• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கொம்பு வச்ச சிங்கம்டா-திரை விமர்சனம்.

by Tamil2daynews
January 15, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இயக்குனர்,நடிகர் சசிகுமார் நடிப்பில் சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன் படங்களை  இயக்கிய எஸ் . ஆர். பிரபாகரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் “கொம்பு வச்ச சிங்கம்டா”.இதில் கொம்பு வச்ச சிங்கமாக சசிகுமார். அப்படித்தான் நினைக்கிறோம். மற்றபடி தலைப்புக்கான அர்த்தம் புரியவே இல்லை என்பதுதான் உண்மை.நட்பு, காதல், பழி வாங்கல், கொலை அதனுடன் சாதி அல்லது அரசியல்… இதுதான் சசிகுமார் பட பார்முலாவாக இருக்கும். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. இதில் சம்பந்தமில்லாமல் துருத்தலாக பெரியாரிஸமும் உள்ளே வந்திருக்கிறது.இது சாதிப்படமில்லை என்பதற்காக பெரியாரை வலுக்கட்டாயமாக உள்ளே கொண்டுவந்தாலும் படத்துக்குள் சாதியும், மதமும் தங்கள் கடமையைச் செவ்வனே செய்து விடுகின்றன.‘மண்ணு தின்ற நாளிலிருந்து… ‘ அதாவது குழந்தைப் பருவத்தில் இருந்து சசிகுமாரும் ஐந்து நண்பர்களும் நட்புடன் வாழ, தங்கள் கிராமத்துக்குள் சாதி, மதம் நுழையக் கூடாதென்று அவர்கள் பெரியாரிஸ்டுகளாகவும் கொள்கையுடன் இருக்க, ஆனால் அவர் மறுத்த அரசியல் சார்பாக மூவர் முவராகப் பிரிந்து தங்கள் ஊரில் உள்ளாட்சித் தேர்தலுக்கு வேலை செய்யப்போய் கட்சிகளுக்கான பகையில் ஒரு பக்கத்து நண்பன் கொல்லப்படுகிறார்.
இரண்டு நட்பு அணிகளும் எதிரிகளாக ஆகின்றனர். அது சாதிப்பிரச்சினையாகவும் ஆக பழிக்குப் பழியாக நண்பன் இறந்த அடுத்த வருட நினைவு நாளில் எதிர் நட்பு அணியில் இருக்கும் இன்னொரு நண்பனைக் கொல்கிறார்கள்.இரண்டு கொலைகள் தொடர்பாகவும் சசிகுமார் கைது செய்யப்படுகிறார். மூன்றாவது வருடம் யார் கொலையாகப் போகிறார் என்று ஊரே பம்மிப் பதுங்கிக் கிடக்க, ஊரும், உறவுகளும் நட்பையும், சாதியையும் சந்தேகப் பட, இதன் பின்னணியில் இருக்கும் வில்லனை சசிகுமார் கண்டுபிடிக்கும் கதை.வில்லன்களாக ஹரீஷ் பெராடி, தயாரிப்பாளர் இந்தர் குமார், அருள்தாஸ் ஆகியோர் அடையாளப் படுத்தப்பட, உண்மையான வில்லன் யார் என்பது சஸ்பென்ஸ். தன் வழக்கப்படியே சலூனிலிருந்து திரும்பியது போல வாரிய தலை கலையாமல், ட்ரிம் பண்ணிய தாடி குறையாமல் நீட்டாக வருகிறார் சசிகுமார். எப்படி வந்திருக்க வேண்டியவர் இப்படி ஆகி விட்டாரே என்று கவலையாகத்தான் இருக்கிறது. ஆனால், ஹீரோவுக்கு பெரிய ஹோப் இல்லாத இந்தக் கதையில் நடிக்க ஒத்துக்கொண்ட அவரைப் பாராட்டியாக வேண்டும்.
