• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பெரும் எதிர்பார்ப்புடன், அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்” திரைப்படம் – 11:11 Productions தயாரிப்பாளர்  Dr.பிரபு திலக் !

by Tamil2daynews
December 31, 2021
in சினிமா செய்திகள்
0
பெரும் எதிர்பார்ப்புடன், அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்” திரைப்படம் – 11:11 Productions தயாரிப்பாளர்  Dr.பிரபு திலக் !
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

11:11 Productions தயாரிப்பாளர் டாக்டர்.பிரபு திலக், வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற பல திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டதன் மூலம், தமிழ்த் திரையுலகில் குறுகிய காலத்தில், ஒரு மதிப்புமிகு இடத்தைப் பெற்றுள்ளார். தற்போது  சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த “தீர்ப்புகள் விற்கப்படும்” படத்தை இன்று (டிசம்பர் 31, 2021) தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்.

இது குறித்து டாக்டர் பிரபு திலக், 11:11 Productions கூறும்போது..,
எங்கள் தயாரிப்பு நிறுவனம் எப்போதும் சிறந்த உள்ளடக்கம் கொண் படங்களைத் தயாரித்து வெளியிடுவதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. சமூக அக்கறை கொண்ட கருவுடனும், அழுத்தமான திரைக்கதை மற்றும் நடிகர்களின் அட்டகாசமான நடிப்புடனும், உருவாகியுள்ள “தீர்ப்புகள் விற்கப்படும்” படத்தை வெளியிடுவதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன். குறிப்பாக, திரைப்படங்களில் சத்யராஜ் சாரின் சிறப்பான நடிப்பைப் பார்த்து வளர்ந்த நான், அவரது நடிப்பில் இப்படத்தை 11:11 Productions நிறுவனத்தின் சார்பில் வெளியிடுவது மகிழ்ச்சி.  இயக்குனர் தீரன், பார்வையாளர்கள் மனதில், ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் கதையை வடிவமைத்துள்ளார். ஒரு படத்தின் ரிலீஸுக்கு முன்பே அதன் முடிவைக் கணிப்பது வர்த்தக வட்டாரங்கள்தான். காட்சி துணுக்குகள் மற்றும் பாடல்களைப் பார்ப்பதன் மூலம் அவர்கள் படத்திற்கு  பார்வையாளர்கள் எத்தகைய வரவேற்பு  தருவார்கள் என்பதை எளிதில் கணித்து விடுவார்கள். “தீர்ப்புகள் விற்கப்படும்”  படத்திற்கு அவர்கள் முழு ஆதரவையும் தந்துள்ளது, படத்தின் வெற்றி மீது பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. அவர்களின் ஆதரவிற்கு பெரும் நன்றிகள்.   இந்த பெருமைமிகு திரைப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்க என்னை அனுமதித்த தயாரிப்பாளர் சி.ஆர்.சலீமுக்கு  நன்றி.

தீர்ப்புகள் விற்கப்படும்  படத்தை இயக்குநர் தீரன் எழுதி இயக்கியுள்ளார், Al-Tari Movies சார்பில் தயாரிப்பாளர் C.R.சலீம் தயாரித்துள்ளார். 11:11 Productions சார்பில் டாக்டர் பிரபு திலக் இப்படத்தை வெளியிடுகிறார். இப்படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்மிருதி வெங்கட் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தொழில்நுட்ப குழுவில் பிரசாத் SN  (பின்னணி இசை மற்றும் இசை), கருடவேகா அஞ்சி (ஒளிப்பதிவு), மோகன் ராஜன் & ஸ்ரீகாந்த் வரதன் (பாடல் வரிகள்), நௌஃபல் அப்துல்லா (எடிட்டர்), தினேஷ் சுப்பராயன் (ஸ்டண்ட்ஸ்), C.S.பாலச்சந்தர் (கலை), S.N.அஸ்ரஃப் (தயாரிப்பு நிர்வாகி), முகமது சுபேர் (ஆடை வடிவமைப்பாளர்), ப்ளெசன் (வடிவமைப்பு), மற்றும் ராமகிருஷ்ணா – Four Frames(ஒலி வடிவமைப்பு) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

Previous Post

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிலம்பரசன் TR நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார்.

Next Post

Thank you note from the desk of M/S. “ROWDY PICTURES”.

Next Post
Thank you note from the desk of M/S. “ROWDY PICTURES”.

Thank you note from the desk of M/S. "ROWDY PICTURES".

Popular News

  • பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் நாகார்ஜுனாவின் ‘கிங் 100 – King 100’ திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் ‘கர்ணா – Karna’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி & RDC மீடியா வழங்கும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

November 12, 2026

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!

November 12, 2026

பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

November 12, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

November 12, 2026
ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

November 12, 2026

ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இயக்குநராக அறிமுகமாகும் ‘வன மடி’

November 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.