• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நீண்ட நாட்களுக்கு பின் ஐங்கரனின் “நிறங்கள் மூன்று”

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும் திரைப்படம் “நிறங்கள் மூன்று”

by Tamil2daynews
January 2, 2022
in சினிமா செய்திகள்
0
நீண்ட நாட்களுக்கு பின்  ஐங்கரனின்  “நிறங்கள் மூன்று”
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிகர் அதர்வா முரளி, தயாரிப்பாளர்களின் விருப்ப நாயகனாகவும், பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிட்ட அளவிலான வெற்றியை தொடர்ந்து தருவதில், நிலையானவராகவும் வலம் வருகிறார். வணிக வாட்டாரங்கள் விரும்பும் வகையிலான அம்சங்கள் கொண்ட படங்களிலும், அதே நேரம் திரை ஆர்வலர்கள் விரும்பும் வகையிலான அழுத்தமான கதைகளை கொண்ட படங்களையும் சமன்படுத்தும் வகையில் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து, அனைவரையும் ஆச்சர்யபடுத்தி வருகிறார்.  புதிய வரவுகளான தமிழின் இளம் திரைப்பட  தயாரிப்பாளர்களுக்கு அவர் தரும்  ஒத்துழைப்பு,  அவருக்கு  திரைத்துறையில் மிக நல்ல பெயரை  பெற்று தந்துள்ளது. அந்தவகையில் அனைவரை ஈர்க்கும்படி, நடிகர் அதர்வா அடுத்ததாக, பிரபல இளம் இயக்குநர்  கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘நிறங்கள் மூன்று’ என்ற தலைப்பில்,  ஒரு தனித்துவமான கதைக்கருவில் உருவாகும்  திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் சரத்குமார் மற்றும் ரகுமானுடன், அதர்வா முரளி முதன்மை  வேடத்தில் நடிக்கிறார்.
karthick naren is to direct atharvaa in his next
படம் குறித்து Ayngaran International சார்பில் தயாரிப்பாளர் கருணாமூர்த்தி  கூறியதாவது…
“நிறங்கள் மூன்று” போன்றதொரு அழகான பாத்திரங்களும், மிகச்சிறந்த திரைக்கதையும் கொண்ட அட்டாகசமான  படத்தை தயாரிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். Ayngaran International நிறுவனம் 35 வருடத்தில் கால் பதிக்கிறது. இது எங்கள் நிறுவனத்தின் 25வது படைப்பாகும் எனவே பெருமைப்படுமளவிலான ஒரு அற்புதமான திரைப்படத்தை உருவாக்க நினைத்தேன். “நிறங்கள் மூன்று” மூலம் அது நிறைவேறியுள்ளது  கார்த்திக் நரேன் திரைக்கதையை விவரித்தபோது, இந்தக் கதையின் கதாபாத்திரங்களால் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.  அவர் கதை சொல்லிக்கொண்டிருகும்பொதே, இந்த பாத்திரங்களுக்கு யார் பொருத்தமானவர் என்று யோசிக்க ஆரம்பித்து, பல நடிகர்கள் பெயர் என் மனதில் ஓட ஆரம்பித்தது. நான் நினைத்த நடிகர்களின் பெயரையே கார்த்திக் நரேனும் சொன்னது மிகவும் ஆச்சரியமான தருணம். அதர்வா முரளி, சரத்குமார் மற்றும் ரகுமான் ஆகியோர் சிறந்த நடிகர்கள், அவர்கள் எப்போதும் அழுத்தமிகுந்த கதைகளிலும்,  வணிக ரீதியில் லாபம் தரும் படைப்புகளிலும் தங்கள் திறனை வெளிப்படுத்த முயற்சித்து வருகிறார்கள். இப்படத்தில் கார்த்திக் நரேன் தனது திறமையான இயக்கத்தால், இந்த கலைஞர்களின் திறமையை,  அடுத்த கட்டத்திற்கு எடுத்து  செல்வார். தனது முதல் அறிமுக திரைப்படமான ‘துருவங்கள் பதினாறு’ மூலம் மொத்த திரையுலகிலும் ஒரு புதிய டிரெண்டை உருவாக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் மீது எனக்கு எப்போதும் ஒரு பிரமிப்பு உண்டு. குறுகிய காலத்தில், திரைத்துறையில் பெரிய பெரிய நட்சத்திரங்களுடன் பணிபுரிந்து, அவர் தனது  மகத்தான திறமையை நிரூபித்துள்ளார். “நிறங்கள் மூன்று” தனது இயக்குநர் கார்த்திக் நரேனின் அந்தஸ்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என்று நான்  உறுதியாக நம்புகிறேன்.
Ayngaran International Logo - YouTube
“நிறங்கள் மூன்று”  தலைப்பின் அர்த்தம் குறித்து கேட்டபோது..
இப்போதே தலைப்பை பற்றி கூறுவது அத்தனை நன்றாக இருக்காது, ஆனால்  படத்தில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கும் என்பதற்கு நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இது ஒரு ஹைப்பர்லிங்க்-டிராமா-த்ரில்லர், மேலும் வலுவான பாத்திரங்கள், சுவாரஸ்ய திரைக்கதை,  எதிர்பாரா திருப்பங்களுடன் கார்த்திக் நரேனின் அழுத்தமான முத்திரை இப்படத்தில் இருக்கும்.நிறங்கள் மூன்று திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த  புதன் கிழமை 5.1.2022 இனிதே துவங்கியது. இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும்  2022 மார்ச் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. Ayngaran International 2500 க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களை உலகம் முழுக்க விநியோகம் செய்துள்ளது. மொத்த தமிழ் திரைத்துறையிலும் இது ஒரு மிகப்பெரும் சாதனையாகும்.தொழில்நுட்பக் குழுவில் ஜேக்ஸ் பிஜோய் (இசை), டிஜோ டாமி (ஒளிப்பதிவு), ஸ்ரீஜித் சாரங் (எடிட்டிங்-டிஐ), சிவசங்கர் (தயாரிப்பு வடிவமைப்பாளர்), டான் அசோக் (ஸ்டண்ட்ஸ்), அசோக் குமார் (ஆடை வடிவமைப்பாளர்), சச்சின் சுதாகரன்-Sync Cinema ஹரிஹரன் (ஒலி வடிவமைப்பு), சுரேஷ் சந்திரா-டைமண்ட் பாபு, ரேகா (மக்கள் தொடர்பு), சுந்தர்ராஜன் K (நிர்வாகத் தயாரிப்பாளர்), கார்த்திக் சீனிவாசன்-சுரேஷ் (ஸ்டில்ஸ்) மற்றும் கபிலன் செல்லையா (டிசைன்ஸ்) ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.
Previous Post

அடுத்த படத்திற்கு தயாரான சிவகார்த்திகேயன் – SK 20…

Next Post

‘ஓணான்’ திரை விமர்சனம்…

Next Post
‘ஓணான்’ திரை விமர்சனம்…

‘ஓணான்' திரை விமர்சனம்...

Popular News

  • பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் நாகார்ஜுனாவின் ‘கிங் 100 – King 100’ திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் ‘கர்ணா – Karna’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி & RDC மீடியா வழங்கும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

November 12, 2026

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!

November 12, 2026

பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

November 12, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

November 12, 2026
ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

November 12, 2026

ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இயக்குநராக அறிமுகமாகும் ‘வன மடி’

November 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.