நாயகியாக மடோனா செபாஸ்டியன். மடோனா கதைக்குள் வந்து விட்டதாலேயே இந்த பாத்திரத்துக்கு அதிக வலு இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் ரொம்பவும் பாவம். ரொம்ப யூஷுவலான ஹீரோயினாகத்தான் இதில் அவர் வருகிறார்.சசிகுமாரின் நண்பர்களாக வரும் ஐவரில் சூரி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார் – அங்கங்கே சிரிக்கவும் வைக்கிறார். மற்ற நண்பர்களுக்கு எல்லாம் இரண்டு வரி டயலாக் இருந்தால் பெரிய விஷயம். அதுவும் ஐவரில் ஒருவராக வரும் அபி சரவணன் எல்லாக் காட்சிகளிலும் பேசாமல் வந்து போகிறார். கிளைமாக்சில் அவரை வைத்து ஒரு சின்ன ட்விஸ்ட் கொடுத்திருப்பதால் அதற்கு ‘ மௌனமாக ‘ ஒத்துக் கொண்டார் போலிருக்கிறது.சசிகுமாரின் தந்தையாக மறைந்த இயக்குனர் மகேந்திரன் நடித்திருக்கிறார். சொல்லிக் கொள்ளத்தக்க பவர்ஃபுல்லான வேடம் அவருக்கு.மற்றபடி திரை கொள்ளாத அளவுக்கு கிராமத்துக்  குடும்பங்களின் பாத்திரங்களை படைத்து அத்தனை பேரையும் வைத்து நியாயமாக இயக்கியிருக்கிறார் எஸ்.ஆர். பிரபாகரன். ஆனால் சஸ்பென்ஸ் மிகுந்த இந்த கதை எதை நோக்கி செல்கிறது என்பது கடைசிவரை சஸ்பென்ஸ் ஆகவே இருக்கிறது.
நட்பில் ஆரம்பிக்கும் கதை சம்பந்தமில்லாமல் ஈழப் போராளிகளின் தொடர்பில் வருகிறது. அந்த தொடர்பில் சாதி பேதமற்ற சூழல் கொண்ட கதையாக உருவெடுத்து, பகையான குடும்பங்களுக்குள் காதல் முளைக்க, காதலில் பிரச்சனை வரும் என்று பார்த்தால் அதில் வராமல் அரசியல் தொடர்புக்குள் நுழைந்து அதன் விளைவாக நட்புக்குள் விரிசல் விழுந்து, சாதி மதம் நுழைந்து ரெண்டு தலை விழுந்து எப்படி எப்படியோ பயணப்பட்டு முடிகிறது படம்.லட்சணமான நடிகை ஸ்ரீ பிரியங்காவுக்கு இதிலும் ஒரு துக்கடா வேடம்.சமுத்திரக்கனியும் சங்கிலி முருகனும் தலா ஒரு காட்சியில் வந்து தலை காட்டி விட்டுப் போயிருக்கிறார்கள்.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவில் பிரேம் பிசகாத நேர்த்தி தெரிய… திபு நினன் தாமஸ் இசையும் தேவையைப் பூர்த்தி செய்திருக்கிறது.படம்  பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியில் வரும்போது என்னமோ நமக்கு ஒரு குறை. படத்தின் இறுதிக் காட்சி அதாவது கிளைமாக்ஸ்ல  இயக்குனர் தவறு செய்துவிட்டாரோ என்று நம்ம தலையை சொரிந்து கொண்டே தான் வர வேண்டியது இருக்குது. எல்லா பிரச்சினையும் மறந்துட்டு இந்த காலகட்டத்தில் ஒரு படத்துக்கு போனா அந்த படத்துல பெரிய படமே பிரச்சினையா இருக்குது அப்பதான் எனக்கு புரியுது வாழ்க்கையே ஒரு பிரச்சனை தான் என்று.
Previous Post

தைப்பொங்கல் திருநாளில்  நடிகர் ஆர்.கே. சுரேஷின் புதிய  பட அறிவிப்பு..!

Next Post

சட்டக் கல்லூரி மாணவனின் வாழ்க்கை போராட்டத்தை விவரிக்கும் ” சிட்தி “.

Next Post

சட்டக் கல்லூரி மாணவனின் வாழ்க்கை போராட்டத்தை விவரிக்கும் " சிட்தி ".

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.