• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“அன்பறிவு” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

by Tamil2daynews
January 4, 2022
in சினிமா செய்திகள்
0
“அன்பறிவு” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர்  ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 2022 ஆண்டின் முதல் வெளியீடான “அன்பறிவு” திரைப்படம் உலகளாவிய வெளியீடாக  ஜனவரி 7, 2022 முதல் Disney Plus Hotstar ப்ரத்யேகமாக வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி இன்று இயக்குநர் அஷ்வின் ராம், நடிகர் ஹிப் ஹாப் ஆதி ஆகியோர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்வில்..
இயக்குநர் அஷ்வின் ராம் பேசியதாவது…
இந்தபடம் என் முதல் படம் முழுக்க முழுக்க குடும்படமாக அவர்கள் கொண்டாடி பார்க்கும் படமாக இப்படத்தை எடுத்துள்ளோம். நான் மியூசிக் ஆல்பம் செய்த போது என்னுடன் இருந்த குழு தான் இந்தப்படத்திலும் பணியாற்றியுள்ளார்கள். படத்தில் ஒரு மிகப்பெரிய செய்தி இருக்கிறது அதை குறிப்பிடும் விதமாக தான், இந்த டைட்டிலை வைத்தோம். அன்பே அறிவு என்பது தான் அன்பறிவு என மாறியது. இது ஏற்கனவே வந்த கதை என எல்லோரும் சொல்வதை நாங்களும் கேட்டோம். இது அது போல் வழக்கமான கதை தான் ஆனால் அதைதாண்டி பல ஆச்சர்யங்களும் இப்படத்தில் இருக்கும். தியேட்டரில் படம் வரவில்லை என்ற வருத்தம் எனக்கும் இருக்கிறது ஆனால் படம் எல்லோரையும் போய் சேர வேண்டும் எனும்போது ஓடிடி தான் சரியான வாய்ப்பு என தோன்றியது.  
நடிகர் ஹிப் ஹாப் ஆதி பேசியதாவது….
இந்தப்படத்தில் காமெடியை தாண்டி பொழுதுபோக்கு அம்சங்கள் குடும்ப பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு இப்படம் இருக்கும். முதன் முறையாக இது எனக்கு பெரிய பட்ஜெட் படம். நிறைய நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். நெப்போலியன் சார், விதார்த் சார் முக்கிய பாத்திரங்கள் செய்துள்ளார்கள். ஒரு கிளாசிக் கதை அதை மீண்டும் குடும்பங்களோடு கொண்டாடும் படமாக உருவாக்கியுள்ளோம். ஒரு குடும்ப படத்தை மியூசிக்கலாக உருவாக்க நினைத்து தான்   இயக்குநர் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் மியூசிக்காக நிறைய உழைத்திருக்கிறோம். அஷ்வின் என்னைப்போலவே மியூசிக் இயக்குநராக இருந்து வந்தவர். 13 வருடங்கள் இந்த துறையில் இருக்கிறார். மிக அனுபவம் வாய்ந்த ஒரு இயக்குநர் போல் இப்படத்தை இயக்கியுள்ளார். அவருக்கு உங்கள் ஆதரவை தாருங்கள். எம்ஜிஆர் படங்கள் முதல் ஏகப்பட்ட க்ளாசிக் படங்கள் இந்த கதையில் வந்திருக்கிறது. அதையே தான் கொஞ்சம் வித்தியாசமாக முயற்சித்திருக்கிறோம். கமர்ஷியலை தாண்டி கிளாசிக்கான படைப்பாக இப்படம் இருக்கும். வேகமாக ஓடிட்டு இருக்கிற உலகத்துல, அறிவோட இருக்குறதுனா அன்போட இருக்கிறது தான் என்பதை தான் இப்படம் சொல்கிறது. விதார்த் சார் ஒரு அட்டகாசமான ரோல் செய்திருக்கிறார். வழக்காமான சினிமாவில் காட்சிகள் ஒவ்வொன்றையும் வித்தியாசமாக செய்திருக்கிறோம். இரட்டை வேடம் செய்தது சவலாக இருந்தது. நமக்கான கனவுகள் சாத்தியமாகும்போது கஷ்டப்படவும் தயாராக இருக்க வேண்டும். அந்த வகையில் திரைத்துறையில் இருப்பதே எனது கனவு தான் அதில் இரட்டை வேடம் நடிப்பது வரம் தான். 5 படங்களுக்கு செய்ய வேண்டிய வேலையை செய்ய வேண்டி இருந்தது. ஆனாலும் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.
‘அன்பறிவு’ திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் T.G. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தை G சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்துள்ளனர். இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கியுள்ள இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி முதன்மை வேடத்தில் நடிக்க, ஷிவானி ராஜசேகர் மற்றும் காஷ்மீரா நாயகிகளாக நடித்துள்ளனர். நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத் ஆகியோருடன் விதார்த், தீனா, அர்ஜை, சரத் ரவி, வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களில் மாதேஷ் மாணிக்கம் (ஒளிப்பதிவு), பிரதீப் E ராகவ் (எடிட்டிங்), எஸ்எஸ் மூர்த்தி (கலை), பிரதீப் தினேஷ் (ஸ்டன்ட்), பொன் பார்த்திபன் (உரையாடல்கள்), பூர்ணிமா ராமசாமி (ஆடை வடிவமைப்பாளர்), மற்றும் ஷெரீப். (நடன இயக்குனர்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
Previous Post

கதையின் நாயகனாக ப்ரஜின் நடிக்கும் படத்தின் தொடக்க விழா!

Next Post

ஜீவா நடிக்கும்  “வரலாறு முக்கியம்” படத்தின் ஃபர்ஸ்ட் லூக் வெளியிடு

Next Post
“அன்பறிவு” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

ஜீவா நடிக்கும்  “வரலாறு முக்கியம்” படத்தின் ஃபர்ஸ்ட் லூக் வெளியிடு

Popular News

  • பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் நாகார்ஜுனாவின் ‘கிங் 100 – King 100’ திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் ‘கர்ணா – Karna’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி & RDC மீடியா வழங்கும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

November 12, 2026

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!

November 12, 2026

பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

November 12, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

November 12, 2026
ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

November 12, 2026

ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இயக்குநராக அறிமுகமாகும் ‘வன மடி’

November 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.