• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இயக்குநர் ராம் படத்திற்காக நிவின்பாலியுடன் இணைந்த சூரி

by Tamil2daynews
February 2, 2022
in சினிமா செய்திகள்
0
இயக்குனர் மணிரத்னத்திற்கு தேசிய விருது அறிவிப்பு…
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
“மாநாடு” படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து  வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், புரொடக்சன் நம்பர் -7 ஆக சுரேஷ் காமாட்சி தயாரித்து , இயக்குநர் ராம் இயக்கி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில்  தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.’தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட பல உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்த இயக்குநர் ராம் இயக்கிவரும் இந்தப்படத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நிவின்பாலி கதாநாயகனாக நடித்து வருகிறார்.
“ரிச்சி” படத்தைத் தொடர்ந்து அவர் தமிழில் நேரடியாக நடிக்கும் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார். இந்தநிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் சூரி இணைந்துள்ளார்.யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கலை இயக்கத்தை உமேஷ் ஜே குமார் கவனிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தனுஷ்கோடியில் துவங்கி அதன்பிறகு கேரளாவில் வண்டிப்பெரியார், வாகமன் ஆகிய இடங்களிலும் நடைபெற்றது..
Soori joins the shooting of Nivin Pauly's film with director Ram | Tamil Movie News - Times of India
தற்போது சென்னையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் மிகப்பெரிய ரயில் செட் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் நிவின்பாலி, சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.”மாநாடு” படத்தில் பிரமிப்பை ஏற்படுத்திய கலை இயக்குநர் உமேஷ், இந்த படத்திற்காக  அழகிய ரயில் செட்டை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். கும்மிடிப் பூண்டி அருகே அமைந்துள்ள “ஏ ஆர் ஆர் ஃபிலிம் சிட்டி” படப்பிடிப்புத் தளத்திற்கு இயக்குநர் மிஷ்கின் இன்று எதிர்பாராத வருகை தந்து படக்குழுவினரை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். மேலும் இயக்குநர் ராம், நிவின்பாலி மற்றும் சூரி உள்ளிட்ட படக்குழுவினருடன் உரையாடி படப்பிடிப்புத் தளத்தை தனது வருகையால் கலகலப்பாக்கினார் இயக்குநர் மிஷ்கின். படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெற உள்ளது.
தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்
தயாரிப்பு ; வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் – சுரேஷ் காமாட்சி
இயக்கம் ; ராம்
இசை ; யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு ; ஏகாம்பரம்
கலை ; உமேஷ் ஜே குமார்
Tags: myskinnnivin paulyRamSoori
Previous Post

“பாகுபலி” பிரபாஸின் “ராதே ஷியாம்” ரிலீஸ் தேதி அறிவிப்பு…

Next Post

மூன்று மொழிகளில் தயாராகும் ‘மாஃபியா’

Next Post
இயக்குனர் மணிரத்னத்திற்கு தேசிய விருது அறிவிப்பு…

மூன்று மொழிகளில் தயாராகும் ‘மாஃபியா’

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • டி. கோபிசந்த், சங்கல்ப் ரெட்டி, ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், பவன் குமார் வழங்கும் வரலாற்றுப் படம் ‘பாரதவர்ஷா’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.