• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இயக்குநர்களுக்கும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் டிஜிட்டல் தளங்கள் வாய்ப்பளிக்கின்றன.நடிகை நதியா பெருமிதம்

by Tamil2daynews
January 14, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பூவே பூச்சூட வா... அடியாத்தி.. எம்புட்டு வருஷமாச்சு.. அப்படியே இருக்காரே நதியா! | Actress Nadhiya interview - Tamil Filmibeat‘புத்தம் புது காலை விடியாதா..’ என்ற தொடர் மூலம் இயக்குநர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் டிஜிட்டல் தளங்கள் வாய்ப்பளிப்பதாக நடிகை நதியா தெரிவித்திருக்கிறார்.நமது சமூகத்தின் அங்கமாகத் திகழும் பல்வேறு கலாச்சாரங்களையும், பாரம்பரியங்களையும் பிரதிபலிக்கும் பல்வேறு வகையான கதைகளை சினிமா சித்தரித்து வருகிறது. இதற்கு அண்மைய உதாரணமாக அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் தொடராக ஐந்து அத்தியாயங்களைக் கொண்ட தமிழ் தொகுப்பாக வெளியாகும் ‘புத்தம் புது காலை விடியாதா..’ தொடர். இந்த தொடரில் காதல், நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கம் குறித்த பல்வேறு கதைகளை பார்வையாளர்கள் கண்டு ரசிக்க இயலும். இந்த தொகுப்பில் ஐந்து அத்தியாயங்கள் உள்ளன. அவற்றில் ‘மௌனமே பார்வையாய்’ என்ற அத்தியாயமும்  இடம்பெற்றிருக்கிறது. இதனை இயக்குநர் மதுமிதா இயக்கியிருக்கிறார். இதில் நடிகை நதியா மொய்து மற்றும் நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளனர்.இந்நிலையில் முன்னணி நடிகையும் திரை உலகில் மூத்த நடிகையுமான நதியா மொய்து, ஓ டி டி எனப்படும் டிஜிட்டல் தளங்களின் வருகை குறித்தும், அதன் பலன்கள் குறித்தும் தன்னுடைய எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.இது தொடர்பாக அவர் பேசுகையில்,” நடிகர்களை விட இயக்குநர்கள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்களுக்கு டிஜிட்டல் தளங்கள் முன்னுரிமை கொடுக்கின்றன. இதனால் அவர்கள் தங்களது கதைகளை நேர்த்தியாக சொல்ல இயலும். மேலும் ஓ டி டி உலக அளவிலான பார்வையாளர்களை வழங்குகிறது. நீங்கள் எந்த மொழியில் பார்க்கிறீர்கள் என்பது முக்கியமல்ல.. நிச்சயமாக நீங்கள் உங்களது தாய்மொழியில் படைப்புகளை பார்த்துக்கொண்டிருப்பது பெரியதொரு சவுகரியத்தை தருகிறது. ஆனால் குற வெவ்வேறு மாநில மக்கள், அவர்களின் கலாச்சாரங்கள்.. ஆகியவற்றை, உலகின் வேறு பகுதிகளில் வாழும் மக்கள் தங்களுடைய விசயங்களை எவ்வாறு பார்க்கப்படுகின்றன என்பதை இத்தகைய டிஜிட்டல் தள படைப்புகள் வெளிப்படுத்துகின்றன. இவை அனைத்தும் மக்கள் வித்தியாசமாக சிந்திக்க  உதவுகிறது.” என்றார்.

‘நோக்கேத தூரத்து கண்ணும் நாட்டு’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் 1985ஆம் ஆண்டில் நடிகை நதியா அறிமுகமானார். மோகன்லால் மற்றும் பத்மினியுடன் இணைந்து அவர் மலையாள திரைப்படப் பிரிவில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார். அதன் முதல் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரை உலகில் சிறந்த நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.’திரிஷ்யம் 2′ படத்திற்குப் பிறகு நடிகை நதியா மொய்து நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமேசான் ஒரிஜினல் தொடர், ‘புத்தம் புது காலை விடியாதா’, 2022 ஜனவரி 14ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் இந்தியாவிலும், உலக அளவில் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வெளியாகிறது.’புத்தம் புது காலை’ தொடரின் முதல் பாகத்தைத்தொடர்ந்து இரண்டாம் பாகமாக தயாராகியிருக்கும் ‘புத்தம் புது காலை விடியாதா..’துன்பங்களை எதிர்கொள்ளும் மன உறுதி மற்றும் மன உறுதியை கொண்டாடும் இதயத்தை தூண்டும் கதையுடன் பார்வையாளர்களை மகிழ்விக்க வருகிறது.

Previous Post

புத்தம் புது காலை விடியாதா’ வில் பக்கத்து வீட்டு பெண்ணாக நடிக்கும் லிஜோமோள் ஜோஸ்

Next Post

சின்னத்திரை ப்ளாக்பஸ்டர் வெற்றித் தொடரான “ரமணி Vs ரமணி” திரைத்தொடர் மீண்டும் புதிய சீசனாக வெளியாகிறது.

Next Post

சின்னத்திரை ப்ளாக்பஸ்டர் வெற்றித் தொடரான “ரமணி Vs ரமணி” திரைத்தொடர் மீண்டும் புதிய சீசனாக வெளியாகிறது.

Popular News

  • ஓவியர் வீர சந்தானம் அவர்களின் 3வது ஆண்டு நினைவு நாள்

    ஓவியர் வீர சந்தானம் அவர்களின் 3வது ஆண்டு நினைவு நாள்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் ரவி மரியா, ராதாரவி நடிக்கும் ‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • விஷால் அறிமுக இயக்குனராகவும்,நடிப்பில் சிகரமாகவும்.. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பெரும் மகுடங்களை சூடும் மகுடம் டீசர்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.