• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘அங்காடித் தெரு ‘ மகேஷ் நடிக்கும் ‘ஏவாள் ‘ ஒரு ரொமாண்டிக் சைக்கோ த்ரில்லர் படம்.

by Tamil2daynews
January 18, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அங்காடித்தெரு படத்தில் நாயகனாக நடித்த மகேஷ் பெயர் சொல்லும்படியான  நல்லதொரு  வாய்ப்புக்காகக் காத்திருந்தார்.அப்படி அவர் வித்தியாசமான பாத்திரம் ஏற்றிருக்கும் படம்தான் ஏவாள். மகேஷ் கதை நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.பிரதான நாயகியாக மோக்க்ஷா நடித்திருக்கிறார்.  இவர் அடிப்படையில் ஒரு பரதநாட்டியக் கலைஞர் பெங்காலியில் சில படங்களிலும் தெலுங்கில் இரண்டு படங்களிலும் நடித்தவர்.தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம்.இன்னொரு நாயகியாக கௌரி சர்மா நடித்திருக்கிறார். இவர் பாலிவுட்டில் சில படங்களில் தோன்றியவர். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.இந்திய முன்னணி மாடலான மதுமிதாவும் நடித்திருக்கிறார்.
மலையாளத்தில் பிருத்விராஜ் படம் உள்ளிட்ட  சில படங்களில் நடித்துள்ள அக்ஷரா ராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிரபல மாடல் பர்சிதா சின்காவும் இருக்கிறார். இவர் இப்போது இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.இன்னொரு மாடல் ஆரத்தி கிருஷ்ணாவும் நடித்துள்ளார். இவர்  மலையாளத்தில் 3, தமிழில் 2 என்று படங்களில் நடித்துள்ளவர்.இவர் இப்படத்தின் தயாரிப்பிலும் பங்கெடுத்துள்ளார்.இப்படி 5 கதாநாயகிகள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.நீளமான தாடி வைத்துள்ளவர்களுக்கான போட்டியில் உலக அளவில் இரண்டாம் இடமும் இந்திய அளவில் முதலிடமும் பெற்ற ப்ரவீன் பரமேஸ்வரர் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் ஏற்றுள்ளார்.இவர்களுடன் மிப்பு, பிரவீன்,மிதுன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தை இயக்கி இருப்பவர் ஜித்தேஷ் கருணாகரன் .RA1என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் இந்த ‘ஏவாள்’ படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.ஆரத்தி கிருஷ்ணா மற்றும் ஆர்.எல் ரவி தயாரித்துள்ளனர்.இணைத் தயாரிப்பு மது ஜி , மற்றும் எஸ் . எஸ்.பிரபு.திரைக்கதை ரஞ்சித் ராகவன், வசனம் பாடல்கள் முருகன் மந்திரம், ஒளிப்பதிவு கிருஷ்ணா பி.எஸ், இசை ரெஜிமோன், படத் தொகுப்பு அனந்து எஸ். விஜய்.
படத்தின் கதை என்ன?
தனது காதலியின் திடீர் மரணத்துக்குக் காரணம் முகம் மறைத்துத் திரியும் சைக்கோ  கொலைகாரன் என்ற உண்மை நாயகனுக்குத் தெரிய வருகிறது.அவனைப் பழி வாங்க புறப்படுகிறான் நாயகன்.இதற்கிடையில் பில்லி சூனியம் ஏவல் போன்ற அமானுஷ்ய சக்திகள் விளையாடுகின்றன.இதன் பின்னணியில் பரபரப்பாகச் செல்கிற படம் தான் ‘ஏவாள்’.படத்தின் திகில் காட்சிகள் நவீனத் தொழில்நுட்பத்தில் ஆங்கிலப்படங்களுக்கு நிகராக எடுக்கப்பட்டுள்ளன.இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, பாலக்காடு,குட்டிக்காணு, பீர்மேடு ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது .படத்தில் ஒரு வாழ்வியல் பயணம் சார்ந்த பாடல், டூயட் பாடல் என்று இரு பாடல்கள் உள்ளன .படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் மோதும் காட்சிகள் பரபரப்பை ஊட்டும். இந்திய சினிமாவின் முதல் சூனியக்காரி படமாக உருவாகியுள்ள ஏவாள் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லரை பொங்கல் தினமான இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும்.
Previous Post

இயக்குனர் பாலாஜி மோகன் மற்றும் trend loud இணைந்து வழங்கும் புதிய இனைய தொடர்

Next Post

சமீபத்திய காலத்தில் வெளியான சிறந்த தொகுப்புகளில் ஒன்று’ என்ற பாராட்டை பெற்றிருக்கும் அமேசான் ஒரிஜினல் தொடர் ‘புத்தம் புது காலை விடியாதா..’. அண்மையில் வெளியாகி வெற்றி பெற்றிருக்கும் இந்த தொடரைப் பற்றி, அந்த தொடரில் இடம்பெற்றிருக்கும் கதைகளுக்கான தூண்டுதல் மற்றும் முன்மாதிரி குறித்து அதனை இயக்கிய இயக்குநர்கள் பகிர்ந்துகொண்ட விவரங்கள் பின்வருமாறு…

Next Post

சமீபத்திய காலத்தில் வெளியான சிறந்த தொகுப்புகளில் ஒன்று' என்ற பாராட்டை பெற்றிருக்கும் அமேசான் ஒரிஜினல் தொடர் 'புத்தம் புது காலை விடியாதா..'. அண்மையில் வெளியாகி வெற்றி பெற்றிருக்கும் இந்த தொடரைப் பற்றி, அந்த தொடரில் இடம்பெற்றிருக்கும் கதைகளுக்கான தூண்டுதல் மற்றும் முன்மாதிரி குறித்து அதனை இயக்கிய இயக்குநர்கள் பகிர்ந்துகொண்ட விவரங்கள் பின்வருமாறு...

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.