• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘முதல் நீ முடிவும் நீ’’ திரைவிமர்சனம்.

by Tamil2daynews
January 22, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
எனைநோக்கிப் பாயும் தோட்டா,கிடாரி போன்ற  திரைப்படத்தின் இசையமைப்பாளர் தர்புகா சிவா.தனது  முதல் சினிமாவை இயக்கியிருக்கிறார். ‘முதல் நீ முடிவும் நீ’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சினிமா ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.90கால கட்டத்தின் பள்ளி நாள்களை இனிமையாக கோர்த்து சினிமாவாக்கியிருக்கிறார் தர்புகா சிவா.விநோத், அனு, கேத்தரின், சைனீஸ், ரிச்சர்ட் இவர்கள் எல்லோரும் இக்கதையில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள். ஒரே பள்ளியில் படிக்கும் இவர்களது பள்ளிநாள்கள் நமக்கு திரைவிருந்தாக கிடைக்கிறது. பொதுவாக இதுபோன்ற கதைகளில் புதுமையான காட்சிகள் இடம்பெறுவது கடினம். காரணம் கிட்டத்தட்ட எல்லோருடைய பள்ளி நாள்களிலும் நட்பும் காதலுமே நிறைந்து இருக்கும். முதல் நீ முடிவும் நீ அதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால் இதுபோல நாஸ்டாலஜி வகை கதைகளை அந்தந்த இயக்குநர்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அதன் வீச்சு முடிவாகிறது. அழகி ஒரு ரகம் என்றால் ஆட்டோகிராப் இன்னொரு ரகம்.
Mudhal Nee Mudivum Nee' review: Kishen Das does well in this rambling tale of highschool romance - The Hinduஇதில் முதல் நீ முடிவும் நீ எங்கு வேறு படுகிறது என்றால். மிகப் பெரிய சோக வயலினை இப்படம் வாசிக்கவில்லை. அதுவே இப்படத்தின் முதல் பலம் ஆறுதலும் கூட. டீ சீரிஸ் கேஸட்டில் பாடல் பதிவு செய்வது. சட்டையில் இங்க் தெளிப்பது. போன்ற எதார்த்த விசயங்களே காட்சிகளாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. அனு, விநோத் ஜோடி நல்ல தேர்வு. 90களின் அசல் முகமாக அனைவருமே இருக்கிறார்கள். முகம் சுளிக்க வைக்கும் வசனங்கள், காட்சிகள் இல்லாமல் மயிலிறகு போல மென்மையாக காட்சிகளை நகர்த்தியிருக்கிறார் தர்புகா சிவா.
இரண்டாம் பாதி நம்மை கொஞ்சம் சோதிக்கிறது. மாணவர் மறுகூடுகை காட்சிகளின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். ரிச்சர்ட், சைனீஸ் போன்ற பாத்திரங்கள் எல்லா வகுப்புகளிலும் உண்டு. அது தர்புகாவின் வகுப்பறையிலும் இருக்கிறது. தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்த முறையான பதிவையும் இப்படம் செய்திருக்கிறது. அதற்கென ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அதன் தர்க்க நியாயங்களை விவாதிப்பதில் இப்படம் இன்னுமே தனித்துவம் பெறுகிறது.இன்னிக்கு இருக்கிற இளைஞர்களுக்கு கூட இந்த படத்தை ரொம்பவே பிடிக்கும் அப்படி இயக்கி இருக்கிறார் இசையமைப்பாளர் இயக்குனர் தற்புகா  சிவா.பின்னணி இசை மனதை ரம்மியமாக வருடி செல்வதை யாராலும் தடுக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது.மொத்தத்தில் ottக்கு ஏற்ற இந்த படம் அருமை.
Previous Post

“மாஸ்டர்” பட புகழ் மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் புதிய படம் “கரா”..!

Next Post

கே.டி. குஞ்சுமோன் வழங்க ஜென்டில்மேன் – 2 .விரைவில் மிகப்பரம்மாண்டமாக ஆரம்பம்…

Next Post

கே.டி. குஞ்சுமோன் வழங்க ஜென்டில்மேன் - 2 .விரைவில் மிகப்பரம்மாண்டமாக ஆரம்பம்...

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.