• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“உணர்வுகள் பொங்கும், வண்ணமயமான பொழுதுபோக்கு சித்திரமாக “வேலன்”திரைப்படம் மனதை கவரும் –  நடிகர் முகேன் !

by Tamil2daynews
December 31, 2021
in சினிமா செய்திகள்
0
“உணர்வுகள் பொங்கும், வண்ணமயமான பொழுதுபோக்கு சித்திரமாக “வேலன்”திரைப்படம் மனதை கவரும் –  நடிகர் முகேன் !
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“பாதையற்றதொரு வெற்றிப்பயணம்”  எனும் வழக்கு, நடிகர் முகேனுக்கு மிக கச்சிதமாக பொருந்தி போகிறது. ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் சுயாதீன இசைக்கலைஞர்கள் வெற்றிகரமான வாய்ப்புகளை பெறுகின்றனர், ஆனால் தமிழ் சினிமாவில் அது எப்போதும் அபூர்வமாகவே இருக்கிறது. முகேன் சுயாதீன இசைக்கலைஞராக தான் முதலில் அறிமுகமானார். அவரது ஆல்பம் பாடல்கள் அவருக்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று தந்தது. அதைத் தொடர்ந்து ‘பிக் பாஸ் ஷோ’ மூலம்  மக்களின் விருப்பத்திற்குரிய நபராக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். இப்போது, டிசம்பர் 31, 2021 அன்று திரைக்கு வரவிருக்கும் ‘வேலன்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் நாயகனாக அறிமுகமாக உள்ளார்.

இது குறித்து நடிகர் முகன் கூறும்போது…
ஒவ்வொரு நடிகரும் சினிமாவில் நுழைய வேண்டும் என்று தான்  கனவு காண்கிறார்கள், ஆனால் குடும்பம் போன்ற ஒரு குழுவுடன் பணிபுரியும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைப்பது அரிது. எனது முதல் திரைப்படத்தில் ஒரு அற்புதமான குழுவுடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றதற்காக நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன், குறிப்பாக இப்படத்தின் இயக்குநர் கவின், திறமையும் ஆர்வமும் கொண்டவர். என்னை கதாநாயகனாக தேர்வு செய்த தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் சாருக்கு நன்றி. திரையுலகில் பரந்த அனுபவமும், நீண்ட காலப் பயணமும் கொண்ட அவர், இந்த கதாப்பாத்திரத்திற்கு உச்ச நட்சத்திர நடிகர்கள் எவரை வேண்டுமானாலும், எளிதில் தேர்வு செய்திருக்கலாம், ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு நான் நியாயம் செய்வேன் என்று உணர்ந்து, என்னை ஒப்பந்தம் செய்தார். திரை வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் என்னைப் போன்ற ஒரு நடிகருக்கு, இப்படிப்பட்ட அங்கீகாரங்கள் கிடைப்பது பேரின்பம் அளிக்கிறது. ஷீட்டிங் முழுவதும் பிரபு சார் என்னிடம் காட்டிய அளவற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பெரும் அனுபவம் வாய்ந்த நடிகரான அவர், என்னுடன் மட்டுமல்லாது ஒட்டுமொத்த குழுவினருடனும் மிகவும் பணிவாகவும், இயல்பாகவும், எளிமையுடனும் இருந்தார். இத்தகைய குணங்கள் தான் அவரை உலகத் தமிழர்களின் அபிமான நட்சத்திரமாக மாற்றியுள்ளது. சூரி அண்ணா படப்பிடிப்பு முழுவதும் அனைவரிடமும் நேர்மறை எண்ணங்களை பரப்பினார், மேலும் அவரது நகைச்சுவை உணர்வு அபாரமாக இருந்தது. எங்கள் இருவருக்குமான காட்சிகள் நன்றாக வந்திருக்கிறது, பார்வையாளர்கள் அவற்றை தியேட்டர்களில் ரசிப்பதை காண ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். மீனாட்சி கோவிந்தராஜன் ஒரு திறமையான நடிகை மற்றும் அவருடன் பணிபுரிந்தது மிகசிறப்பான அனுபவமாக இருந்தது.

தன் மீதான ரசிகர்களின் அளவற்ற அன்பில், நெகிழ்ச்சியுடன் இருக்கும் முகேன், தமிழ்நாட்டு மக்களிடமிருந்து தனக்கு மிகப்பெரும் அன்பும், நேர்மறையான பாராட்டுக்களும் தொடர்ந்து கிடைத்து வருவதாக கூறி, அவர்களை மகிழ்விக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றார்.

Skyman Films International சார்பில் கலைமகன் முபாரக் தயாரித்துள்ள “வேலன்” படத்தை, இயக்குநர் கவின் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். முகேனுடன் சூரி இணை பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில்  இளைய திலகம் பிரபு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Previous Post

Maaran Movie Stills

Next Post

சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை திரைவிமர்சனம்…

Next Post
சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை திரைவிமர்சனம்…

சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை திரைவிமர்சனம்...

Popular News

  • “நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்

    0 shares
    Share 0 Tweet 0
  • பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • கவிப்பேரரசு வைரமுத்து வைத்த தலைப்பு “வேட்டைக்காரி”!

    0 shares
    Share 0 Tweet 0
  • பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

June 29, 2026

ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

June 29, 2026

“நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்

June 29, 2026

என்னை நம்பாமலேயே என் படத்தில் நடித்தார்கள்: ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி பேச்சு!

June 29, 2026

பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்

June 29, 2026

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.