• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஹிப் ஹாப் தமிழா நடிக்கும், அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம்  இயக்கத்தில்,  உருவாகியுள்ள   “அன்பறிவு” திரைப்படம், Disney Plus Hotstar தளத்தில் வெளியாகிறது !

by Tamil2daynews
December 16, 2021
in சினிமா செய்திகள்
0
ஹிப் ஹாப் தமிழா நடிக்கும், அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம்  இயக்கத்தில்,  உருவாகியுள்ள   “அன்பறிவு” திரைப்படம், Disney Plus Hotstar தளத்தில் வெளியாகிறது !
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
SATHYA JYOTHI FILMS  செந்தில் தியாகராஜன் & அர்ஜூன் தியாகராஜன்  வழங்கும், ஹிப் ஹாப் தமிழா நடிக்கும், அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம்  இயக்கத்தில்,  உருவாகியுள்ள   “அன்பறிவு” திரைப்படம், Disney Plus Hotstar தளத்தில் வெளியாகிறது !



திரையுலகில் சில கூட்டணிகள் ஒன்றாக இணைந்தாலே, படம் வெளிவருவதற்கு முன்னதாகவே ப்ளக்பஸ்டர் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டு விடும். “அன்பறிவு” திரைப்படம் அதற்கொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது எனலாம். தமிழின் பெருமை மிகு தயாரிப்பு நிறுவனம் Sathya Jyothi Films,  உலகம் முழுக்க கொண்டாடப்படும் ஓடிடி தளம் Disney Plus Hotstar, இன்றைய இளையதலைமுறையின் நாயகனாக வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி, என இவர்கள் குடும்பத்தில் அனைவரையும்  குதூகலப்படுத்தும் அம்சமாக இருந்து வருகிறார்கள். இந்த மூவர் கூட்டணியும் இணைந்து, தற்போது “அன்பறிவு” படம் மூலம் மிகச்சிறந்த பொழுதுபோக்கை அளிக்கவுள்ளார்கள். ஆம் “அன்பறிவு” திரைப்படம் Disney Plus Hotstar தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. இப்படத்தின் வெளியீட்டு தேதி பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Disney Plus Hotstar  ஏற்கனவே ஹிப் ஹாப் தமிழாவின் முந்தைய வெளியீடான ‘சிவகுமாரின் சபாதம்’ படத்தினை தங்கள் ஸ்ட்ரீமிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது, இப்படம் அனைத்து ரசிகர்களிடத்திலும் மிகப்பெரும் வரவேற்பை  பெற்று வருகிறது.

Sathya Jyothi Films  செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன்  கூறியதாவது…
அன்பறிவு திரைப்படத்திற்க்காக Disney Plus Hotstar உடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  ஒரு திரைப்படத்தை மிகச்சிறந்த முறையில் விளம்பரப்படுத்தி, பரந்த அளவில் மக்களிடம் கொண்டு செல்லும் அவர்களின் திறமை  வியக்கதக்கது, இணையற்றது. Disney Plus Hotstar ல்  எங்களின் ‘அன்பறிவு’ திரைப்படம் திரையிடப்படுவதில் நாங்கள் மிகுந்த  மகிழ்ச்சியடைகிறோம், Disney Plus  இத்திரைப்படத்தை உலகம் முழுவதும் பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும். இப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஒரு நடிகராகவும், இசையமைப்பாளராகவும் அற்புதமான பணியினை செய்துள்ளார். இயக்குனர் அஸ்வின் ராம் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக இப்படத்தை இயக்கியுள்ளார். பெரிய நட்சத்திர நடிகர்கள் அடங்கிய ஒரு குழுவை முதல் முறையாக கையாள்வது, ஒருவருக்கு எளிதான காரியம் அல்ல, ஆனால் அஸ்வின் ராம் இந்த திரைப்படத்தில் அப்பணியை விடாமுயற்சியுடன் அணுகி, அதை சாதித்துள்ளார். இந்த அழகான மற்றும்  குடும்ப பொழுதுபோக்கு சித்திரத்தை வழங்கியதற்காக கண்டிப்பாக அவர் கொண்டாடப்படுவார்.  நம் மண் சார்ந்த கலாச்சாரம், குடும்ப உணர்வுகள் மற்றும்  பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட  இந்தப் படத்தை குடும்ப பார்வையாளர்கள் நிச்சயம கொண்டாடுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

அன்பறிவு படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பது மட்டுமின்றி, இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்தும் உள்ளார்.  பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார், மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரதீப் E ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். அன்பறிவு படத்தை Sathya Jyothi Films சார்பாக செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கியுள்ளார்

Previous Post

வரிசி – விமர்சனம்

Next Post

Sanjay Leela Bhansali and Pen Studios to present Gangubai Kathiawadi to the world at the 72nd Berlin International Film festival!

Next Post
Sanjay Leela Bhansali and Pen Studios to present Gangubai Kathiawadi to the world at the 72nd Berlin International Film festival!

Sanjay Leela Bhansali and Pen Studios to present Gangubai Kathiawadi to the world at the 72nd Berlin International Film festival!

Popular News

  • பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்

    0 shares
    Share 0 Tweet 0
  • பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • என்னை நம்பாமலேயே என் படத்தில் நடித்தார்கள்: ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி பேச்சு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

June 29, 2026

ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

June 29, 2026

“நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்

June 29, 2026

என்னை நம்பாமலேயே என் படத்தில் நடித்தார்கள்: ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி பேச்சு!

June 29, 2026

பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்

June 29, 2026

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.