாடுகிறார்கள். அதன் மூலம் தங்களுக்கு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்று அந்த ஊர் மக்களை நம்ப வைக்கிறார்கள்.
அதை நம்பும் கிராம மக்கள் தங்கள் ஊர் ஜோடி ஒன்றுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணமான புதுமண தம்பதி அன்றிரவே  அரூபத்தால் கொலை செய்யப்படுகிறார்கள். கொலை எப்படி, ஏன் நடக்கிறது, கொலையாளி யார்?  என்பதை கல்லூரி மாணவர்கள்  கண்டுபிடிக்கிறார்கள்.
அப்போது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது.  அந்த கிராமத்தில்  அம்மனின் பக்தையாக வாழ்ந்த உத்ரா என்ற பெண்ணின் சாபத்தால்தான் தொடர் மரணங்கள் நிகழ்கிறது என தெரிய வருகிறது.
அந்த சாபத்தை நீக்க, உத்ராவையும் அவள் காதலனையும் கொன்ற வில்லன் மாசியை அந்த ஊர் எல்லைக்குள் கொண்டு வந்து சேர்க்கிறார்கள் கல்லூரி மாணவர்கள்.
ஆனால்,  எந்த அம்மனுக்காக, தன் வாழ்க்கையை அர்ப்பணித்தாளோ அந்த அம்மனே உத்ரா ஒர்  இறந்த ஆத்மா என தன் சன்னதிக்குள் அனுமதிக்க மறுக்கிறது. அதனால் அம்மனுக்கும் உத்ராவிற்கும் இடையே வாக்குவாதம் உண்டாகிறது.
அதை தொடர்ந்து அம்மன் ஆவி உருவமான உத்ராவை மாசியை கொல்ல அனுமதித்தாளா? கல்லூரி மாணவர்கள்  உதவியுடன் உத்ரா மாசியை பழிவாங்கினாளா? என்பதுதான் ‘உத்ரா’ படத்தின் விறுவிறு திரைக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்:
தயாரிப்பு : எம்.சக்கரவர்த்தி
திரைக்கதை, இயக்கம் : நவீன் கிருஷ்ணா
இசை : சாய்தேவ்
ஒளிப்பதிவு : ரமேஷ்
வசனம் : குமார்
எடிட்டிங் : எஸ்.பி.அஹமது
சண்டை : கில்லி சேகர்
நடனம் : ராதிகா
Previous Post

இந்தியாவிலேயே முதல்முறையாக *முதலமைச்சர்* படத்தின்  *பர்ஸ்ட்* *லுக்* போஸ்டர் *வெளியிட்டார்*

Next Post

Business Iconic Awards felicitated by Health Secretary Dr.Radha Krishanan, Ms.Namitha Marimuthu,Mr.Inigo Irudayaraj,Mr.Balaji Sadagopan,Kaushik, & Ms.Krithika Radhakrishnan.

Next Post
Business Iconic Awards felicitated by Health Secretary Dr.Radha Krishanan, Ms.Namitha Marimuthu,Mr.Inigo Irudayaraj,Mr.Balaji Sadagopan,Kaushik, & Ms.Krithika Radhakrishnan.

Business Iconic Awards felicitated by Health Secretary Dr.Radha Krishanan, Ms.Namitha Marimuthu,Mr.Inigo Irudayaraj,Mr.Balaji Sadagopan,Kaushik, & Ms.Krithika Radhakrishnan.

Popular News

  • பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் நாகார்ஜுனாவின் ‘கிங் 100 – King 100’ திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் ‘கர்ணா – Karna’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி & RDC மீடியா வழங்கும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

November 12, 2026

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!

November 12, 2026

பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

November 12, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

November 12, 2026
ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

November 12, 2026

ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இயக்குநராக அறிமுகமாகும் ‘வன மடி’

November 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.